.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label வாழ்க்கை வரலாறு!. Show all posts
Showing posts with label வாழ்க்கை வரலாறு!. Show all posts

Thursday 14 November 2013

மனோஜ் குமார் - வாழ்க்கை வரலாறு (Biography)




மனோஜ் குமார் அவர்கள், இந்திய பாலிவுட் திரையுலகில் ஒரு சிறந்த நடிகர் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். அவர் நாட்டுப்பற்றை கருப்பொருளாக கொண்டு பல படங்கள் இயக்கி நடித்ததால், அவர் “திரு பாரத்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது மற்றும் திரைப்படத்துறையில் உயரிய விருதான “தேசிய திரைப்பட விருது” என மேலும் பல விருதுகளை பெற்று, இந்திய திரைப்படத்துறையில் இன்றளவும் சிறந்து விளங்கும் மனோஜ் குமாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 24,  1937

இடம்: அபோதாபாத், பிரிட்டிஷ் இந்தியா (தற்போது பாகிஸ்தானில் உள்ளது)

பணி: நடிகர், இயக்குனர்

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு


ஹரிகிஷான் கிரி கோசுவாமி என்ற இயற்பெயர் கொண்ட மனோஜ் குமார் அவர்கள், 1937  ஆம் ஆண்டு ஜூலை 24  ஆம் நாள், அப்போதைய இந்திய பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அபோதாபாத் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) என்ற இடத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


தன்னுடைய பத்து வயதில், புது தில்லிக்கு இடம் பெயர்ந்த அவர், புது தில்லியிலுள்ள “இந்து கல்லூரியில்” (தில்லி பல்கலைக்கழகம்) சேர்ந்து கல்விக் கற்று, இளங்கலைப் பட்டமும் பெற்றார். பிறகு, திரைப்படத்துறையில் ஏற்பட்ட அதிக ஈடுபாடு காரணமாக தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்கு பிறகு திரைப்படத்துறையில் நுழைய முடிவு செய்தார்.

திரைப்பட வாழ்க்கை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலிப் குமாரால், ஹரிகிஷான் கிரி கோசுவாமி என்ற அவருடைய பெயரை ‘மனோஜ் குமார்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “ஃபேஷன்” திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய மனோஜ் குமார் அவர்கள், 1960 ஆம் ஆண்டு வெளியான “காஞ்ச் கி குடியா” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து “பஞ்சாயத்” (1958), “ஹனிமூன்” (1960),  “பியா மிலன் கி ஆஸ்” மற்றும் “ரேஷ்மி ருமால் (1961)” “ஹரியாலி அவுர் ராஸ்தா (1962), வோ கோன் தி (1964), ஹிமாலய கி கோத் மெய்ன் (1965) போன்ற மறக்கமுடியாத திரைப்படங்களை வழங்கினார்.

நாட்டுப்பற்று மிக்க நாயகனாக

பாரத தேசத்தின் மீது அதிக பற்று கொண்டவராக விளங்கிய அவர், தேசப்பற்று கதாபத்திரங்களில், மிகவும் உணர்ச்சி பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினார். 1965 ஆம் ஆண்டு பகத்சிங் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட “ஷாகித்” என்ற திரைப்படத்தில் ஒரு நாட்டுப்பற்று மிக்க நாயகனாக அவர் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த இயக்கத்தில் வெளியான “உப்கார்” என்ற திரைப்படம் இவரின் தலைச்சிறந்த படைப்பாக கருதப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் கல்யாண்ஜி-ஆனந்த்ஜி இசையமைப்பில் மகேந்திர கபூரால் பாடிய “மேரேதேஷ் கி தர்த்தி” என்ற பாடல் பாடல் மிகவும் புகழ்பெற்றது. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியத் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதான “தேசிய விருதையும்” மற்றும் சிறந்த இயக்குனருக்கான “ஃபிலிம்பேர் விருதையும்’ பெற்றுத்தந்தது.

1970 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த திரைப்படங்கள்

1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பல வெற்றி படங்களை தந்த அவருக்கு, 1975 ல் வெளிவந்த “ரோட்டி கப்டா அவுர் மக்கான்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது மட்டுமல்லாமல், சிறந்த இயக்குனருக்காண இரண்டாவது “பிலிம்பேர் விருதையும்’ பெற்றுத்தந்தது. பிறகு, அதே ஆண்டில் வெளிவந்த “சன்யாசி” திரைப்படம், ஒரு மத பின்னணியிலான திரைக்கதையை கொண்டு அமைந்தது. ‘கிளார்க்’ (1989) மற்றும் ‘ஜெய் ஹிந்த்’ போன்ற திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும், 1998 ஆம் ஆண்டு ‘வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது’ வழங்கப்பட்டது.

பிற திரைப்படங்கள்

இதனை தொடர்ந்து, ‘பூரப் ஔர் பஷ்சிம்’ (1970),  ‘யாத்கர்’ (1970),  ‘பெஹ்சான்’ (1970), ‘மேரா நாம் ஜோக்கர்’ (1970), ‘பலிதான்’ (1971) , ‘ஷோர்’ (1972), ‘பே-இமான்’ (1972), ‘ரோட்டி கப்டா ஔர் மக்கான்’ (1974), ‘சன்யாசி’ (1975), ‘தஸ் நம்பரி’ (1976), ‘ஷீரடி கே சாய் பாபா’ (1977), ‘அமானத்’ (1977), ‘க்ரான்த்தி’ (1981), ‘கல்யுக் ஔர் இராமாயண்’ (1987), ‘சந்தோஷ்’ (1989), ‘கிளெர்க்’ (1989), ‘மைதான்-ஏ-ஜங்’ (1995)

அரசியல் வாழ்க்கை

மற்ற பாலிவுட் நட்சத்திரங்களைப் போல இவரும் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு’ நடைபெற்ற பொது தேர்தலில் “பாரதிய ஜனதா கட்சியுடன்” இணைந்து செயல்பட்டார்.

விருதுகளும் மரியாதைகளும்

•1968 ஆம் ஆண்டு “உப்கார்” என்ற திரைப்படத்திற்காக “இந்திய தேசிய விருதும்” நான்கு “ஃபிலிம்பேர் விருதும்” வழங்கப்பட்டது.

•1972 ஆம் ஆண்டு “பே-இமான்”, மற்றும் 1975 ஆம் ஆண்டு “ரோட்டி கபடா ஔர் மக்கான்” போன்ற திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

•1992 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

•1999 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

•2008 ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநில அரசால் “தேசிய கிஷோர்குமார் விருது” வழங்கப்பட்டது.

•2009 ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே அகாடமியிடம் இருந்து ‘பால்கே ரத்னா விருது’ வழங்கப்பட்டது.

•2010 ஆம் ஆண்டு மகராஷ்டிர மாநில அரசால் “தேசிய ராஜ்கபூர் விருது” வழங்கப்பட்டது.

மேலும் 1968ல் பி.எஃப்.ஜெ.ஏ விருதும், 2001ல் வாழ்நாள் சாதனையாளருக்கான கலாக்கார் விருதும், 2008ல் ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருதும், 2012ல் வாழ்நாள் சாதனையாளருக்கான அப்சரா விருதும், 2012ல் நாசிக் சர்வதேச திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது என மேலும் பல விருதுகளை பெற்ற மனோஜ் குமார் அவர்கள் இந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்று விளங்குகிறார்.

Wednesday 13 November 2013

பாரதிராஜா - வாழ்க்கை வரலாறு (Biography)

“இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று  மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைத் திரையில் கண்முன் காட்டியவர். அவரது ‘பதினாறு வயதினிலே’, ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் அற்புதப் படைப்புகளாக இன்றளவும் போற்றப்பட்டு வருகிறது. ‘பாக்கியராஜ்’, ‘ராதிகா’, ‘கார்த்திக்’, ‘ராதா’, ‘ரேவதி’, ‘நெப்போலியன்’, ‘ரஞ்சிதா’ போன்ற பல நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். கிராமம் மற்றும் கிராமத்து மண் சார்ந்த மனிதர்களும், அழுத்தமான நடிப்பும், இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகள்.

 Bharathiraja

திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் உயரிய விருதுதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும், ஆறு முறை “தேசிய விருதுகள்”, மூன்று முறை “தமிழ் நாடு மாநில விருதுகள்” மற்றும் “ஃபிலிம்ஃபேர் விருது”, “கலைமாமணி விருது” என மேலும் பல விருகளை வென்றுள்ளார். “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, தமிழ் திரையுலகின் “திருப்பு முனை” என வர்ணிக்கப்பட்ட பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 17, 1941

இடம்: அல்லி நகரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்

நாட்டுரிமை: இந்தியன்




பிறப்பு 

‘சின்னசாமி’ என்ற இயற்பெயர் கொண்ட பாரதிராஜா அவர்கள், 1941  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டதிலுள்ள “அல்லி நகரம்” என்ற இடத்தில் ‘பெரிய மாயத்தேவர்’ என்பவருக்கும், ‘கருத்தம்மாவிற்கும்’ ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள், என ஆறு பேர் இவருடன் பிறந்தவர்கள்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


பள்ளிப்படிப்பைத் தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த அவர், பள்ளியில் படிக்கும்போதே இலக்கியங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். பிறகு, நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் தன்னுடைய கவனத்தினை செலுத்திய அவர் ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகக் கதைகளை எழுதி, அதை அவ்வப்போது திருவிழாக்காலங்களில் மேடைகளிலும் அரங்கேற்றியுள்ளார்.

திரைப்படத்துறையில் அவரின் பயணம்


ஆரம்பக் காலத்தில் சுகாதார ஆய்வாளராக சிறிது காலம் பணிபுரிந்து வந்த அவர், பின்னர் சினிமாத் துறையின் மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில் ‘மேடை நாடகம்’, ‘வானொலி நிகழ்வுகள்’, ‘பெட்ரோல் பங்க் வேலை’ என பணிபுரிந்துக்கொண்டே சினிமாத் திரையில் நுழைய முயற்சிகள் மேற்க்கொண்ட அவர், இறுதியில் இயக்குனர் ‘பி. புல்லையாவிடம்’ உதவியாளராகத் திரைப்படத்துறையில் கால்பதித்தார். பின்னர் பிரபலக் கன்னட இயக்குனர் ‘புட்டண்ணா கனகலிடம்’ சேர்ந்து சினிமா நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

குறுகிய காலத்திலேயே தன்னுடைய முதல் படமான ‘16 வயதினிலே’ திரைப்படத்தை 1977 ஆம் ஆண்டு இயக்கினார். இதில் ‘கமல்ஹாசன்’, ‘ஸ்ரீதேவி’, ‘ரஜினிகாந்த்’ போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது எனலாம். கிராமத்துச் சூழலை மையமாகக் கொண்டு அமைந்த இக்கதையில், கமலஹாசன்’ அவர்கள், ‘சப்பாணி’ என்னும் பெயரில் ‘வெள்ளந்தியான’ குணச்சித்திரப் பாத்திரத்தில் மிக அற்புதமாகத் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இதற்கு முன் எத்தனையோ திரைப்படங்கள் கிராமத்துக் கதைகளில் வந்திருந்தாலும், உணர்வுப்பூர்வமான கிராமத்துச் சூழலை திரையில் கண்முன் காட்டியது அப்படம். இத்திரைப்படம் முழுவதுமே இயற்கையான வெளிப்புறச் சூழலிலேயே எடுக்கப்பட்டதால், தமிழ் திரைப்படத்துறையில் பெரும் மாற்றத்தினையே கொண்டுவந்தது. தன்னுடைய ஆளுமையை முதல் படத்திலேயே நிரூபித்துக் காட்டிய அவர், தொடர்ந்து ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’ போன்ற வெற்றிப்படங்களைத் தந்து “இயக்குனர் இமயம்” என அனைவராலும் போற்றப்பட்டார்.

அவர் இயக்கியத் திரைப்படங்கள்


‘பதினாறு வயதினிலே’ (1977), ‘சிகப்பு ரோஜாக்கள்’ (1978), ‘கிழக்கே போகும் ரயில்’ (1978), ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979), ‘நிழல்கள்’ (1980), ‘அலைகள் ஓய்வதில்லை’ (1981), ‘புதுமைப் பெண்’ (1983), ‘மண் வாசனை’ (1983), ‘ஒரு கைதியின் டைரி’ (1984), ‘முதல் மரியாதை’ (1985), ‘கடலோரக் கவிதைகள்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘ஆராதனா’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புது நெல்லு புது நாத்து’ (1991), ‘நாடோடி தென்றல்’ (1992), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1995) போன்ற திரைப்படங்கள் அவரின் புகழ்பெற்றப் படைப்புகளாகும்.

இல்லற வாழ்க்கை

‘சந்திர லீலாவதி’ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பாரதிராஜா அவர்களுக்கு, ‘மனோஜ்’ என்றொரு மகனும், ‘ஜனனி’ என்றொரு மகளும் பிறந்தனர்.

விருதுகளும், மரியாதைகளும்

•2004 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.

•1982-ல் ‘சீதாகொகா சிகே’, 1986-ல் ‘முதல் மரியாதை’, 1988-ல் ‘வேதம் புதிது’, 1995-ல் ‘கருத்தம்மா’, 1996-ல் ‘அந்தி மந்தாரை’, 2001-ல் ‘கடல் பூக்கள்’ போன்ற திரைப்படங்களுக்காக “தேசிய விருதை” வென்றுள்ளார்.

•1978 – ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர்’ விருது.

•1977-ல் ‘16 வயதினிலே’, 1979-ல் ‘புதிய வார்ப்புகள்’, 1981-ல் ‘அலைகள் ஓய்வதில்லை’, 2003-ல் ‘ஈர நிலம்’ போன்ற திரைப்படங்களுக்காக “தமிழக அரசின் மாநில விருது”.

•தமிழக அரசின் “கலைமாமணி” விருது.

•1981 – ‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து “நந்தி விருது”.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், சுமார் நாற்பதிற்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கிய பாரதிராஜா அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதை வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டிய கலைஞன். தன்னுடைய அற்புதப் படைப்புகளினால் தமிழ் சினிமாவை புதிய திசைக்குச் செலுத்தி, தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

Tuesday 12 November 2013

தனுஷ் (நடிகர்) - வாழ்க்கை வரலாறு!

 Actor-Dhanush

ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் மூலமாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர், நடிகர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் தமிழ்த் திரையுலகில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், ஒரு பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்து, இன்று ஹிந்தித் திரையுலகிலும் ‘ரஞ்சனா’ திரைப்படம் மூலமாகத் தனது வெற்றிக்கொடியை நட்டுள்ளார். தனது இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இவர், ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’, போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.


2011 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ வென்ற அவர், 2012ல் நடித்து வெளியான ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதையும்’ வென்றுள்ளார். ‘3’ படத்தில் அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் தனுஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜூலை 28, 1984

பிறப்பிடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

பணி: நடிகர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு


நடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தலைநகரமான சென்னையில், இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ஜூலை மாதம் 28 ஆம் தேதி, 1984 ஆம் ஆண்டில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

அவர், தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜான்’ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். தனது 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த அவரை, அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் அவர்கள், திரையுலகில் நுழையுமாறு வற்புறுத்தியதால், அவர் தனது படிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பினார்.

திரையுலகப் பிரவேசம்

தனது அண்ணனின் விருப்பத்தை ஏற்ற அவர், 2௦௦2 ஆம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலமாக இருவரும் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தனர். அவரது தந்தையான கஸ்தூரிராஜா அவர்கள் இயக்கிய அப்படத்தின் திரைக்கதையை செல்வராகவன் எழுதி, அவர் கதாநாயகனாக நடித்தார். அவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியான அப்படம், அமோக வெற்றிப் பெற்றதால், அடுத்த ஆண்டே அவர்கள் இருவரும் மீண்டும் ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தில் கைகோர்த்தனர். இப்படத்தை செல்வராகவன் அவர்கள் எழுதி, இயக்கினார். இப்படம் அபார வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்காகப் பரிந்துரையும் செய்யப்பட்டார்.

திரையுலக வாழ்க்கை

தனது ‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக சிறந்த நடிகரென்ற பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரது அற்புத நடிப்பைக் கண்ட இயக்குனர் வாசு அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘திருடா திருடி’ (2௦௦3) திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவர் தொடர்ந்து, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ (2௦௦4), ‘சுள்ளான்’ (2௦௦4), ‘ட்ரீம்ஸ்’ (2௦௦4), ‘தேவதையைக் கண்டேன்’ (2௦௦5), ‘அது ஒரு கனாக்காலம்’ (2௦௦5), ‘புதுப்பேட்டை’ (2006), ‘திருவிளையாடல் ஆரம்பம்’ (2006), ‘பரட்டை என்கிற அழகுசுந்தரம்’ (2007), ‘பொல்லாதவன்’ (2007), ‘யாரடி நீ மோகினி’ (2008), ‘படிக்காதவன்’ (2009), ‘குட்டி’ (2010), ‘உத்தமபுத்திரன்’ (2010), ‘ஆடுகளம்’ (2011), ‘சீடன்’ (2011), ‘மாப்பிள்ளை’ (2011), ‘வேங்கை’ (2011),       ‘மயக்கம் என்ன’ (2011), ‘3’ (2012) போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் தனுஷ்      

2013, அவர் ஆனந்த் எல். ராய் அவர்கள் இயக்கிய பாலிவுட் திரைப்படமான ‘ரஞ்சனா’ என்ற படத்தில் நடிகை சோனம் கபூருடன் இணைந்து நடித்தார். வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூல் சாதனைப் படைத்து, அமோக வெற்றிபெற்ற அப்படத்தை, ‘பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்’ என்று அறிவித்துள்ளது. மேலும், அவரை ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அற்புத நடிகரென்ற முத்திரையைப் பதிக்கச் செய்தது.

பிற சாதனைகள்

நடிகராகப் பெரிதும் சாதித்த அவர், தான் நடித்த ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி வந்தார். அவர் பாடிய அனைத்து பாடல்களும் பிரபலமாகி, மக்களிடையே வரவேற்பையும் பெற்றுத் தந்தது எனலாம். அவ்வாறு பாடியதே, அவரை சுயமாகப் பாடல்கள் எழுதவும் தூண்டியது. அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் அவர், ‘பிறைத் தேடும் இரவிலே’, ‘ஓட ஓட’ மற்றும் ‘காதல் என் காதல்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய அனைத்துப் பாடல்களுமே வெற்றிப் பெற, அவர் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியப் படமான ‘3’ (2012) படத்தில், அனைத்து பாடல்களையும் எழுதினார். அவர் எழுதிப் பாடிய பாடலான ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் ‘எதிர் நீச்சல்’ (2013) படத்தில் ‘நிஜமெல்லாம்’, ‘பூமி என்னை சுத்துதே’ மற்றும் ‘மரியான்’ (2013) படத்தில் ‘கடல் ராசா நான்’ போன்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட அவர், ‘3’ (2012) மற்றும் ‘எதிர் நீச்சல்’ (2013) போன்ற படங்களைத் தயாரித்து, ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றும் தன்னை நிரூபித்துள்ளார்.

இல்லற வாழ்க்கை

அவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, 2004 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.

விருதுகள்

•2008 – ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘ஆண்டின் சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ வழங்கப்பட்டது.

•2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது’ வென்றார்.

•2011 – ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ மற்றும் ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ பெற்றார்.

•2011 – ‘மயக்கம் என்ன’ படத்தின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை’, ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்காகப் பெற்றார்.

•2012 – ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருது’ வென்றார்.

•2012 – அவர் எழுதிப் பாடிய பாடலான ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி’ என்ற பாடல் ‘சி.என்.என் 2011ன் டாப் பாடலாகத்’ தேர்வு செய்யப்பட்டது.

Monday 11 November 2013

விஜயகாந்த் - வாழ்க்கை வரலாறு (Biography)

 Vijayakanth

புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்ப்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த அரசியல்வாதியும் ஆவார். 2005 ஆம் ஆண்டு ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்னும் கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நூறாவது நாள்’, ‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘ஊமைவிழிகள்’, ‘செந்தூரப் பூவே’, ‘சத்ரியன்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சின்ன கவுண்டர்’, ‘என்னாசை மச்சான்’, ‘உளவுத்துறை’, ‘வானத்தைப் போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களாகப் போற்றப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், ‘விருத்தாசலம்’ தொகுதியிலும், 2011 ஆம் ஆண்டு ‘ரிஷிவந்தியம்’ தொகுதியிலும் வெற்றிப்பெற்று, தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். ஒரு நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் நாட்டு அரசியலில் தே.மு.தி.க கட்சியை உருவாக்கி, குறுகிய காலத்திற்குள் மாபெரும் வெற்றிக்கண்ட விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா, அரசியல் பணிகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 25, 1952

இடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு 

‘விஜயராஜ்’ என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை  மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் ‘கே.என். அழகர்சிவாமி நாயிடுக்கும்’ ஆண்டாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய பள்ளிப்படிப்பை தேவகோட்டையிலுள்ள ‘தி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்’, மதுரையிலுள்ள ‘நாடார் உயர்நிலைப் பள்ளியிலும்’ பயின்றார். இளம் வயதிலேயே சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், படிப்பில் அவருக்கு நாட்டம் ஏற்படவில்லை. இதனால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு முடித்துக்கொண்டு, அப்பா பார்த்துவந்த அரிசி ஆலை நிர்வாகத்தை சிறிதுகாலம் கவனித்து வந்தார்.

திரைப்படத்துறையில் விஜயகாந்தின் பயணம்

1978 ஆம் ஆண்டு இயக்குனர் ‘காஜா’ அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த, ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில், முதன் முதலாக ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார். 1979-ல் ‘ஓம்சக்தி’ மற்றும் 1980-ல் ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்ற படங்களில் நடித்த அவருக்கு, 1981 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல், அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு அதிரடி நாயகனாக தன் பெயரை பதிவு செய்த அவர், ‘மனக்கணக்கு’, ‘சிவப்பு மாலை’, ‘நீதி பிழைத்தது’, ‘பார்வையின் மறுபக்கம்’, ‘ஆட்டோ ராஜா’, ‘சாட்சி’, ‘துரை கல்யாணம்’, ‘நாளை உனது நாள்’, ‘100வது நாள்’, ‘ஊமை விழிகள்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வந்தார்.

கேப்டன் எனப் பெயர்வரக் காரணம்

‘வைதேகி காத்திருந்தால்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாக்கா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த சிலத் திரைப்படங்கள்

‘இனிக்கும் இளமை’ (1978), ‘ஓம் சக்தி’ (1979), ‘சட்டம் ஒரு இருட்டறை’ (1981), ‘சாட்சி’ (1983), ‘100வது நாள்’ (1984), ‘சத்தியம் நீயே’ (1984), ‘தீர்ப்பு என் கையில்’ (1984), ‘வைதேகி காத்திருந்தால்’ (1984), ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே’ (1985), ‘நானே ராஜா நானே மந்திரி’ (1985), ‘அம்மன் கோயில் கிழக்காலே’ (1986), ‘ஊமைவிழிகள்’’ (1986), ‘கரிமேட்டுக் கருவாயன்’ (1986), ‘தழுவாத கைகள்’ (1986), ‘சட்டம் ஒரு விளையாட்டு’ (1987), ‘சிறை பறவை’ (1987), ‘செந்தூரப் பூவே’ (1988), ‘தென்பாண்டி சீமையிலே’ (1988), ‘பூந்தோட்ட காவல்காரன்’ (1988), ‘சத்ரியன்’ (1990), ‘சந்தனக் காற்று’ (1990), ‘புலன் விசாரணை’ (1990), ‘கேப்டன்  பிரபாகரன்’ (1991), ‘மாநகர காவல்’ (1991), ‘சின்ன கவுண்டர்’ (1992), ‘ஏழைஜாதி (1993), ‘கோயில் காளை’ (1993), ‘செந்தூரப் பாண்டி’ (1993), ‘ஆனஸ்ட் ராஜ்’ (1994), ‘என் ஆசை மச்சான்’ (1994), ‘சேதுபதி ஐபிஎஸ்’ (1994), ‘அலெக்ஸ்சாண்டர்’ (1996), ‘உளவுத்துறை’ (1998), ‘வானத்தைப்போல’ (2000), ‘ரமணா’ (2002), ‘சொக்கத்தங்கம்’ (2003) போன்றவை இவர் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்களாகும்.

இல்லற வாழ்க்கை

1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விஜயகாந்த் அவர்களுக்கு, விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

அரசியல் வாழ்க்கை

தமிழ் சினிமாவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, ‘புரட்சி கலைஞன்’ என பெயர்பெற்ற அவர், எம்ஜிஆரின் தீவிர ராசிகனாக மட்டுமல்லாமல், 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்னும் கட்சியை ஆரம்பித்து, அரசியலிலும் கால்பதிக்க துவங்கினார். 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இவரின் தே.மு.தி.க. கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட்டு, ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் கணிசமான வாக்குகளைப் பெற்று, தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. விருத்தாசலம் தொகுதியில் முதற்களம் கண்ட விஜயகாந்த் அவர்கள், தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 13,000 வாக்குகள் அதிகம் பெற்று, சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 2011 ஆம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து, களம் கண்ட இவருடைய கட்சி 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தி.மு.க கட்சியை பின்னுக்குத் தள்ளி பிரதான எதிர்கட்சி அந்தஸ்தினைப் பெற்றது. ஆனால் குறுகிய நாட்களுக்குள் அ.தி.மு.க-வுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியை முறித்துகொண்ட விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

Sunday 10 November 2013

அஜித் குமார் (நடிகர்) - வாழ்க்கை வரலாறு (Biography)

 Ajit

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள். தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

 குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார். மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜீத் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்த் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: மே 1, 1971

பிறப்பிடம்: ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா

பணி: நடிகர், கார் பந்தய வீரர்

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு


அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

என்னதான் பாலக்காடு வழி தந்தைக்கும், சிந்தி தாய்க்கும் மகனாக, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், அஜீத் குமார் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வளர்ந்தார். சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது பற்றற்றவராகவே காணப்பட்டார். இதனால், 1986ல் தனது உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்துத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

ஆரம்பகாலப் பணிகள்


தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்ட அவர், ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டிய அவர், தானாகவே அவற்றை ஓட்ட கற்றுக்கொண்டு, அதற்கான உரிமத்தையும் பெற்றார். பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். பைக் பந்தயத்தின் போது ஏற்பட்ட காயத்தினால், அவரைப் பல வணிக முகவர்கள் அச்சு ஊடகங்களின் விளம்பரங்களில் நடிக்க வைக்க அவரைத் தூண்டினர். இதனால், அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

திரையுலக வாழ்க்கை


1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், அப்படம் அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான விருதைப்’ பெற்றுத்தந்தது. அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ்த் திரையுலகில் அவரது முதல் படமாகும். இதைத் தொடர்ந்து, அவர், ‘பாசமலர்கள்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘ராஜாவின் பார்வையிலே’ (1995), ‘ஆசை’ (1995) போன்ற படங்களில் நடித்தார். இதில், 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்த் திரையுலகில், ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத் தந்தது.

தனது இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அஜீத் குமார் அவர்கள், தொடர்ந்து ‘வான்மதி’ (1996), ‘கல்லூரி வாசல்’ (1996), ‘மைனர் மாப்பிள்ளை’ (1996), ‘காதல் கோட்டை’ (1996), ‘நேசம்’ (1997), ‘ராசி’ (1997), ‘உல்லாசம்’ (1997), ‘பகைவன்’ (1997), ‘ரெட்டை ஜடை வயசு’ (1997), ‘காதல் மன்னன்’ (1998), ‘அவள் வருவாளா’ (1998), ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ (கௌரவ வேடம்) (1998), ‘உயிரோடு உயிராக’ (1998), ‘தொடரும்’ (1999), ‘உன்னை தேடி’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆனந்த பூங்காற்றே’ (1999), ‘நீ வருவாய் என’ (கௌரவ வேடம்) (1999), ‘அமர்க்களம்’ (1999), ‘முகவரி’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘உன்னை கொடு என்னை தருவேன்’ (2000), ‘தீனா’ (2001), ‘சிட்டிசன்’ (2001), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘அசோகா’ (கௌரவ வேடம்) (2001), ‘ரெட்’ (2002), ‘ராஜா’ (2002), ‘வில்லன்’ (2002), ‘என்னை தாலாட்ட வருவாளா’ (கௌரவ வேடம்) (2003), ‘ஆஞ்சநேயா’ (2003), ‘ஜனா’ (2004), ‘அட்டகாசம்’ (2004), ‘ஜீ’ (2005), ‘பரமசிவன்’ (2006), ‘திருப்பதி’ (2006), ‘வரலாறு’ (2006), ‘ஆழ்வார்’ (2007), ‘கிரீடம்’ (2007), ‘பில்லா 2007’ (2007), ‘ஏகன்’ (2008), ‘அசல்’ (2010), ‘மங்காத்தா’ (2011), ‘பில்லா 2’ (2012), ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ (2012) போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தைத் தமிழ்த் திரையுலகில் தக்கவைத்துக் கொண்டார்.


பந்தய வாழ்க்கை

தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இல்லற வாழ்க்கை

1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

விருதுகள்

•2௦௦1 – தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.

•2006 – தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.

•விஜய் விருதுகளை 2௦௦6ல் ‘வரலாறு’, 2011ல் மங்காத்தா படத்திற்காக இரண்டு முறையும் பெற்றார்.

•சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’, 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2௦௦1ல் ‘சிட்டிசன்’ படத்திற்காகவும் வென்றார்.

•சிறந்த தமிழ் நடிகருக்கான ‘சென்னை டைம்ஸ் விருதை’, ‘மங்காத்தா’ படத்திற்காக 2011 ஆம் ஆண்டில் பெற்றார்.

•ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999ல் ‘வாலி’ படத்திற்காகவும், 2002ல் ‘வில்லன்’ படத்திற்காகவும், 2006ல் ‘வரலாறு’ படத்திற்காகவும், 2௦௦7ல் ‘பில்லா’ படத்திற்காகவும் அவருக்கு வழங்கப்பட்டது.

காலவரிசை

1971: ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், சுப்ரமணியம் என்பவருக்கும், மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1986: உயர்நிலைக் கல்வியைத் தொடங்குவதற்கு முன்பே, தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

1991: தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமானார்.

1992: ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

1992: செல்வா இயக்கத்தில், ‘அமராவதி’ என்ற படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.

1999: ‘அமர்க்களம்’ படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார்.

2௦௦௦: இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

2௦௦1: தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற படத்திற்காக வென்றார்.

2003: ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.

2006: தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, ‘வரலாறு’ படத்திற்காக வென்றார்.

2008: ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

2010: ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்டார்.

Friday 8 November 2013

வடிவேலு - வாழ்க்கை வரலாறு!

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’, ‘வைபரேஷன் வடிவேலு’, ‘செட்டப் செல்லப்பா’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘கந்துவட்டி கருப்பு’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’, ‘ஸ்டையில் பாண்டி’ போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர்.


தமது  நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 10, 1960

பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர்

நாட்டுரிமை: இந்தியன்




பிறப்பு 

வைகைப் புயல் வடிவேலு அவர்கள், 1960  ஆம் ஆண்டு அக்டோபர் 10  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில், தந்தையார் நடராச பிள்ளைக்கும், தாயார் வைத்தீஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை


பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. ஆனால், நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன நாடகங்களை அவ்வப்பொழுது மேடையில் அரங்கேற்றுவது வழக்கம். அத்தகைய நாடகக் கதைகளிலும் சரி, மேடையிலும் சரி இவர்தான் நகைச்சுவை கதாநாயகன். ஒரு காலகட்டத்தில் இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. அந்த தருணத்தில் ராஜ்கிரண் அவர்கள், ஒருமுறை அவருடைய ஊருக்கு சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வைகைப் புயல் அவர்கள், ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.

தமிழ் சினிமாவில் வைகைப் புயலின் ஆரம்பம்
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

வெற்றிப் பயணம்

‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து  2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.

கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மலையில் நனையவைத்தார்.

கதாநாயகனாக

1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.

வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை பற்றி


கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது. குறிப்பாக கதாநாயகர்கள் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்வையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்னகவுண்டர்’, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம்’, ‘காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘பவித்ரா’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘பசும்பொன்’, ‘செல்லக்கண்ணு’, ‘சின்னமணி’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப்புருஷன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘அட்ராசக்க அட்ராசக்க’, ‘மாயா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘ரட்சகன்’, ‘இனியவளே’, ‘ஜாலி’, ‘காதலா காதலா’, ‘நிலவே முகம் காட்டு’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘மனைவிக்கு மரியாதை’, ‘வல்லரசு’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, ‘மகளிருக்காக’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பிரண்ட்ஸ்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘மாயி’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘லூட்டி’, ‘தவசி’, ‘காமராசு’, ‘அரசு’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘பகவதி’, ‘நைனா’, ‘வசீகரா’, ‘வின்னர்’, ‘ஏய்’, ‘கிரி’, ‘தாஸ்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘சந்திரமுகி’, ‘சச்சின்’, ‘சாணக்கியா’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘லண்டன்’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘திமிரு’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘தலை நகரம்’, ‘ரெண்டு’, ‘ஆர்யா’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘சீனா தானா 001’, ‘மருதமலை’, ‘போக்கிரி’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘குசேலன்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வில்லு’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘அழகர் மழை’, ‘ஆதவன்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தில்லாலங்கடி’, ‘நகரம்’, ‘காவலன்’, ‘மம்முட்டியன்’, ‘மறுபடியும் ஒரு காதல்’.

அவர் பாடிய சில பாடல்கள்


‘எட்டணா இருந்தா’ (எல்லாமே என் ராசாதான்), ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ (வெற்றி கொடுக் கட்டு), ‘ஊனம் ஊனம்’ (பொற்காலம்), ‘போடா போடா புண்ணாக்கு’ (என் ராசாவின் மனசிலே), ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ (காலம் மாறிபோச்சு), ‘ஆடிவா பாடி வா’ (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), ‘கட்டுனா அவளை கட்டுனும்டா’ (ஜெயசூர்யா), ‘விக்கலு விக்கலு’ (பகவதி), ‘ஏக் தோ தீனுடா’ (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), ‘மதுரக்கார விவேக்கு’ (லூட்டி), ‘நாலு அடி ஆறு’ (என் புருஷன் குழந்தை மாதிரி).

விருதுகள்:


•‘காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தவசி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘காத்தவராயன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.
•‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்பேர்’ விருது.
•‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.

அரசியல்

சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.

மீண்டும் சினிமாவில்

அவர் திரையுலகை விட்டு நீங்கி இருந்த இரண்டு ஆண்டு காலம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு அவர்கள், மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் நகைச்சுவை வசனங்கள்

‘ஐயா! நா ஒரு காமெடி பீசுங்க’, ‘இப்பவே கண்ண கட்டுதே’, ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’, ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’, ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’, ‘இது தெரியாம போச்சே’, ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’, ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’, ‘போவோம்! என்ன பண்ணிடுவாங்க’, ‘முடியல’, ‘என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே?’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!’, ‘ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க’, ‘க க க போ…’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’, ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, ‘என்னா வில்லத்தனம்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கா பேஷ்மட்டம் வீக்கு’, ‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’, ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’, ‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’, ‘ஒரு சிறிய புறாவுக்கு போறா! பெரிய அக்கபோராகவா இருக்கு’, ‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’, ‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’, ‘வட போச்சே’, ‘தம்பி டீ இன்னும் வரல’, ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே’, ‘அவ்வ்வ்வ்வ்’, ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’, ‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’, ‘ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க’, ‘ஒரு ஆணையும் புடுங்க வேணாம்’, ‘ரைட்டு விடு’, ‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’, எனப் பல நகைச்சுவை வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

என்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி.எஸ் பாலையா, வி. கே. ராமசாமி,  நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.

Thursday 7 November 2013

ஷாருக்கான் - வாழ்க்கை வரலாறு (Biography)

                                            Shahrukh-Khan

                          ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். 1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் தனது பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். இதனால் இவருக்கு, ‘தி வேர்ல்ட்’ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்’ என்ற பட்டத்தை, லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் 2011ல் வழங்கி கௌரவித்தது. 30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அவர், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’, சிறந்த குடிமகன் விருதும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளாரகவும் இருந்து வருகிறார். டிரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், மோஷன் பிக்சர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் அனிமேஷன் ஸ்டூடியோ ரெட் சில்லிஸ் VFXஇன் இணைத் தலைவராகவும் இருந்து வரும் அவர், இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளரும் ஆவார். ஹிந்தித் திரையுலகில் சாதாரணக் கலைஞனாக அடியெடுத்து வைத்து, உலகின் அனைத்து திரையுலகையுமே தன்னைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு முன்னேறிய ஷாருக்கான் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாலிவுட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 2 நவம்பர், 1965 (வயது 47)

பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா

பணி: நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு

ஷாருக்கான் அவர்கள், இந்தியாவின் தலைநகரான புது தில்லியில், நவம்பர் மாதம் 2 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில், முஸ்லீம் தம்பதியரான தாஜ் முகமது கான் மற்றும் லதீஃப் பாத்திமாவிற்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, இந்தியப் பிரிவினைக்கு முன்பே, பாக்கிஸ்தானில் உள்ள பெஷாவரிலிருந்து இந்தியா வந்து குடியேறிய ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

சிறு வயதிலிருந்தே, தனது பெற்றோரின் அரவணைப்பிலும், பாசப்பினைப்பிலும் வளர்ந்த அவர், டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பியா பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைக் கற்றார். பள்ளிக்காலங்களில் படிப்பு, விளையாட்டு, மற்றும் நடிப்பு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கிய அவர், பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவருக்கு வழங்கப்படும் வருடாந்திர விருதான ‘ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அவருக்குப் 15 வயதிருக்கும் போது, அவரது தந்தை புற்றுநோயால் இறந்ததால், அவர் தனது தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது பள்ளிப்படிப்பிற்குப் பின்னர், 1985ல் பின்னர் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்த அவர், பொருளாதாரத்தில் தனது இளநிலைப் பட்டத்தை 1988 ஆம் ஆண்டில் பெற்றார். இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன்ஸில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.

என்னதான் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், அவரது கவனம் முழுவதும் பாலிவுட்டில் நுழைவதில் தான் இருந்தது. இதன் காரணமாக, அவர் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து திரையுலக நுணுக்கங்களைப் பயின்றார். அவரது தாயார் வெகு நாட்காளாக நோய்வாய்ப்பட்டிருந்ததால், 1990ல் மரணமடைந்தார். இதனால், பெரிதும் பாதிக்கப்பட்ட அவர், அவரது தாயாரின் அறிவுரைப்படி, ‘கடும் முயற்சியால் மட்டுமே வெற்றியின் இலக்கிய அடைய முடியுமென்று’ எண்ணி அதை நோக்கிப் பயணித்தார்.

திரையுலகப் பிரவேசம்


தனது தாயாரின் மரணத்திற்கு முன்பே அவர், ‘தில் டரியா’, மற்றும் ‘ஃபௌஜி’ என்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். ‘ஃபௌஜி’ என்ற தொடரில் அவர் நடித்த கமாண்டோ கதாபாத்திரம் பெருமளவு வரவேற்பு பெற்றுத்தந்ததால், அவர் தொடர்ந்து ‘சர்கஸ்’ என்ற ஆங்கிலத் தொலைக்காட்சித் திரைப்படத்தில் நடித்தார். இதன் விளைவாக, ஹேமாமாலினி இயக்கும் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பட வாய்ப்பைப் பெற்ற அவர், மும்பைக்குப் பயணமானார்.

இல்லற வாழ்க்கை

திரையுலகில் கால்பதிக்க எண்ணிய ஷாருக்கான் அவர்கள், பாலிவுட்டின் தலைமை இடமாகத் திகழும் மும்பைக்கு 1991ல் சென்றார். அங்கு ஒரு விழாவில், கவுரி சிப்பர் என்பவரைக் கண்ட அவருக்கு, அவர் மீது காதல் மலர்ந்தது. அவர் ஒரு இந்து என்பதால், பல எதிர்ப்புகளையும் மீறி, அவர்கள் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, 1991 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்தனர். அவர்கள் இருவருக்கும் 1997ல் ஆரியன் என்ற மகனும், 2000ல் சுஹானா என்ற மகளும் பிறந்தனர். திருமணத்திற்கு முன்பு தனது மதமான இஸ்லாமியம் மீது அபார நம்பிக்கை கொண்ட அவர், திருமணத்திற்குப் பின், இரண்டு மதங்களையும் பின்பற்றுகிறார்.

திரையுலக வாழ்க்கை


ஷாருக்கான் அவர்கள், முதலில் நடித்தப் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா’ என்ற படம் 1992ல் முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவர் ‘சமத்கார்’ (1992), ‘இடியட்’ (1992), ‘ராஜூ பன் கயா ஜென்டில்மேன்’ (1992), ‘மாயா மேம்சாப்’ (1993), ‘ஜிங் அங்கிள்’ (1993), ‘பாசிகர்’ (1993), ‘கபி ஹா கபி நா’ (1993), ‘அஞ்சாம்’ (1993), ‘கரன் அர்ஜுன்’ (1993), ‘ஜமானா தீவானா’ (1993), ‘குட்டு’ (1995), ‘ஓ டார்லிங்! யெஹ் ஹை இந்தியா’ (1995), ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (1995), ‘ராம் ஜானே’ (1995), ‘த்ரிமூர்த்தி’ (1995), ‘இங்கிலீஷ் பாபு தேசி மேம்’ (1995), ‘சாஹத்’ (1996), ‘ஆர்மி’ (1996), ‘கோய்லா’ (1997), ‘எஸ் பாஸ்’ (1997), ‘பர்தேஷ்’ (1997), ‘தில் தோ பாகல் ஹை’ (1997), ‘டூப்ளிகேட்’ (1998), ‘தில் சே’ (1998), ‘குச் குச் ஹோத்தா ஹை’ (1998), ‘பாட்ஷா’ (1993), ‘ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி’ (2000), ‘ஜோஷ்’ (2000), ‘ஹே ராம்’ (2000), ‘மொஹப்பத்தேன்’ (2000), ‘ஒன் 2 கா 4’ (2001),  ‘அசோகா’ (2001), ‘கபி குஷி கபி கம்’ (2001), ‘ஹம தும்ஹாரே ஹை சனம்’ (2002), ‘தேவதாஸ்’ (2002), ‘சல்தே சல்தே’ (2003), ‘கல் ஹோ னா ஹோ’ (2003), ‘யே லம்ஹே ஜூடாய் கே’ (2004), ‘மெய்ன் ஹூ நா’ (2004), ‘வீர் ஜாரா’ (2004), ‘ஸ்வதேஷ்’ (2004), ‘பஹெளி’ (2005), ‘கபி அல்விடா னா கெஹ்னா’ (2006), ‘டான்: தி தி சேஸ் பிகின்ஸ் அகைன்’ (2006), ‘சக் தே! இந்தியா’ (2007), ‘ஓம் சாந்தி ஓம்’ (2007), ‘ரப் னே பனா தி ஜோடி’ (2008), ‘பில்லு பார்பர்’ (2009), ‘மை நேம் இஸ் கான்’ (2011), ‘ரா ஒன்’ (2011), ‘டான் 2: தி சேஸ் கண்டிநியூஸ்’ (2011), மற்றும் ‘ஜப் தக் ஹை ஜான்’ (2012) போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தயாரிப்பு நிறுவனராக ஷாருக்  

1999ல், ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை, ஜூஹி சாவ்லா, இயக்குனர் ஆசிஸ் மிர்சாவுடன் இணைந்து தொடங்கிய அவர், ஐந்து ஆண்டுகள் கழித்து, அதை ‘ரெட் சில்லீஸ் என்டெர்டைன்மென்ட் என்ற பெயரில் மாற்றி, தனது மனைவியைத் தயாரிப்பாளராக அறிவித்தார். அந்நிறுவனம், ‘ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி’, ‘அசோகா’, ‘சல்தே சல்தே’, ‘மெயின் ஹூ நா’, ‘பஹெளி’, ‘கால்’, ‘பில்லு’, ‘ஆல்வேஸ் கபி கபி’, ‘ரா ஒன்’ மற்றும் ‘டான் 2’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்தது. பின்னர், அனிமேஷன் ஸ்டுடியோவை அத்துடன் இணைத்து, ரெட் சில்லீஸ் VFX என்ற பெயரில் ‘சக் தே இந்தியா’, ஓம் ஷாந்தி ஓம்’, ‘தோஸ்தானா’, குர்பான்’ போன்ற படங்களையும் தயாரித்தது.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக ஷாருக்

2007ல், ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற நேரடி விளையாட்டு நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியை வழங்கினார்.

2008ல், ‘க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹை?” என்ற நிகழ்ச்சியத் தொகுத்து வழங்கினார்.

2011ல், ‘ஜோர் கா ஜட்கா: டோடல் வைப்அவுட்’என்ற அமெரிக்கன் விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

•1997 – சிறந்த இந்திய குடியுரிமை விருது

•2002 – பொழுதுபோக்கு துறையில் சிறந்து விளங்கியதால், ‘ராஜீவ் காந்தி விருது’ வழங்கப்பட்டது.

•2005 – இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதை, இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது.

•2009 – “தசாப்தத்தின் மிக சக்திவாய்ந்த பொழுதுபோக்கு கலைஞர்” என்ற IIFA-FICCI பிரேம்ஸ் விருதுகள் பெற்று பெருமைக்குரியவர்.

•30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அவர், 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார்.

ஷாருக்கான் அவர்கள், சிறந்த நடிகருக்கான ஆறு முறை ஐஐஎஃப்ஏ விருதுகள், எட்டு ஜீ சினி விருதுகள், பதிமூன்று ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள், மூன்று பாலிவுட் திரைப்பட விருதுகள், இரண்டு குளோபல் இந்திய திரைப்பட விருதுகள், ஆறு முறை சான்சூய் விருதுகள், நான்கு முறை பால்வுட் விருதுகள்,  மற்றும் ஆசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை செய்யப்பட்டார்.

காலவரிசை


1965: புது தில்லியில், நவம்பர் மாதம் 2 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில், முஸ்லீம் தம்பதியரான தாஜ் முகமது கான் மற்றும் லதீஃப் பாத்திமாவிற்கு மகனாகப் பிறந்தார்.

1985: ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்து, பொருளாதாரத்தில் தனது இளநிலைப் பட்டத்தை 1988 ஆம் ஆண்டில் பெற்றார்.

1990: வெகு நாட்காளாக நோய்வாய்ப்பட்டிருந்த அவரது தாயார், 1990ல் மரணமடைந்தார்.

1990: ஹேமாமாலினி இயக்கும் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

1991: பாலிவுட்டின் தலைமை இடமாகத் திகழும் மும்பைக்குச் சென்றார்.

1992: முதலில் நடித்தப் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா’ என்ற படம் 1992ல் முதலில் வெளியானது.

1991: கவுரி சிப்பர் என்ற இந்து பெண்ணைக் காதல் புரிந்து, பல எதிர்ப்புகளையும் மீறி, அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, 1991 ஆம் ஆண்டில் மணமுடித்தார்.

1999: ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை, ஜூஹி சாவ்லா, இயக்குனர் ஆசிஸ் மிர்சாவுடன் இணைந்து தொடங்கினார்.

2௦௦4: ட்ரீம்ஸ் அன்லிமிடெட் நிறுவனத்தை, ‘ரெட் சில்லீஸ் என்டெர்டைன்மென்ட் என்ற பெயரில் மாற்றி, தனது மனைவியைத் தயாரிப்பாளராக அறிவித்தார்.

2005: இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதை, இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது.

2007: ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற நேரடி விளையாட்டு நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியை வழங்கினார்.

Wednesday 6 November 2013

11–12–13 அன்று திருமணம் நடத்த திட்டமிடும் ஜோடிகள்!

உலகில் பல்வேறு அரிய நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கின்றன. ஆனால் அரிய நாள் என்பது அத்தி பூத்தாற்போன்று எப்போதாவதுதான் வரும். அந்த அரிய நாள் வருகிற டிசம்பர் 11–ந்தேதி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வரும் அந்த அபூர்வ நாளாக இது கருதப்படுகிறது. அதுதான் 11.12.13 என்றழைக்கப்படும் 11.12.2013 ஆகும்.

nov 6 - 11-12-2013-wedding-packages

இந்த நாளை அதிர்ஷ்ட நாளாக இளைஞர்களும், இளம் பெண்களும் கருதுகின்றனர். அதை தங்களின் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக விரும்புகின்றனர். எனவே, அன்று தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளில் 2,265 ஜோடிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவை சேர்ந்த தனியார் திருமண ஏற்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் வருகிற நவம்பர் 12–ந்தேதி அல்லது டிசம்பர் 11–ந்தேதி திருமணம் செய்ய பெரும்பாலான ஜோடிகள் ஆர்வமாக இருப்பது தெரிய வந்தது. இது கடந்த 2012–ம் ஆண்டில் அன்றைய கால கட்டத்தில் நடந்த திருமணத்தைவிட 72.2 சதவீதம் அதிகம் என கணக்கிட்டுள்ளது.

Wedding rush is on — for Tuesday 11/12/13

Tuesdays usually a big day for weddings — unless the date happens to be 11/12/13.
There’s going to be a rush to the altar next Tuesday, as an estimated 2,265 couples tie the knot on the next-to-last date of the century to feature three sequential numbers, according to David’s Bridal.

மகாத்மா காந்தியின் ராட்டை ஒரு கோடிக்கு ஏலம்!

சமீப காலமாகவே மகாத்மா காந்தியின் பழைய செருப்பு, கண்ணாடி, ரத்தக்கறை படிந்த மண் ஆகியவற்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனங்கள் ஏலத்தில் விட்டு கொழுத்த லாபத்தை சம்பாதித்துள்ளன. அந்த வகையில், வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் இன்று ஏலத்தில் விட்ட போது அது ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

nov 6 - gandhi-spinning

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தி தனது ஆடைகளுக்கான துணியை சொந்த ராட்டையில் தாமாகவே நூலாக திரித்து பின் துணியாக நெய்து, தைத்து உடுத்தி வந்தார்.வெள்ளையர் ஆட்சி காலத்தில் சிறைவாசத்தை அனுபவித்த போதெல்லாம் அவருக்கு துணையாக இருந்தவை புத்தகங்களும், நூல் நூற்பதற்காக பயன்படுத்திய ராட்டையும் மட்டும் தான்
காந்தியின் பழைய செருப்பு, கண்ணாடி, ரத்தக்கறை படிந்த மண் ஆகியவற்றை லண்டனில் உள்ள ஏல நிறுவனங்கள் ஏலத்தில் விட்டு கொழுத்த லாபத்தை சம்பாதித்துள்ளன.அவ்வகையில், வெள்ளையர் ஆட்சி காலத்தின் போது புனே நகரில் உள்ள எர்வாடா சிறையில் காந்தி அடைக்கப்பட்டிருந்த போது அவர் பயன்படுத்திய மடிக்கக்கூடிய ராட்டையை லண்டனில் உள்ள முல்லாக் ஏல நிறுவனம் இன்று ஏலத்தில் விட்டது.
இதற்கான குறைந்தபட்ச ஏலத்தொகை 60 ஆயிரம் பவுண்ட்கள் என முல்லாக் ஏல நிறுவனம் அறிவித்திருந்தது.ஆனால், எதிர்பார்த்ததை விட இருமடங்கு அதிகமாக அந்த ராட்டை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 1 கோடியே 8 லட்சத்து 99 ஆயிரத்து 878 ரூபாய்) ஏலம் போனது.
வெள்ளையர் ஆட்சியின்போது அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் மக்களின் நலனுக்காக பாடுபட்ட அமெரிக்க பாதிரியார் ரெவரெண்ட் ஃப்லாயிட் ஏ பஃபர் என்பவருக்கு இந்த ராட்டையை காந்தி அன்பளிப்பாக வழங்கி இருந்தார்.ராட்டையுடன் காந்தி தன் கைப்பட எழுதிய இறுதி உயில், கடிதங்கள், புகைப்படங்கள், புத்தகங்கள் என அவரது வாழ்க்கையோடு தொடர்புடைய 60 பழங்கால பொருட்களும் ஏலம் விடப்பட்டன.இதில், காந்தியின் இறுதி உயில் மட்டும் 20 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

Mahatma Gandhi’s charkha sold for Rs 1.1 crore at UK auction


***************************************


Mahatma Gandhi’s over eight-decade old ‘charkha’ — spinning wheel — one of his most prized possessions that he used in Yerwada Jail during the ‘Quit India Movement’, was Tuesday auctioned in the UK for a whopping 110,000 pounds (Rs. 1.1 crore), nearly double the expected price.

Read more at: http://indiatoday.intoday.in/story/mahatma-gandhi-gandhi-charkha-gandhi-charkha-auction-yerwada-jail/1/321803.html

Tuesday 5 November 2013

ஆர்யபட்டா டூ மங்கல்யான்!

செவ்வாய் கிரகத்துக்கு இந்திய பயணம் இன்று தொடங்குகிறது



 இந்தியா 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய ’மங்கல்யான்’ விண்கலம் பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து  செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் இந்தியர்கள்.


இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்திய முயற்சி இன்று  நிறைவேற உள்ளது. மங்கல்யான் என்ற விண்கலத்தை  ரூ.450 கோடி செலவில் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற தகவல்களை இந்த ராக்கெட் ஆராயும். இதற்காக இந்த விண்கலத்தில் பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்படுகிறது.  இதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று முன்தினம் காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் 44 நிமிடங்களில் 17 ஆயிரத்து 415 கிலோமீட்டர் பயணித்து, பூமியின் நீள் வட்டபாதை யில் நிலை நிறுத்தப்படும். டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு தாண்டி 12.42 மணிக்கு செவ்வாய் நோக்கி மங்கல்யான் விண்கலம் செலுத்தப்படும். 300 நாட்கள் பயணித்து 2014  செப்டம்பர் 24ம் தேதி  செவ்வாய் கிரகத்துக்கான சுற்று  பாதை யில் நிலை நிறுத்தப்படும்.

ஆர்யபட்டா டூ மங்கல்யான்

* 1975 ஏப்ரல் 19ம் தேதி ‘ஆர்யபட்டா’ என்ற முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்டது.

* இரண்டாவதாக பாஸ்கரா என்ற செயற்கை கோள்  1979 ஜூன் 7ம் தேதி மீண்டும் அங்கிருந்து ஏவப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட்  10ம் தேதி  ஆர்டிபி என்ற புதிய செயற்கைகோளை இந்திய மண்ணில் இருந்து ஏவியது.

* இதுவரை 67 செயற்கைகோளை இந்தியா ஏவியுள்ளது. இவற்றில் 25 ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்டன. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டிபி உட்பட 7 செயற்கைகோள்கள் இலக்கை எட்டவில்லை. 4 முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

* மாணவர்கள் தயாரித்த 4 செயற்கைகோளையும்,  ஜெர்மனி, கொரியா,  பெல்ஜியம், இந்தோனேசியா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பான், துருக்கி,  சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து நாடுகளுக்காக 35 செயற்கை கோள்களையும் இந்தியா ஏவியுள்ளது.

Monday 4 November 2013

பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்!


Photo: பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .

பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.

வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்

“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “

சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்
பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண
வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி
இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்

மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை

வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்
இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது

~பகல் நீட்டிப்பு~

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

~இரவு நீடிப்பு~

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

தமிழ் திங்கள் (மாதம்)
“““““““““““““““`
பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.

அவை:–

மேழம் (சித்திரை)
விடை (வைகாசி)
ஆடவை (ஆனி)
கடகம் (ஆடி)
மடங்கல் (ஆவணி)
கன்னி (புரட்டாசி)
துலாம் (ஐப்பசி)
நளி (கார்த்திகை)
சிலை (மார்கழி)
சுறவம் (தை)
கும்பம் (மாசி)
மீனம் (பங்குனி)

இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

தகவல் - இணையம்

 பண்டைத் தமிழனின் அரும் சாதனை காலக் கணிதம்


செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டுகூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர் .


பண்டைய வானவியலில் ஒருநாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர்... . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள்24*60=1440 ஆகும்.


வருடத்தின் சில நாட்களில் பகல்நீண்டு இருக்கும் சில நாட்களில்இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டுகூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலைமுதன் முதலில் உலகிற்கு கூறினான்.



சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்



“ சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி “


 
சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக( பகல்=30, இரவு =30 ) இருக்கும்

ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல்நீடிக்கும்
ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை , மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும்.


பாடலின் கடைசி வரி ” விடுபூ முடி ” மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது.



வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்

பகல் நீட்டிப்பை காண


வி – டு – பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளைஎடுத்துக்கொள்வோம் 


வி என்பது வைகாசி
 

டு என்பது ஆனி
 

பூ என்பது ஆடி
 

மு என்பது ஆவணி
 

டி என்பது புரட்டாசி
 

இது போலவே வி – டு – பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளைகொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம்
 
மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை

வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
 

வ = 1/4 நாழிகை
 

வா= 1/4 நாழிகை
 

வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பது ¾ நாழிகை பகல் நீடிக்கும் 3/4 
நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்
 

இது போல வி – டு – பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல்எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது
 

~பகல் நீட்டிப்பு~

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
 

ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
 

ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
 

~இரவு நீடிப்பு~

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்


மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
 

மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
 

பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

 

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60- நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறுபொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆறுபெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

தமிழ் திங்கள் (மாதம்)


“““““““““““““““`
 

பன்னிரண்டு ஓரை[ராசி]களின் பெயர்களே பனனிரண்டு திங்களின் பெயர்களாக
வழங்கி வந்தன.

அவை:–

மேழம் (சித்திரை)


விடை (வைகாசி)


ஆடவை (ஆனி)


கடகம் (ஆடி)


மடங்கல் (ஆவணி)
 

கன்னி (புரட்டாசி)
 

துலாம் (ஐப்பசி)
 

நளி (கார்த்திகை)
 

சிலை (மார்கழி)
 

சுறவம் (தை)
 

கும்பம் (மாசி)
 

மீனம் (பங்குனி)
 

இப்படியாக நாம் பின்பற்றிய தமிழ் திங்கள் காலபோக்கில் ஆட்சி மாற்றத்தால் வடமொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டன.

‘மனித-கணினி’ - சகுந்தலா தேவி!

Shakuntala Devi 

சகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 04, 1939

இடம்: பெங்களூர், கர்நாடகா

இறப்பு: ஏப்ரல் 21, 2013

பணி: கணிதமேதை, ஜோதிடர் 

நாட்டுரிமை: இந்தியா

பாலினம்: பெண்

பிறப்பு: 

இந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

சகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.

சகுந்தலா தேவியின் கணிதத் திறமை:

சகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.

சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:

தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.

‘புக் நம்பர்ஸ்’,

‘பெர்ஃபெக்ட் மர்டர்’,


‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,


‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,


‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’


போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.

இறப்பு

சகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.

‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top