.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label தமிழனின் வரலாறு! தமிழனின் கலைகள்!. Show all posts
Showing posts with label தமிழனின் வரலாறு! தமிழனின் கலைகள்!. Show all posts

Monday, 6 January 2014

ஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு

 ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்.அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம்....

Thursday, 12 December 2013

நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த இருவர் !

நான் சிறுவயது முதலே என் மனதில் ஏற்றிப்  போற்றும் நட்பிற்கு உதாரணமாக கூறப்படும்  இச்சங்ககால உண்மைக் கதையினை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமை அடைகிறேன். இவ்வுலகில் உண்மையான நட்பு இல்லை என்று நினைக்கும் சிலருக்காக இந்த கதையை இங்கே பிரசுரிக்கிறேன். இக்கதையில் வரும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதில்லை. ஆனாலும் தன் நண்பனின் நம்பிக்கை வீண்போகாமல் அவர்களின் நட்பின் பொருட்டு அவனோடு உயிர்துறந்த இந்நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் மயிர் கூச்செறிகிறது. அக்கதை இதோ...கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்  நட்பு     பாண்டிய நாட்டில்  உள்ளது  பிசிர்  என்ற  ஊர்.  ஆந்தையார்  என்பது  இவரது  இயற்பெயர்.  ஆதலால்  பிசிராந்தையார்  என்று  அழைக்கப்பெற்றார்.  இவர்  சோழ  மன்னன் கோப்பெருஞ்சோழன் ...

Monday, 2 December 2013

தமிழின் தனிச்சிறப்பு!

  பூப் பறித்தல்,  பூக் கிள்ளுதல்,  பூக் கொய்தல்என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும்,ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப் பூப்பறித்தல் என்று கூறுவர்.தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவைஎடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும்கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல்என்று கூறுவர...

Friday, 29 November 2013

தமிழர்களின் கற்பனை மிருகமான "யாளி".

தமிழர்களின் கற்பனை மிருகமான"யாளி".இவை தென்னிந்திய கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும். கோயில் கோபுரங்கள்,மண்டப தூண்களில்இதனை காணலாம். சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது. சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி "என்றும், ஆட்டுத்தலை கொண்டதை "மகர யாளி " என்றும்,யானை முகத்தை "யானை யாளி "என்றும் அழைக்கிறார்கள்....

Tuesday, 26 November 2013

தமிழர்களால் கைவிடப்பட்டவை!

அம்மி : குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.அண்டா : அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.அடுக்குப்பானை: ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.ஆட்டுக்கல் : வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.அங்குஸ்தான்: தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.ஒட்டியாணம்: பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top