எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஈகோ என்று சொல்ல முடியும்? ஆனாலும் எல்லோரும் ஈகோ பற்றி அடிக்கடி பேசிக் கொள்கிறோம். அவனை விடகுறைவாக படித்தவனிடம் பேசக்கூட மாட்டான். ரொம்ப ஈகோ பிடித்தவன்.செஞ்சது தப்பு ஆனா மன்னிப்பு கேக்க மாட்டாங்களாம். ரொம்பதான் ஈகோ. மனசுல பேசணும் நு ஆசை இருக்கு மச்சான். ஆனா கண்டுக்காத மாதிரியே போவா.ஈகோ பிடிச்ச பொண்ணுடா அது. இப்படி எத்தனையோ.
எது ஈகோ? மதிக்காமல் இருப்பாதா? மன்னிப்பு கேக்காமல் இருப்பதா? மரியாதை குறைவாக நடத்துவதா? ஆசையை ஒளித்து வைப்பதா? அல்லது இன்னும் ஏதோ ஒன்றா?
தவறான ஏதோ ஒன்று ஈகோவாக பார்க்க படுகின்றதா?
இல்லையே. ஈகோவிலும் நல்ல ஈகோ, கேட்ட ஈகோ என்று வகைப் படுத்தலாம். நீங்க இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூடப் பார்க்கல" என்று அவன் சொன்ன போது என் ஈகோ செத்துப் போச்சு`என்போம். என் தன்னம்பிக்கை மீது எனக்கு ஒரு ஈகோ உண்டு. அதை நான் மதிக்கிறேன். இப்படி நல்ல மாதிரி சொன்னால், அது நல்ல ஈகோவாகிறது.
ஈகோவுக்கு இணையான தமிழ் வார்த்தையை அப்புறம் கண்டு பிடிக்கலாம். ஈகோ பிடித்தவை என்ற பெயர் எடுக்க என்ன காரணமாக இருக்கிறது. தடுமாற்றம் இல்லாமல் சொல்ல முடியும் தயக்கம்தான். மன்னிப்பு கேட்பதில், பாராட்டுவதில், அழுவதில், அன்பு பாராட்டுவதில், அனுசரித்து போவதில், அக்கறையை வெளிபடுத்துவதில், இப்படி எல்லா வெளிப்பாடுகளிலும் காட்டப்படும் தயக்கம்தான் ஈகோவாகிறது.
சின்ன வயதில் நண்பர்களுக்குள் சண்டை வரும். ஐஸ்பாய் விளையாட்டில் காட்டிக் கொடுத்தது, குச்சி ஐஸ் தராதது, கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளாதது , நீ என் எனிமி என்று சொல்லி தள்ளி விட்டது, இப்படி ஏதேதோ காரணங்களுக்காக பேசாமல் இருப்பார்கள்.
இரண்டு நாட்களுக்கு பிறகு மற்ற நண்பர்கள் டேய் பழம் விடுடா, சாரி கேளுடா என்று அவர்களை சேர்த்து வைப்பார்கள். அவர்களும் அந்த தருணத்துக்காக காத்து இருந்தது போல்
ஓகே நாம இனிமே பிரெண்ட்ஸ் என்று சொல்லி பழகுவார்கள்.
இளம் பிராயத்தில் நம் எல்லோருக்கும் மன்னிக்கிற மனோபாவம் சேர்த்துக் கொள்கிற மனப்பக்குவமும் வெளிப்படியாக ஒப்புக் கொள்கிற தயக்கமின்மை இருக்கிறது அல்லவா.அது அந்த வயது சிறப்பம்சம்.
நான் என்பது ஒரு தனி அந்தஸ்து என்று நம்பாதவரை ஈகோ என்ற தலை வலி எல்லாம் இருப்பது இல்லை. அந்த எண்ணம், நான் என்ற உணர்வை என் படைப்பை, என் அறிவை, என் சொல்லை, என் ரசனைகளை, உலகிலேயே சிறந்தது என்று நம்ப வைக்கிறது. அது சரியா அல்லது தவறா என்று பொதுக் கேள்விக்கு வைக்க தயங்குகின்றோம்.
எந்த ஒரு விசயத்தையும் அதற்குரிய யாதார்தங்களோடு வெளிப்படுத்துகிற போது அது குறித்த அபிப்ராயங்களை ஏற்றுக் கொள்ள அல்லது புரிந்து கொள்ள மனம் இடம் கொடுக்கிறது.அதுதான் சரியானதும் கூட . அதுவே தயங்கும் போது அந்த விஷயம் குறித்த நான் நினைத்து இருப்பது மட்டுமே சரி என்று நம்ப ஆரம்பிக்கிறோம். அதற்க்கு மாறாக வேறு ஒன்று சொல்லப்பட்டால் நாம் ஏற்று கொள்வது இல்லை.
உங்கள் உணர்வைத் தவிர வேறு எதுவும் சிறந்தது இல்லை என்ற நினைப்பு மனதுக்குள் பதிவதன் பின்னணியில் ஒளிந்து இருப்பது "தயக்கம்". கேட்பதில் இருக்கும் தயக்கம், நமக்கு இது தெரியாது என்று வெளிப்படையாக சொலவதில் இருக்கும் தயக்கம், இப்படி நிறைய. இந்த தயக்கங்களை மறைக்க ஈகோ நல்ல போர்வையகிவிடுகிறது.
எனவே பிரெண்ட்ஸ் தயங்கி தயங்கி தயங்கி நின்றால் ஈகொவுக்குள் ஒளிந்து கொள்ள வேண்டும்,
இல்லாத ஒன்றுக்குள் ஒளிந்து கொள்வதை தவிர்ப்போம்.
ஈகோவை ஒழிப்போம்
வெளியே வாருங்கள் தென்றல் சுகமாக வீசுகின்றது.
0 comments: