.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 25 December 2013

வெற்றியின் ரகசியம்.....?


நன்றாக யோசித்து  ஒரு செயலில் இறங்கவேண்டும்.ஆனால் அப்படி இறங்கிய பிறகு சலனங்கள் கூடாது.பலன்களை எண்ணி கவலைப்  படக்கூடாது.

ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம். நமக்கு பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதை விட அவர்களைப் புறக்கணித்துப் பாருங்கள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.

உங்களுடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது உங்களுக்குப் பிடித்தவர் என்பதற்காக சிலருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.எல்லோருக்கும் சம அளவு வாய்ப்புக் கொடுங்கள்.

பள்ளி கல்லூரிக்குச் சென்று திரும்புவதோடு படிப்பு நின்று விடுவதில்லை. எப்போதும் மாணவராக இருங்கள்.புதுப் புது விசயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும்.வெற்றுகனவுகள் யாருக்கும் உபயோகப் படாது.

ஆயிரம் கட்டுரைகள் கதைகள் தத்துவ அலசல்கள் புத்தகங்கள் திரைப்படங்கள் தராத ஞானத்தை நன்கு வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும்.நாம் "முடியாது என்று நினைக்கிற விசயத்தைக் கண்ணெதிரே சாதித்து முடித்தவர்கள் நிச்சயம் இருப்பார்கள் தேடுங்கள்.

நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால் வாழ்நாள் முழுதும் ஏற்படுகிற குற்ற உணர்ச்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற உறுதியை கட்டுப்பாட்டை ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்தவர்களை அதிகாரத்தின் மூலம் ஜெயித்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.சர்வாதிகாரதனத்தை தவிர்த்து அனைவரையும் அன்பால் கட்டிபோடுங்கள்.

மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு விஷயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதையும் கேள்வி கேட்டு பழகுங்கள்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன் ஆடம்பரமும் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும். அனுமதிக்காதீர்கள். எப்போதும் சேவை மனப்பான்மை உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும்.

கேள்வி கேக்காம நான் சொன்னதை நீ செய் என்று சொன்னால் அவர்கள் கேள்வி கேட்பார்கள். இதை செய்தால் உனக்கும் எனக்கும் நமக்கும் இந்தச் சமூகத்துக்கும்  பலன்கள் உண்டு என்று ஒருவரிடம் புரியவைத்தால் கண்ணைக் கட்டிக் கொண்டு எங்கேயும் குதிக்க தயாராகி விடுவார்கள்.
உண்மை என்பது உங்களுடைய வாழ்க்கையின் ஒற்றை வரி விளக்கமாக இருக்கட்டும். கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும். உண்மை மட்டுமே ஜெயிக்கும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top