.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 22 December 2013

தோல்வி எதனால் ஏற்படுகிறது ?




1.முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது வாழ்க்கையும், தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.
2.இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.

3.மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை முயற்சிகளில் கிடைக்கும் படிப்பினைகளில் இருந்தே உங்களுடைய ஒரிஜினல் ஐடியாவைச் சரி செய்து கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே அது முழுமையாக, சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடைசியில் ஒன்றுமே செய்யாமல் நின்று விடுவதான செயலாற்ற தன்மைக்குக் கொண்டு விட்டு விடும்.
4.நான்காவதாக, கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் செயல்படுவது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நல்லது.

5.ஐந்தாவதாக, வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள். கற்றுக்கொள்வது நிற்கும் போது, வளர்ச்சியும் தேக்கமடைந்து போய் விடுகிறது. முக்கியமாக, தலைமைப் பண்புடன் கூடியவர்களைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ முயற்சி செய்யுங்கள். குழுவாக செயல்படும்போது, உங்களிடமில்லாத திறமைகளும் சேர்ந்து வெளிப்படும்.

6.ஆறாவதாக, நேற்றைய வெற்றிகளில், சாதனைகளில் தேக்கமடைந்து நின்று விடாதீர்கள்.

அப்படித் தேக்கமடைந்துவிடுவதில், காலம் செல்லச் செல்ல, வேகமும் குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வருமானால், பழையதை விட முடியாமலும், புதியதற்குத் தயாராக முடியாமலும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாக நேரிடலாம்.

8.ஏழாவதாக, ஏதோ ஒன்றைச் செய்யாமல் இருப்பது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறதென்றால் அதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மது, பெண்பித்து, பேராசை, நாணயக் குறைவு, எதிலும் காலதாமதம் இது போன்ற பலவீனங்கள், கவனத்தைத் திசை திருப்புபவைகளாக, இப்படி எது உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது?

அப்படித் தடையாக இருப்பதை மாற்றிக்  கொள்வதில் என்ன தயக்கம் என்பதைக் கவனியுங்கள். படுமுடிச்சுக்கு மேல் படுமுடிச்சாகப் போட்டுக் கொண்டிருப்பது எளிது. முடிச்சுக்களே இல்லாமல், எளிமையாக இருப்பதற்கு, ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எளிமையாக, ஒழுங்கோடு இருப்பவைகளே வெற்றிக்கு அஸ்திவாரம்.

8.எட்டாவதாக, நீங்கள் உருவாக்கும் குழுவில் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்களாக ஏற்கெனெவே இருப்பவர்களாகவோ, அல்லது நண்பர்களாக ஆகப் போகிறவர்களாகவோ இருக்கட்டும்! வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும்! வேலைக்காரர்கள் அல்ல.

சுருக்கமாக, குழுவை உருவாக்குங்கள், ! குழுவில் இருப்பவர்களை உங்களுடைய நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

9.ஒன்பதாக, உற்றார் உறைக்கச் சொல்வார்கள் ஊரார் சிரிக்கச் சொல்வார்கள் என்ற சொலவடையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சோதனையான தருணங்களில், கடுமையாகப் பேசினாலும், சோதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் இருக்கும் ஒருவர் அல்லது பலருடைய துணையைக் கைக்கொள்ளுங்கள்.

10.பத்தாவதாக, "அச்சமே கீழ்களது ஆச்சாரம்" என்று சமுதாய வீதி நாவலில் எழுத்தாளர் நா.பார்த்த சாரதி சொல்வது போல, தோல்வியைக் குறித்த பயமே, அடுத்தடுத்த முட்டாள் தனங்களுக்கு அடிகோலுவதாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தான் தரும்.நமக்குத் தெரிந்த அளவோடு நிறுத்திக் கொண்டாலோ, சராசரியாக அல்லது அதற்கும் கீழே இருந்து விடுவதில் ஒரு சௌகரியத்தைக் கற்பித்துக் கொள்வதிலோ நின்று விடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்விகளை எதிர் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வெற்றியையும் நம்மால் பெற முடியும்!

ஆமாம்! கொஞ்சம் கூடப் பொய்யில்லை, உண்மையாகவே வெற்றியை நம்மால் பெற முடியும்!

இப்படி, கொஞ்சம் குறிப்பிட்டும், பொதுமைப் படுத்தியும் சில கருத்துக்கள் தன் . இது தன் தோல்விக்கு வழியாக இருக்கும். நான் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய அனுபவங்களில் இருந்து நீங்கள் இவற்றில் எவை எவை பொருத்தமாக இருக்கும், அல்லது பொருந்தாது என்றோ, மாற்றுக் கருத்தாக எதை முன்வைக்கிறீர்கள், வைக்கப் போகிறீர்கள்  என்பது தான்!

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top