மனிதனின் மனதை ஈர்க்கும் அதிசயங்கள் பல அவற்றில் வணணத்துப்பூச்சிக்கு சிறப்பிடம் உண்டு. பல வண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் பார்பவர்களை பரவசப்படுத்திவிடும்.
பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன.
ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன.
சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) பறந்து செல்கின்றன.
அந்த அழகு பட்டாம்பூசியைப் பற்றிய ஒரு கூடுதல் தகவல் இது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு காதுகள் கிடையாது என்றோ, அதன் உறிஞ்சுகுழல் மூலம் உணர்ந்து கொள்ளும் என்றோ நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு.
இங்லாந்தில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழக குழு ஒன்று இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அவர்கள் புளுமார்போ இன வண்ணத்துப்பூச்சிகளில் காதுகள் இருக்கும் ரகசியத்தை கண்டுபிடித்தனர். அதன் வண்ணமயமான இறகுகள் உடலோடு இணையும் பகுதியில் இந்தகாதுகள் அமைந்துள்ளன. இது சிறிய புள்ளி போன்ற சற்று மேலேழும்பிய குமிழ் போல காணப்படும். சாயம்போன மஞ்சள் நிறத்தில் இது அமைந்திருக்கும்.
இந்தபகுதியே வண்ணத்துப்பூச்சிகள் ஒலியை கேட்கத் துணைபுரிகிறது. 1000 முதல் 5 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரையிலான ஒலியை கேட்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. (மனிதனின் ஒலி உணரும் திறன் 20 மிதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் அளவாகும். நமது பேட்டின் அதிர்வு 100 முதல் 4 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.)
அதிர்வுகளை காதுகளின் மேற்புற செல்களே அறிந்து கொள்கின்றன. மற்ற ஒலி அலைகளை உட்புற செல்கள் நரம்புகள் கடத்தும் அதிர்வுகளாக மாற்ரி நரம்பு செல்கல் மூலம் அறிந்து கொள்கின்றன.
பறவைகளின் பாட்டுக்களை கேட்கவும், தன்னை நெருங்கிவரும் ஆபத்துக்களை அறியவும், திசைமாற்றி பறக்கவேண்டிய நேரத்திலும் இந்த உறுப்பை அதிகமாக பயன்படுத்துகின்றன.
1912 வரை வண்ணத்துப்பூச்சிகளுக்கு காது கேக்காது என்றே நம்பப்பட்டது. அதன் பிறகு சிலவகை பட்டாம்பூச்சிகள் ஒலி அதிர்வை அறிந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.
வண்ணத்துப்பூச்சிகளை கண்டு ரசியுங்கள்.
0 comments: