என்னென்ன தேவை?
முருங்கைப்பூ - 2 கப்,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
கடுகு - 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
வடித்த சாதம் - 2 கப்,
மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
முருங்கைப்பூவை நன்கு அலசவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு, முருங்கைப்பூ எல்லாவற்றையும் போட்டு நன்கு கிளறவும்.
கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு இறக்கவும். இதை வடித்த சாதத்துடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். கண்கள் குளிச்சி பெறும்.
0 comments: