ஹீரோவாக நடித்துக்கொண்டு இருந்த சுந்தர்.சி மீண்டும் இயக்குநர் அடையாளத்தோடு களம் இறங்கிய படம் 'கலகலப்பு'.
விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடித்த இப்படம் காமெடியில் அப்ளாஸ் அள்ளியது.சுந்தர்.சி காமெடிப் படம் எடுத்து மீண்டும் தன் இமேஜை உயர்த்திக்கொண்டார்.
இப்போது திகில் நிறைந்த பேய்ப் படமாக 'அரண்மனை' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்,
இதற்கடுத்து 'கலகலப்பு 2' எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் சுந்தர்.சி.
விமல், சிவா, ஓவியா என்று 'கலகலப்பு' படத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்க இருக்கிறார்கள். அஞ்சலிக்குப் பதிலாக ஸ்ரீதிவ்யா நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.
ஸ்ரீதிவ்யா ஹோம்லி , கிளாமர் இரண்டுக்கும் செட்டாகிறார். காமெடியும் வொர்க் அவுட் ஆகிவிட்டால், தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது.
ஸ்ரீதிவ்யா இப்போது 'பென்சில்', 'ஈட்டி', 'காட்டு மல்லி', 'நகர்புறம்' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால், 'கலகலப்பு 2' படத்தில் ஸ்ரீதிவ்யா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
0 comments: