.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 24 October 2013

உங்களது கேள்விக்கான பதில்கள் இங்கே!

                                உங்களது கேள்விக்கான பதில்கள் இங்கே

வீட்டில் நாம் செய்யும் சில சின்ன சின்ன வேலைகள் குறித்து நமக்கு பல கேள்விகள் இருக்கும். அதில் சில குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களை இங்கே தந்துள்ளோம்.

மல்லிகைப் பூவை வாங்கி பிரிட்ஜில் வைக்கும் போது அது இரண்டு மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்க, பிளாஸ்டிக் டப்பாவை விட, எவர்சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைக்கலாம்.

மேலும், மல்லிகைப் பூவை உலர்ந்த துணியால் சுற்றி எவர் சில்வர் டப்பாவில் வைத்தால் 4 நாட்களுக்குக் கெடாமல் வைத்துக் கொள்ளலாம்.

சீலிங் ஃபேன்கள் சுற்ற ஆரம்பித்த உடனேயே டக் டக் என்று சத்தம் வந்தால் ஃபேன் சரியாக பொருத்தப்படவில்லை என்று அர்த்தம். சரியாக பொருத்தப்படாத ஃபேன்கள் எளிதில் பாழாகும்.

எலுமிச்சை பழத்தை வாங்கி வந்துஅதனை பாயில் பேப்பர் அதாவது ஹார்லிக்ஸ் பேக் செய்யப்பட்டு வரும் சில்வர் பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வைத்தால் காயாமல் பாதுகாக்கலாம்.

டிவி, ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் போன்ற மின்சார சாதனங்களின் ஸ்விட்சுகளை அணைத்தவுடனேயே உடனே போடாதீர்கள். ஃப்ரிட்ஜில் கம்பரசரும், டீவியில் பிக்சர் ட்யூபும், ட்யூப் லைட்டில் பாலய்டும் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகிவிடும்.

ப்ரிட்ஜில் துர்நாற்றம் வராமல் இருக்க எலுமிச்சையை துண்டுகளாக்கி ஆங்காங்கே வைக்கலாம். இதனால் துர்நாற்றம் மறைந்து விடும். இனிமேல் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டும் என்றால், எந்த உணவு பண்டத்தையும் திறந்து வைக்காமல் நன்கு மூடி வைக்கவும்.

அடிக்கடி உபயோகப்படுத்தும் எவர்சில்வர் டீ வடிகட்டி அடைத்துக் கொண்டிருந்தால், அதனை சில நிமிடங்கள் நெருப்பில் காட்டியபிறகு கழுவிவிட்டால் அடைப்பு நீங்கி பளிச்சென்று இருக்கும்.

 அயர்ன் பாக்ஸில் துணிக்கறை படிந்துவிட்டால் நகைக்கடையில் பயன்படுத்தும் ஆஸிட்டை லேசாக அயர்ன் பாக்ஸில் தடவி, சுரண்டி எடுத்துவிட்டால் போதும்.


 ஸ்டீல் பீரோ பளபளக்க பழைய துணியினால் தூசியைத் துடைத்துவிட்டு, சிறிதளவு பஞ்சு அல்லது ஸ்பாஞ்சை தேங்காய் எண்ணெயில் நனைத்து பீரோவைத் துடைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பஞ்சால் துடைக்க ஸ்டீல் பீரோ பளபளக்கும்.

கெட்டுப் போன உணவுப் பண்டங்களை பிரிட்ஜில் வைப்பதையும், பிரிட்ஜில் ஒரு உணவு பொருளை பல நாட்களாக கவனிக்காமல் விடுவதையும் தவிர்க்கவும்.

கிரைண்டரில் பொருத்தப்பட்டுள்ள கல், தானிய வகைகளை நிரப்பி ஆட்டும்போது எளிதில் தேய்வதில்லை. சிலர் கிரைண்டரைக் கழட்டும்போது கல்லை வெளியே எடுக்காமல், தண்ணீரி ஊற்றி மெஷினை ஆன் பண்ணிக் கழுவுவார்கள். இதனால் வெகு சீக்கிரத்தில் மெஷினிலுள்ள கல் தேய்ந்துவிடும்.

நீண்ட நேரம் ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்தே வைக்கக்கூடாது. திறக்கும் முன்பே எதை எடுக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து, உடனே திறந்து மூடுவது நலம்.

குட்டீஸ் இருக்கும் வீடுகளில் ஃப்ரிட்ஜை லாக் செய்து விடுவது நல்லது. ஃப்ரிட்ஜை கண்டிப்பாக சமையலறையில் வைக்கக்கூடாது. எரிவாயு கசிந்தால் ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் வாயுவுடன் சேர்ந்து வேதிவினை புரிந்து நெருப்புப் பொறிகள் கிளம்பும்.

ஃப்ரிட்ஜிலுள்ள ஃப்ரீஸரில் ஐஸ் கட்டிகள் சேர்ந்தால் அதை வெளியேற்ற டீஃப்ராஸ்ட் பட்டனை உபயோகிப்பதே சரியான வழி. அந்த பட்டன் வேலை செய்யவில்லை என்றால் உடனே சரிபாக்க வேண்டுமே தவிர, குச்சி, கரண்டியை வைத்து குத்தினால், அதனுள் செல்லும் இணைப்பு குழாய்கள் வெடித்துவிடும்.

பிரஷர் குக்கரின் வெயிட்டை தினமும் சுத்தம் செய்யுங்கள். அதனுள் சேரும் பசை அழுத்தத்தின் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு அதிக நேரம் கழித்துதான் விசில் வரும். சில சமயம் வெயிட் தூக்கி எறியப்படும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top