ஆச்சரியம் நிறைந்த எலிபண்டா
இந்தியாவின் புகழ் பெற்ற குடைவரைக் கோவில்களில் எலிபண்டா குகைகள் முக்கியமானவை. கூடவே... இவற்றில் புதைத்-திருக்கும் தகவல்களும் ஆச்சரியமானவை. மும்பை கடற்கரையில் இருந்து சுமார் 10கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகான தீவு எலிபண்டா. காராப்புரி தீவு என்றும் அழைக்கின்றனர். 17ம் நூற்றாண்டில் போர்ச்சு-கீசியர்களால் கண்டறியப்பட்டது. எலிபண்டா குகைகளில் பலவிதமான புடைப்புச் சிற்பங்களும், சிலைகளும் காணப்படுகின்றன. இவற்றில் திரிமூர்த்தி என்றழைக்கப்படும் சிவன் சிலை அபூர்வமானது. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்களின் முகங்களை இவை குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. ராஷ்டிரகூடர்களின் அரசுச் சின்னமும் இதுதான் என்பது இன்னொரு ஆச்சரியம். இவை தவிர நடராசர், சதாசிவன், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் காணப்படுகின்றன. இவையும் ராஷ்டிரகூடர்களின் காலத்தை சேர்ந்தவையே.
தீவைக் கண்டுபிடித்த போர்ச்சுகீசியர்களை, தீவின் முகப்பில் காட்சியளித்துக் கொண்டிருந்த ஒற்றைக்கல்லில் ஆன யானை சிலை வெகுவாக கவர்ந்துள்ளது. அதை எடுத்துச்செல்ல முயன்றுள்-ளனர். அது முடியாமல் போகவே அப்படியே விட்டுச் சென்று விட்டனராம். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் அந்த யானைச்சிலையை, மும்பை விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்துக்கு (தற்போதைய டாக்டர் பாவ் தஜி லாட் மியூசியம்) கொண்டு சென்று வைத்துள்ளனர்.
யானைச்சிலை ஞாபக-மாகத்தான் எலிபண்டா தீவு என போர்ச்சுகீசியர்கள் அழைத்து வந்துள்ளனர். மேலும் இதை துப்பாக்கி சுடும் களமாகப் பயன்படுத்திய போர்ச்சு-கீசியர்கள், சுடுவதற்கு இலக்காக சிலைகளை(?) பயன்படுத்தியதாகவும் கூறப்-படுகிறது. அதனால்தான் பல சிலைகள் இங்கு சிதைந்து காணப்படுகின்றன.
வரலாற்று சிறப்புகொண்ட எலிபண்டா தீவு பல பேரரசுகளின் பகுதியாகவும் விளங்கி வந்துள்ளது. கொங்கன்-மவுரியர்கள், திரிகூடர்கள், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், அகமதாபாத்தின் முஸ்லிம் மன்னர்கள், மராட்டியர்கள் என பலதரப்பினரின் கட்டுப்பாட்டில் இது இருந்து வந்துள்ளது. ஷென்ட்பந்தர், மோராபந்தர், ராஜ்பந்தர் என மூன்று கிராமங்கள் இங்குள்ளன. ஷென்ட்பந்தரில்தான் குகைகள் அமைந்திருக்கின்றன. மோராபந்தர் அடர்ந்த காட்டுப்பகுதியாகும்.
ஆச்சரியங்களைக்கொண்ட, அழகான எலிபண்டா தீவுக்கு படகில்தான் செல்ல முடியும். மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் உள்ள அப்போலோ பந்தரில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் படகில் சென்று விடலாம். காலை 9மணி முதல் மாலை 5மணி வரைதான் குகைகளைக் காண அனுமதி. கட்டணம் உண்டு. யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச்சின்னங்கள் பட்டியலில் எலிபண்டா குகைகள் 1987ம் ஆண்டில் இடம் பிடித்தன
|
0 comments: