.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 15 October 2013

‘அல்லா’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக கூடாது:மலேசியா கோர்ட் தீர்ப்பு!

‘அல்லா’என்ற சொல்லை முஸ்லிம் அல்லாத பிறமதத்தினர் பயன்படுத்த முடியாது என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.


15 -allah word

 


மலேசியா நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் தங்களது கடவுள்களை குறிக்கும் வகையில் மலாய் மொழியில் ‘அல்லா’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சொல் அரபு மொழியில் இருந்து மலாய் மொழிக்கு மருவி வந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில், மலாய் மொழியில் வெளியாகும் கத்தோலிக்க கிருஸ்துவ நாளிதழான ‘தி ஹெரால்ட்’ கடந்த 2009-ம் ஆண்டு கடவுளை குறிப்பிட ‘அல்லா’ என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தது.இதனையடுத்து, மலேசியாவில் பெரும் கலவரம் வெடித்தது. மசூதிகள் மற்றும் கிருஸ்துவ தேவாலயங்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக கீழ் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது.மலேசியா பைபிள்களில் கூட கடவுளை குறிப்பிடுகையில் ‘அல்லாஹ்’ என்று கூறப்பட்டுள்ளதாக ‘தி ஹெரால்டு’ நாளிதழ் சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடினார்.


இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அந்த சொல்லை மலேசியா என்ற தனிநாடு உருவாக்கப்படுவதற்கு முன்னதாகவே பல்வேறு மதத்தினரும் பயன்படுத்தி வந்துள்ளதால், அதேபோன்று இனியும் பயன்படுத்த தடையில்லை என்று தீர்ப்பளித்தார்.


உடனே  இந்த தீர்ப்பை எதிர்த்து மலேசிய அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த அப்பீல் மனுவின் மீது நடைபெற்று வந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.அப்போது “‘அல்லா’ என்ற சொல், தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருக்க வேண்டும்.


கிருஸ்துவ மதத்தின் நம்பிக்கையின்படி இந்த சொல் அம்மதம் சார்ந்த ஒரு பகுதியாக காணப்படவில்லை. எனவே, முஸ்லிம்கள் மட்டுமே இந்த சொல்லை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், இதன் பயன்பாடு சமூகத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாகி விடும்” என்று நீதிபதி முஹம்மது அபாண்டி அலி தீர்ப்பு வ்ழங்கியுள்ளார். மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும் நீதிமன்றம் கூறியது.



மேலும் மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என்றார்கள். இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளனர்.


Christian newspaper must not use ‘Allah’, Malaysian court rules


#########################################################



A Christian newspaper in Malaysia may not use the word “Allah” to refer to God, a court has ruled, in a landmark decision on a matter that has fanned religious tension and raised questions over minority rights.Monday’s unanimous decision by three Muslim judges in Malaysia’s appeals court overturned a 2009 ruling by a lower court that allowed the Malay language version of the newspaper the Herald to use the word Allah – as many Christians in Malaysia say has been the case for centuries.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top