அமெரிக்காவில் நடுவானில் பறந்த விமானத்தின் கதவு திடீரென கழன்று விழுந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மான்டரி விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது.
இதையடுத்து திரும்பி பார்த்த விமானி விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார்.
விமானத்தை தாழ்வாக பறக்க செய்து கதவு எங்கே விழுந்திருக்கிறது என்று தேடினார்.
இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார்.
இந்நிலையில், அப்பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் தன்னுடைய ஹோட்டல் மீது விமானத்தின் கதவு விழுந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்தார்.
எனினும் இந்த சம்பவத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:
வெளங்கிடும்
நான் நம்ப மாட்டேன்.