.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 17 September 2013

கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!




கடவுள் நம்பிக்கை, நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவை நிறைந்தது சினிமா உலகம். படத்திற்கு பூஜை போடுவதில் இருந்து, படப்பிடிப்பு தொடங்கி கடைசியில் பூசணிக்காய் உடைக்கிறது வரைக்கும் இதையெல்லாம் சரியாக கடைபிடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட சினிமாவில் இது எதையும் பார்க்காமல் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு இன்று வரை வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார் கமல். குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.



ஆனால், அப்படிப்பட்ட கமல், ரீ ரிலீசாகும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தபோது., அவரது ரசிகர்களும் பெருந்திரளாக கூடியிருந்தனர். கமலின் பெயரை மேடையில் பேசுவோர் உச்சரிக்கும்போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நேரத்தில் சிலர், ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்றும் அவ்வப்போது குரல் கொடுத்தனர்.



இதை மேடையில் அமர்ந்திருக்கும்போது கேட்ட கமல் அவ்வப்போது ரசிகர்களை மெளனமாக இருக்குமாறு கை சைகையில் கேட்டுக்கொண்டு வந்தார். ஆனால், அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா மட்டும் ரசிகர் கூட்டத்தில் இருந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது. அதுவும் கமல் மைக் முன்னே பேச வரும்போது இன்னும் வேகமாக ஒலித்தது.



இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை. 

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top