.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 10 September 2013

அட!

இந்திய ரயில்வே சமீபத்தில் ரயில் ராடார் (railradar.trainenquiry.com) என்கிற புது இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தளத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தியா முழுவதும் செயல்பாட்டில் உள்ள ரயில்களின் நிலையை அதாவது இந்த நிமிடத்தில் எந்தெந்த ரயில்கள் எங்கெங்கு சென்றுகொண்டிருக்கின்றன என்கிற தகவலை கூகுள் வரைபடத்தின் மூலம் மிகவும் எளிமையான முறையில் அறிந்துகொள்ளலாம்.

இத்தளத்திற்குச் சென்றால் நீலம் மற்றும் சிவப்பு அம்புக்குறிகள் நிறைந்த இந்திய வரைபடம் தோன்றும். நீல நிற அம்புக்குறிகள் சரியான நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையும், சிவப்பு நிற அம்புக்குறிகள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையும் குறிக்கும். நீல நிற அம்புக்குறிகளில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், ரயிலின் பெயர் மற்றும் எண், ரயில் கிளம்பிய நாள், கடைசியாக கடந்த ரயில் நிலையம். அடுத்துள்ள ரயில் நிலையம், அவற்றிற்கிடையே உள்ள தொலைவு, அடுத்த நிலையத்தைச் சென்றடைய எவ்வளவு நேரமாகும் போன்ற பல தகவல்கள் நம் முன்னே தோன்றும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் இத்தளம் அப்டெட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இந்தியன் ரயில்வேஸ்  சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன்  சிஸ்டம் (CRIS) என்ற அமைப்பின் உருவாக்கமே இத்தளம். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களின் மூலமாகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மட்டுமின்றி,  செல்போன்களிலும் இந்த  வசதியைப் பெறலாம்.

இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்த வண்ணம் ரயில்களின் நிலையை அறிந்துகொண்டு,  அனாவசிய டென்ஷன் இல்லாமல், நிம்மதியாக உரிய நேரத்திற்குக் கிளம்பலாம்.  மேலும் தகவல்களுக்கு: railradar.trainenquiry.com  என்கிற இணையதளத்தில் காணலாம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top