.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 10 September 2013

தமிழக மாணவர்களின் கண்டுபிடிப்புகள்!


தெரு விளக்குகளில் பயன்படுத்தப்படும் சோடியம் விளக்குகள் அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்பவை. வெப்பத்தையும் அதிகமாக உமிழும்.மேலும் தெரு விளக்குகளை தினசரி நேரத்திற்கேற்ப on, off செய்ய வேண்டிய வேலையும் உள்ளது. சில நேரங்களில் கவனக்குறைவாக இருந்துவிட்டால் பகல் முழுவதும் தெரு விளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. ஆனால் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் தெரு விளக்கு, சூரிய வெளிச்சம் வந்தவுடன் அணைந்து விடும். சூரிய வெளிச்சம் குறைந்தவுடன் தானாக எரியத் தொடங்கிவிடும்.மேலும் மனிதர்கள் மற்றும் வாகனங்கள் தெரு விளக்கை நெருங்கும்போது தானாகவே வெளிச்சத்தை அதிகப்படுத்திக் கொள்ளும்.ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது குறைவாக ஒளிரும்.

சில காலம் முன்னர் நிலவிய கடும் மின் வெட்டு காரணமாக எங்கள் வீட்டில் அனைவரும் சிரமப்பட்டோம். ஆனால் பகல் நேரங்களில் தெரு விளக்குகள் வீணாக எரிவதை பல முறை பார்த்துள்ளேன்.இப்படி வீணாகும் மின்சாரத்தைச் சேமித்தால் மின்வெட்டைக் குறைக்கலாம் என யோசித்தேன். எனவே அதற்காக இந்தத் தானியங்கி தெரு விளக்கை உருவாக்கினேன்.இந்தத் தெருவிளக்கில் சோடியம் பல்பிற்கு மாற்றாக 30 வாட்ஸ் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தியுள்ளதால் மின்சாரம் அதிக அளவில் சேமிக்கப்படும். இதில் 25 வாட்ஸ் திறனுள்ள எல்.இ.டி. பொருட்கள் மற்றும் ஆட்கள் மின் கம்பத்தை நெருங்கும் போது ஒளிரவும், 5 வாட்ஸ் திறனுள்ள எல்.இ.டி. யாரும் இல்லாத நேரத்தில் சாதாரணமாக ஒளிரவும் பயன்படும். தெரு விளக்கில் பொருத்தப்பட்டுள்ள எல்.டி.ஆர். (light dependent resistor)தொழில்நுட்பம் பகல் பொழுது வந்ததும் பல்பு ஒளிர்வதை நிறுத்திவிடும்.இதனால் தெரு விளக்கை யாரும் பராமரிக்கத் தேவையில்லை" என்கிறார் ஹர்ஷதா.

தற்போது பயன்பாட்டில் உள்ள தெரு விளக்குகளில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பொருத்தினாலே போதுமானது.இதற்கு ஒரு தெரு விளக்கிற்கு 450 முதல் 500 ரூபாய் வரை செலவாகும். அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது விலை மேலும் குறையலாம்.
 

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top