உலகின் மிகப்பெரிய மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை தொடர்ந்து, ஸ்மார்ட்போன் துறையில் சாதனை படைத்த பிளாக்பெர்ரி கம்பெனியும் விலை போகிறது. கனடாவை தலைமையகமாக கொண்ட பிளாக்பெர்ரியை ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரேம் வாத்சாவின் ஃபேர்ஃபேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்கஸ் கையகப்படுத்துகிறது. ஃபேர்ஃபேக்ஸ் ஏற்கனவே பிளாக்பெர்ரியின் 10 சதவீதம் பங்குகளை கைவசம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகளை தலா 9 அமெரிக்க டாலர் (ரூ.562) வீதம் ரொக்கமாக கொடுத்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அந்த பங்குகளின் மொத்த விலை 470 கோடி டாலர் (ரூ.29,375 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் டொரான்டோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ஃபேர்ஃபேக்ஸ். இதன் தலைவர் பிரேம் வாத்சாவை கனடாவின் வாரன் பஃப்பெட் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. நலிந்த நிறுவனங்களின் பங்குகளை மொத்தமாக வாங்கி வைத்திருந்து, நிறுவனம் நல்ல நிலைக்கு திரும்பிய பிறகு பங்குகளை விற்று கணிசமான லாபம் பார்ப்பவர் வாரன் பஃப்பெட்.
அதே பாணியில் பிரேம் வாத்சா பிளாக்பெர்ரியை வாங்குகிறார். நவம்பர் 4க்குள் நிர்வாகம் கைமாற வேண்டும். அதற்கிடையில் வேறு யாராவது கூடுதல் விலை கொடுக்க முன்வந்தால் பிளாக்பெர்ரி நிர்வாகம் தாராளமாக ஒப்பந்தம் செய்யலாம். அப்படி விற்கும்போது ஒரு பங்குக்கு 30 சென்ட் வீதம் ஃபேர்ஃபேக்ஸ் கம்பெனிக்கு பிளாக்பெர்ரி கொடுக்க வேண்டும். ராயல்டி, கமிஷன் மாதிரி. இது ஒரு பங்குக்கு அரை டாலர் வரை உயரலாம்.
பிளாக்பெர்ரி நிறுவனம் 1984ல் தொடங்கப்பட்டது. எனினும், 2003ல்தான் முதலாவது ஸ்மார்ட்ஃபோனை விற்பனைக்கு கொண்டு வந்தது. பிசினஸ் ஃபோன் என பெயர் பெற்ற பிளாக்பெர்ரி சமூகத்தின் உயர் மட்ட பிரமுகர்களின் பிரிக்க முடியாத தகவல் தொடர்பு கருவியானது. தலைவர்கள், பிரதமர்கள், மன்னர்கள் பயன்படுத்தும் மொபைல்போனாக பிரபலமானது. அதிபர் ஒபாமா அதன் தீவிர ரசிகர்.
எனினும் ஆப்பிள், சாம்சங் போன்களின் வருகையை தொடர்ந்து பிளாக்பெர்ரியின் மவுசு குறைய தொடங்கியது. சமீப காலமாக கம்பெனி ரொம்பவும் தள்ளாடியது. பிரேம் அதன் பங்குகளை வாங்கி குவிக்க தொடங்கியது அதன் பிறகுதான். ஐதராபாத் நகரில் 1950ல் பிறந்த பிரேம், அங்குள்ள பப்ளிக் பள்ளியில் படித்து ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1985ல் ஃபேர்ஃபேக்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.
Fairfax’s BlackBerry deal seeks to forgo Canada takeover review
***********************************
The investor that has struck a tentative $4.7 billion deal to take smartphone maker BlackBerry Ltd private is aggressively touting his group’s Canadian status to avoid the government reviews of foreign takeovers that have plagued recent attempts to buy Canadian companies.
0 comments: