இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவத்தினருக்கு என தனியாக சம்பள கமிஷனை மத்திய அரசு அமைத்து உள்ளது. இதன் மூலம் ராணுவத்தினரிடையே நிலவும் ஊதிய வேறுபாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை:
நாட்டின் எல்லைப்பகுதிகளை கண்காணிக்கும் பணியி்ல் தரைப்படை , விமானப்படை, கப்பல் படை ஆகிய படை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த மூன்று பிரிவுகளிலும் பணிபுரிந்து வரும் வீரர்களிடையே சம்பள முரண்பாடு என்பது இருந்து வருகிறது. இதனைதீர்க்கும் வகையில் முப்படைகளின் அதிகாரிகள் ராணுவத்தினருக்கு என தனியாக சம்பள கமிஷனை நியமிக்க வேண்டு மென வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் ஒப்புதல்அளித்துள்ளார். இதற்காக அமைக்கப்பட்ட குழு சமர்பிக்கும் அறிக்கை அடிப்படையில் சுமார் 80 லட்சம் பேர் பயன் அடைய உள்ளனர். இந்த சம்பள கமிஷன் அறிக்கையி்ன் அடிப்படையில் வரும் 2016 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு அறிவிப்பு:
மூன்று படை பிரிவுகளின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய பாதுகாப்பு்ததுறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ராணுவத்தினருக்கு என தனியான ஊதிய கமிஷனை நியமிக்க பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு பரிந்துரைந்தார்.
இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் பிரதமர் நியமித்த ஊதிய குழுவில் நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அமைச்சரவை செயலாளர்கள் ராணுவத்தினர் தரப்பில் ஒருவரும் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை:
தற்போது தனியான ஊதிய கமிஷனை நியமிக்க அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதன் மூலம் ஒரே பதவிக்கு ஒரே ஊதியம் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.
0 comments: