இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆன சுவாமிகந்தன் இயக்கியிருக்கும் ‘தி சீக்ரெட் விள்ளேஜ் திரைப்படத்தில் ஜோனாதன் பென்னட் , அலிஃபால்க்னர், ஸ்டெலியேசவன்டே, ரிச்சர்ட்ரைல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.ஜேசன்பி.விட்டியர்-உடன் இணைந்து கதையை எழுதியிருக்கிறார்.
ஜோனாதன்பென்னட்-ன் 50வது படம்தான் இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘மெமோரியல்டே’, மீன்கேர்ள்ஸ்’ படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.அலிஃபால்க்னர்–“திடிவிலைட்சகா – பிரேக்கிங்டான் – பார்ட் 1” மற்றும் “பேட்கிட்ஸ்கோடூஹெல்”படத்திலும், ஸ்டெலியேசவன்டே–“ஏ பியூட்டிபுல்மைன்ட்,” “அக்லிபெட்டி” படத்திலும் நடித்தவர். ரிச்சர்ட்ரைல்-ன் 210வது படம்இந்த ‘திசீக்ரெட்வில்லேஜ். இவர் ‘ஹாலோவின்’, ஆபீஸ்ஸ்பேஸ்” ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
கதைச்சுருக்கம்
ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ,திடீர் திடீரென நோய் வாய்ப்பட்டு இறந்து போவது தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் மட்டும்தான் இது நடப்பது என்பது புரியாத புதிராக இருக்கிறது!வெற்றிபெற முடியாத திரைக்கதையாசிரியரானகிரேக் (ஜோனாதன்பென்னட்), துணிச்சல் மிக்க பத்திரிகையாளரான ராச்சேல் (அலிஃபால்க்னர்) இருவரும் அந்த கிராமத்திற்கு சென்று ஒரு வீடு எடுத்து தங்கி இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.
இவர்களது ஆராய்ச்சிக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த எவரும் ஒத்துழைப்புக் கொடுக்க மறுக்கும் நிலையில் ஒரே ஒருவர் மட்டும் இவர்களுக்கு உதவ முன் வருகிறார். இவர்களோடு பேசிய மறுநாள் அந்த நபரும் திடீரென இறந்து போக அதிர்ச்சி மேலும் அதிகமாகிறது.அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜோ (ஸ்டெலியோசவன்டே), ஜேஸன் (Kef Lee) அந்த கிராமத்தின் வழிபாட்டு நடவடிக்கைகளை ரகசியமாக காத்து வருகிறார்கள்.ஒரு சந்தர்ப்பத்தில் கிரேக் காணாமல் போகிறார். இதனால் தனித்து விடப்படும் ராச்சேல் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ரகசியங்களை வெளிக்கொண்டு வருவதை திகில் நிறைந்த காட்சிகளோடு சொல்லியிருப்பதே இந்தபடத்தின் கதை.
இயக்குனர் சுவாமிகந்தன் பற்றி….
ஃபிலெடெல்பியாவைச் சேர்ந்த இப்படத்தின் இயக்குனரான சுவாமிகந்தன் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர். அமெரிக்காவிற்குச் சென்ற பின், திரைப்படத் தயாரிப்பு, விஷுவல்எபெக்ட்ஸ் மற்றும் திரைப்பட மார்க்கெட்டிங் பற்றிய படிப்பை நியூயார்க் பல்கலைக்கழகத்திலுள்ள ஃபிலிம்ஸ் கூலில்படித்தவர்.
2008ல் வெளிவந்த ‘கேட்ச்யுவர்மைன்ட்’ என்ற படம்தான் சுவாமிகந்தன்எழுதி, இயக்கி, தயாரித்த முதல்படம். குடும்பக்கதையான இப்படம் அமெரிக்கா, கனடா, கரீபியன்தீவுகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியானது. 2009ல் டிவிடி வடிவில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.தற்போது திகில், மர்மப்படமான ‘திசீக்ரெட்வில்லேஜ்’ படத்தை முடித்துள்ளார். இந்த ஆண்டு அக்டோபர்மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளிவரத் தயாராகஉள்ளது.
‘தி மெசேன்ஜர்’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். ஆரம்ப நிலையில்உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது.சுவாமிகந்தன் மற்றும் டாக்டர்ராஜன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருப்பதோடு, உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.
0 comments: