.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 29 December 2013

அந்த விஷயத்துல நாங்க ஒண்ணுதான்...




ஒரு நடிகை தான் வாங்கிய அட்வான்சை ஒரு போதும் திருப்பிக் கொடுப்பதில்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் இரண்டு பட பூஜைகள்.

அண்மையில் தெலுங்கு பட இயக்குனர் ஒருவரது தலைமையில் சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் பிரமாண்ட பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சாதாரண ஆட்களில்லை. நயன்தாரா, தெலுங்கின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான கோபிசந்த் ஆகியோர். இது நயன்தாரா நடிக்கும் படம் என்பதால் சென்னையிலிருக்கும் தமிழ் நடிகர்களில் முக்கியமான பலரும் கூடிவிட்டார்கள்.

சரி, முதல் வரி மேட்டருக்கு வருவோம். இந்த படம் ஏற்கனவே பூபதி பாண்டியன் டைரக்ட் செய்வதாக இருந்த படம். அதை துவங்கும் முன்பாகவே இவருக்கும் தயாரிப்பாளருக்கும் முட்டிக் கொண்டது. படத்தையே டிராப் செய்துவிட்டார் தயாரிப்பாளர். அப்படியென்றால் நடிகர் நடிகைகளுக்கு கொடுத்த அட்வான்ஸ்? அதை திருப்பி கேட்கும்போதுதான் படமாவே நடிச்சு கொடுத்துடறோம் பாஸ் என்றார்களாம் நயன்தாராவும் கோபிசந்தும். வேறு வழியில்லாமல் புதிய இயக்குனரை வைத்து இந்த படத்தை மீண்டும் துவங்கியிருக்கிறார் தயாரிப்பாளர்.

இதே நிலைமைதான் இப்போது தமன்னா நடிக்க ஒப்புக் கொண்ட தெலுங்கு படம் ஒன்றுக்கும். நாகசைதன்யாவுடன் தமன்னா ஜோடியாக நடிக்கவிருந்த ஹலோ பிரதர்ஸ் படம் டிராப். அட்வான்சை திருப்பி கேட்ட தயாரிப்பாளரிடம், படமே பண்ணிடலாமே. எதுக்கு அட்வான்சை திருப்பி கேட்கிறீங்க என்கிறார்களாம் இருவரும்.

இதே மாதிரி இலியானாவிடம் சில கோடிகளை கொடுத்துவிட்டு விழித்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு தயாரிப்பாளர். இத்தனைக்கும் இந்த படத்தில் இலியானாவுக்கு ஜோடியாக நடிக்க புக் ஆகியிருந்தவர் நம்ம ஊரு ஹீரோ விக்ரம். சீயானாவது திருப்பி கொடுத்தாரா இல்லையா? அது இப்ப தெரியாது...

கொல்கத்தா தாதாவாக விஜய்?




முருகதாஸ் படத்தில் விஜய் கொல்கத்தா தாதாவாக நடிக்கப் போகிறாராம்.
ஜில்லா படம் முடிவடைந்த நிலையில் விஜய் இப்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை கொல்கத்தா நகரின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் படத்தில் விஜய் தாதாவாக நடிக்கிறாராம்.

கொல்கத்தாவை கலக்கிக்கொண்டிருந்த பிரபல கிரிமினல் வேடம்தான் விஜய்க்கு. மக்களுக்கு நன்மை செய்யும் கிரிமினலாக விஜய் ராபின் ஹூட்டாக வருகிறாராம். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்படும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பார் என்கிறார்கள்.

அனிருத் இசையமைப்பில் பாடல்கள் மதன்கார்க்கி எழுதுகிறார். வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள். ஏற்கெனவே விஜய்-முருகதாஸ் இணைந்த துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. துப்பாக்கி படத்தை மும்பை பின்னணியில் சொன்ன முருகதாஸ் இந்தப் படத்தை கொல்கத்தா பின்னணியில் சொல்லப் போகிறாராம்.

இதற்காக படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது

சிறந்த பொய்!!!!




ஒரு குட்டி கதை:
ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார்.

அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய் ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று கத்தினான்.

உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.

புளித்த பாலின் பயன் அறிவீரா?




அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்

 வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.


பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?




பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top