என் இதயத்தை கொள்ளைகொண்ட சிகரட்டே ....உன் முன்னால் காதலன் எழுதும் கடைசி மடல் , உனக்கு கடிதமா என யோசிக்காதே .நீயும் என் காதலிதான்இதுவும் நிச்சயம் காதல்கடிதம்தான்காதலியை அணைத்தபின் அனுபவிப்பேன்உன்னை அனுபவித்து பின் அணைப்பேன் .நீயும் என் காதலிதான் உன் வேலையும் இதயத்தில் நுழைவதுதானே .நம் உறவும் காதலைப்போல் தானே துவங்கியது , நண்பர்களால் அறிமுகமானாய் , முதன்முதலில் நீ எனக்கு எப்போதாவது நண்பர்களின் உதவியோடு ஊருக்குள் மறைவாய் யாருமில்லா இடங்களிலே ,உன்னை முதன்முறை பார்க்கையில் உடனே பிடிக்கவில்லை உன்னுடனான தொடர்பு நண்பர்களினூடே தந்த கௌரவம் எனை மாற்றியதோ .என் இதழ்களுடனான உன் முதல் சந்திப்பு அத்துனை இதமாய் இருந்திருக்கவில்லை , அதன் பின் இரண்டாம் முத்தம் இதமாய் மூன்றாம் முத்தம் சுகமாய் நான்கைந்தில் அடிமையாக்கினாய் , என் இதழுடனான உன் உறவு அதிகமாக , உன்னை சந்திக்கவே பல நாட்கள் என் நண்பர்களை சந்தித்திருக்கிறேன்...
Wednesday, 4 December 2013
உடல் எடையை குறைக்கும் உணவுகள்!

எப்போதும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் ஈஸியான விஷயம் அல்ல.யாருக்கு உடல் மிகவும் அழகாக ஸிலிம்மாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அவர்கள் கண்டிப்பாக தங்கள் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.அதற்காக சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்றில்லை. அனைத்தையும் சாப்பிடலாம் ஆனால் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.அதிலும் சரியான டயட்டை மேற்கொள்ளாமல் இருந்தால், முகம் வாடி உடலில் செரிமானம் குறைந்து குடலானது சுருங்கிவிடும்.ஆகவே ஆரோக்கியமான உடலை அழகான சருமத்தை பெற வேண்டுமென்றால், நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்ண வேண்டும்.மேலும் ஒரு சில உணவுகள் மிகவும் குறைந்த கொழுப்புகள் நிறைந்திருப்பதோடு, அதைச் சாப்பிட்டால் உடல் அழகாக ஒல்லியாக...
தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் எவ்வாறு புகார் தெரிவிப்பது?
தொலைத் தொடர்பு சேவையை நடத்தி வரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் எம்என்பி (மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி) விண்ணப்பங்களை நிராகரித்தால் அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று புதிதாக வந்திருக்கும் தொலைத் தொடர்பு விதிகள் (டிஆர்எஐ) கூறுகின்றன.
அதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளை சரியான இடத்தில் புகார் செய்ய வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் எடுத்து செல்ல வேண்டும். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எம்என்பி விண்ணப்பங்களை நிராகரித்தால் அதை எவ்வாறு புகார் செய்வது.
முதலில் சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்தின் டோல் பிரீ எண்ணிற்கு அழைத்து புகாரை பதிவு செய்ய வேண்டும். உடனே டெல்கோவிலிருந்து, நாம் புகார் செய்த நேரம், எண், மற்றும் தேதி ஆகிய குறிப்புகள் அடங்கிய எஸ்எம்எஸ் நமக்கு வரும். அவ்வாறு எஸ்எம்எஸ் வரவில்லை என்றாலும் கஸ்டமர் கேர்...
இயற்கை முறையில் பயனுள்ள சில வைத்திய குறிப்புகள்!

உணவுக்கு பின்பு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். * துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. * 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும். * காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும். * தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம். *...
நடைப்பயிற்சி அணி!
காலை விடிந்ததும், 50 வயதுள்ள என் அத்தை, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார். நான், என்னவென்று விசாரித்த போது, "வாக்கிங்' செல்வதாக சொன்னார். நான் அதை கண்டுகொள்ளாமல், "சரி போய்ட்டு வாங்க...' என்று கூறி, உள்ளே சென்று விட்டேன்.வாக்கிங் செல்வதாக கூறிக் கிளம்பிய அத்தை, வாசலிலேயே, 10 நிமிடம் நிற்க, "என்ன அத்தே... இன்னும் இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க?' என்றேன். அதற்கு அத்தை என்னிடம், "எங்க டீம் வருவாங்க, அவங்களோடு சேர்ந்துதான் போவேன்...' என்றார். "அது என்ன... டீம்?' என்று கேட்டேன்.அவர் கூறியது: தன்னந்தனியாக, "வாக்கிங்' போறப்போ, சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும் நடப்பாங்க. ஒரு சிலர், "வாக்கிங்' பற்றிய, முறை தெரியாம இருப்பாங்க. ஆனால், குழுவா சேர்ந்து, "வாக்கிங்' போனா ஒரே சீரா நடப்போம்; சிரமம் தெரியாது. அதோட நகை திருடர்கள், நாய் தொல்லை, எதுவும் கிடையாது. திரும்பி வரும் போது, பால் பாக்கெட், பேப்பர்...