மொழி வரலாற்றில் ஒரு சில அறிஞர்கள் உருவாக்கும் சொற்களே நிலை பெற்றுவிடுகின்றன. இமகபமதஉ என்ற ஆங்கிலச்சொல் "கலாசாரம்' என்று மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் ரசிகமணி டி.கே.சி. அவர்கள் அது வடமொழி சாயலாக உள்ளதென்று அதைப் "பண்பாடு' என்று மொழி பெயர்த்தார். அதேபோல் "பார்லிமெண்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் "பாராளுமன்றம்' என்ற சொல்லை பரிதிமாற் கலைஞர் மொழி பெயர்த்தார்.
நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைப்பது இயலாத காரியம். இன்றைய அறிவியல் உலகம் இதை சாதித்துக் காட்டியுள்ளது. ஆனால் கி.மு. 2 ஆயிரத்திலேயே பாபிலோனில் உள்ள யூப்ரட்டீஸ் நதியின் கீழ் 3,000 அடிக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்தது வியப்பூட்டும் செய்தியாகும்.
மிளகாய் என்பது மேலை நாட்டுத் தாவரம். இது வருவதற்கு முன்னால் மிளகைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். மிளகைப் போன்றே காரம் இருந்ததால் தமிழர்கள், அதனை "மிளகுக்காய்' என்றழைத்தார்கள். இதுவே, பின்னாளில் மிளகாய் என்று மாறியது.
பாம்புகளில் நாகப்பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை. வடக்கே கோதுமை நிறமுடைய ஒரு வகை நாகங்கள் உண்டு. இவற்றை யாராவது பிடிக்கவோ, கொல்லவோ நினைத்தால் முடிந்தவரை சீறிப்பார்க்கும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும். முடியாத பட்சத்தில் கற்களிலோ, பாறைகளிலோ மோதிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும்.
* பிஜித் தீவில் உள்ள மக்கள் யாருக்காவது மரியாதை செய்ய விரும்பினாலோ, பாராட்ட நினைத்தாலோ அவர்களுக்கு திமிங்கலத்தின் பல்லை அன்பளிப்பாக அளிப்பார்கள்.
* முகத்திற்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வது என்பது தொன்று தொட்டு வந்த நாகரீகமாகும். 3,000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் முகத்திற்கு "ஸ்நோ' வைத்திருக்கின்றனர். துட்டகாமன் என்ற எகிப்திய மன்னனின் கல்லறையில் (பிரமிட்) இம்மாதிரியான முகப்பூச்சு உள்ள பாத்திரங்கள் காணப்படுகின்றன. இன்றும் அவை அபரிமிதமான மணத்துடன் இருப்பதுதான் வியப்பு.
* மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய சிகரம் மான்ட் பிளாங்க். பிரான்ஸ், இத்தாலி நாட்டில் அமைந்துள்ள இந்த சிகரத்தின் உயரம் 4,810 மீட்டர் ஆகும்.
* புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கி.பி.1640-ல் கட்டத் தொடங்கி 1653-ல் கட்டி முடித்தனர்.
* சென்னையில் 1,687-ம் ஆண்டில் நகராண்மைக்கழகம் தோன்றியது. இந்தியாவின் முதல் நகராண்மைக்கழகமும் இதுவே.
* 1786-ல் முதல் தபால்நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டது.
* சென்னை பல்கலைக்கழகம் 1857-ல் தொடங்கப்பட்டது.
* முதன்முதலில் சென்னைக்கு மின்சார விளக்குகள் 1914-ம் ஆண்டு போடப்பட்டது.
* 1924ம் ஆண்டிலேயே 8,300 மின்சார விளக்குகள் சென்னை நகரெங்கும் ஒளிவீசியது.
* புகழ்பெற்ற செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் கி.பி.1640-ல் கட்டத் தொடங்கி 1653-ல் கட்டி முடித்தனர்.
* சென்னையில் 1,687-ம் ஆண்டில் நகராண்மைக்கழகம் தோன்றியது. இந்தியாவின் முதல் நகராண்மைக்கழகமும் இதுவே.
* 1786-ல் முதல் தபால்நிலையம் சென்னையில் தொடங்கப்பட்டது.
* சென்னை பல்கலைக்கழகம் 1857-ல் தொடங்கப்பட்டது.
* முதன்முதலில் சென்னைக்கு மின்சார விளக்குகள் 1914-ம் ஆண்டு போடப்பட்டது.
* 1924ம் ஆண்டிலேயே 8,300 மின்சார விளக்குகள் சென்னை நகரெங்கும் ஒளிவீசியது.
<> உலகிலேயே சந்தடி நிறைந்த நகரம் எகிப்தின் தலைநகரான கெய்ரோதான்.<> கொரியாவில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் கப்பல் வடிவத்தில் அமைந்துள்ளது.
<> ஆசியா என்ற சொல்லின் சரியான பொருள் சூரியோதய பூமி என்பதாகும்.
<> அமெரிக்கர்கள் மாதத்தை முதலாகவும் தேதியை இரண்டாவதாகவும் எழுதுவது வழக்கம்.
<> விண்வெளியில் ஒரு மனிதன் பறக்க 15 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது என்று கணக்கிட்டுள்ளனர்.
<> சிங்கப்பூரின் பழைய பெயர் டெமாசத் என்பது. டெமாசத் என்றால் கடல் நகரம் என்று பொருள்.
<> கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உப்பை "உப்பு' என்றே அழைக்கின்றனர்.
<> வைரத்தைக் குறிப்பிடும் "டயமண்ட்' என்ற ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதற்கு வெல்லப்பட முடியாத பொருள் என்று பெயர்.
<> அமெரிக்காவில் ரோம் என்ற பெயரில் 8 நகரங்கள் உள்ளன.
<> உலகத்தில் அதிக குற்றங்கள் நடைபெறும் நாடு பிரிட்டன்தான். அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில், தென்அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
* நமது குடலை நேரடியாக எக்ஸ்-ரே எடுக்க முடியாது.
* அமெரிக்க அதிபரை யாரும் கைது செய்ய முடியாது. அவர், "வீட்டோ பவர்' என்னும் அதிகாரம் பெற்றவர்.
* ஆர்டிக் பெருங்கடலில் கப்பல்கள் செல்ல முடியாது.
* பூஜ்ஜியத்தை ரோமன் மொழியில் எழுதமுடியாது. அதற்கு நிகரான பதம் கிடையாது.
* மைசூர் 'தீப நகரம்' என்று அழைக்கப்படுகிறது.
* "இளஞ்சிவப்பு நகரம்' என அழைக்கப்படுவது ஜெய்ப்பூர்.
* "காற்று நகரம்' என்று சிகாகோ அழைக்கப்படுகிறது.
* "வெள்ளை நகரம்' என அழைக்கப்படுவது பெல்கிரேடு.
* "பூங்கா நகரம்' என்று அழைக்கப்படுவது பெங்களூரு.
* குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை.
* நாம் பிறந்தது முதல் கண்கள் மட்டும்தான் வளராமல் அப்படியே இருக்கும்.
* ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக பெண்கள் கண்களை இமைக்கின்றனர்.
* மனிதர்களை விட வேகமாக ஓட கூடியது நீர்யானை.
* ஒரு எறும்பு தன் உடலின் எடையை போல 50 மடங்கு எடையை தூக்கி செல்லும். 30 மடங்கு எடையை இழுத்து செல்லும். மயங்கி விழும்போது எப்போதும் வலது பக்கமாகவே சாய்ந்து விழும்.
•பூனைக்குத் தண்ணீரைக் கண்டால் ஆகாது. அதன் மீது சிறிதளவு தண்ணீர் தெளித்தாலும் அது தலைதெறிக்க ஓடிவிடும்.
•கோலாக் கரடிகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை யூகலிப்டஸ் இலைகளைச் சாப்பிடும் பொழுதே பெறுகின்றன. அதனால் இவை தண்ணீர் என்று தனியாக எதையும் குடிப்பதில்லை.
•மயில் இறகுகளைச் சுவர்களில் ஒட்டி வைத்தால் பல்லிகளின் தொல்லை இராது.
•மாமிசம் உண்ணும் விலங்குகள் அவை உண்ணும் பிராணிகளின் இறைச்சியிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் உப்புச் சத்தைப் பெறுகின்றன.
•ஒட்டகத்துக்குப் பார்க்கும் சக்தி அதிகம். ஒரு மைலுக்கு அப்பால் தண்ணீர் தேங்கியிருந்தாலும்கூட ஒட்டகம் எளிதில் கண்டுபிடித்து விடும்.
•வானில் குறிப்பிட்ட உயரத்துக்கும் மேல் ஜெட் போன்ற விமானங்கள் விட்டுச் செல்லும் புகை போன்ற வெள்ளைக் கோடுகள் அதன் புகையல்ல, நீர்த்திவலைகள்.
•முதல் உலகப் போரில் ராணுவ வீரர்கள் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து பாட்டிலில் போட்டு அதன் வெளிச்சத்தைப் படிக்க, எழுத பயன்படுத்தினர்.
•முதன்முதலாக பூமியின் சுற்றளவைக் கண்டறிந்தவர் ராத்தோஸ்தனிஸ் என்பவர்.
•ஆசியாவின் முதல் விளையாட்டுக்கான பல்கலைக்கழகம் புனே நகரில் உருவாக்கப்பட்டது.
•இந்தியாவின் தேசிய விலங்காக புலியை 1972-ஆம் ஆண்டு அறிவித்தார்கள்.
•இந்தியாவில் (ஆங்கிலேயர்களின்) கிழக்கு இந்தியக் கம்பெனி துவங்கிய ஆண்டு 1600 ஆகும்.
•ஐ.நா.பல்கலைக்கழகம் டோக்கியோ நகரில் உள்ளது.