உலகளவில் அநேக வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் கொண்டே இயங்கி வருகிறது. தற்போது பெட்ரோல் டீசல் கிடைத்தாலும் பல்வேறு நாடுகளில் தட்டுபாடுகள் இருந்து கொண்டு வருகிறது. மேலும் எதிர்காலத்தில் பெட்ரோல்-டீசலுக்கான வளங்கள் இல்லாமல் கூட போகலாம் என்று ஆய்வுகள் சொல்கிறது. அப்படி செல்லும் பட்சத்தில் பெட்ரோல் டீசலுக்கு பதிலான மாற்று வழியை பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. குறிப்பாக வாகனங்களுக்கு பேட்டரி கார், காஸ் கொண்டு இயங்கும் வகையில் வாகனங்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் உலகளவில் கார் தயாரிப்பில் இருக்கும் முன்னணி நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்களது நிறுவன கார்களை மாற்று வழியில் அதாவது பெட்ரோல்,...
Wednesday, 20 November 2013
நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!
உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்பு குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “corpus callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகள் என மூளையை கொண்டுள்ளது. இடது பாகம் உடலின் வலது...
மோடிக்கு நோ விசா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீ்ர்மானம்!
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர். மதசுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மோடிக்கு விசா மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்று அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த தீர்மானம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தங்களுக்கு நீதி கோரி வருவதையும் குறிப்பிட்டுள்ளது.குஜராத்தில் கடந்த 2002–ம் ஆண்டு கலவரம் நடந்தது. அதில் ஏராளமானவர்கள் பலியானார்கள்....
பெங்களூரில் பிஸியான இடத்தில் ஏடிஎம் செண்டரில் வெட்டப்பட்ட பெண் (வீடியோ)?
பெங்களூரில் கார்ப்பரேசன் சர்க்கிள் என்னும் இடம் மிகவும் பிஸியான இடம், இந்த இடத்தில் இருந்த ஏடிஎம் செண்டரில் நேற்று காலை 7.30 மணிக்கு புகுந்த ஒருவன் கையில் துப்பாக்கி கத்தியோடு மிரட்டி பணம் பறிக்க முயன்றான், ஆனால் 44 வயதான அந்த பெண் கொடுக்க மறுத்ததால் அந்த பெண்ணை வெட்டிவிட்டு சென்று விட்டான், வெட்டப்பட்ட பெண் மயக்கமடைந்து கிடந்தார், பின் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஏடிம் செண்டரின் ஷட்டரை மூடிவிட்டு நடந்த கொடூரம் பெங்களூர் மக்களை குறிப்பாக பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளத...
"பரம்பரை "யின் உண்மையான பொருள்!
நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது என்று சொல்வதுண்டு...பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், "தலைமுறை தலைமுறையாக"என்பதே உண்மை பொருள் ஆகும்.அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..பரன் + பரை = பரம்பரை நமக்கு அடுத்த தலைமுறைகள்:நாம் மகன் + மகள் பெயரன் + பெயர்த்தி கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி நமக்கு முந்தைய தலைமுறைகள்:
நாம் - முதல் தலைமுறை தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை பரன் + பரை - ஏழாம் தலைமுறை ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று...