யானைகள், மற்ற விலங்குகளைப் போலல்லாமல், ஒருவர்
சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று புதிய ஆய்வொன்று
கூறுகிறது.
ஜிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம்,
யானைகள், முழுமையாக நிரப்பப்பட்ட உணவு வாளிகளை, மனிதர்கள் சுட்டிக்காட்டும்போது,
காலியான உணவு வாளிகளிடமிருந்து பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டவையாக இருப்பதை
ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.
சுட்டிக்காட்டும் சைகை, மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் உதவி மற்றும் ஆதரவு,
உயிர்வாழ மிகவும் முக்கியமாக உள்ள சிக்கலான சமூகங்களில் , மிகவும் பயனுள்ள ஒரு
தகவல் தொடர்புச் சாதனம் என்று மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ந்திருக்கின்றன
என்பதை இது...
Friday, 11 October 2013
அமைதிக்கான நோபல் பரிசு!
2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசானது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.7.70 கோடி ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான...
தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு!
தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்நிலையில் உலக அழகி ஒலிவியா செருப்பு மற்றும் சந்தன பை ஒன்றை அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கிருந்த நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாகவும் உலக அழகி மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
உலக அழகி ஒலிவியா கல்போ. 10 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வைத்து பிரபல செருப்பு தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.நேற்று உலக அழகி...
“ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளிக்கும்!” – சூர்யா ஸ்டேட் மென்ட்!
சூர்யா – கெளதம் மேனன் இருவரும் இணைந்து ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்நிலையில் மீண்டும் ’துருவ நட்சத்திரம்’ என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.அதற்குப் பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்த. நிலையில் தற்போது சூர்யா, தான் கெளதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 2012ம்...
ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக ஈரோட்டில் யாரும் தராத விலையில் அவர்கள் தருவதாகவே நினைக்கிறேன். சாப்பிடச்சென்ற போது கவனித்ததில் ஆச்சர்யமாக இருந்தது, தங்கள்...