.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 22 September 2013

சினிமா நூற்றாண்டு 2–ம் நாள் நிகழ்ச்சி: சென்னையில் திரண்ட கன்னட– தெலுங்கு நடிகர், நடிகைகள் !

    இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேற்று இவ்விழாவை தொடங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியாக தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை 2–ம் நாள் நிகழ்ச்சியாக கன்னட திரைப்பட விழா நடந்தது. கர்நாடக மந்திரிகள் கே.ஜே. ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, உமாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். பின்னர் கன்னட நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கன்னட மொழி பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனம் ஆடினார்கள். விழாவில் ஏராளமான கன்னட ரசிகர்கள் கலந்து கொண்டார்கள். இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு திரைப்பட விழா நடக்கிறது. இதில் ஆந்திர துணை முதல்வர் தாமோதர்ராஜா நரசிம்மா,...

இந்து மத கலைக்களஞ்சியம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது!

இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது. 25 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்து மதத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதிய சுமார் ஏழாயிரம் கட்டுரைகளின் 11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது. இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது. தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்திரம், கலாச்சாரம், கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை...

அக்டோபர் 28 ஆம் தேதி மங்கள்யான் ஏவப்படும்!

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விடும் முதல் ஆய்வுக் கோள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், தற்போது இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தமிழோசையிடம் தெரிவித்தார். வானிலை சீராக இருந்தால்...

டிசைனர் குஷனில் குஷியான லாபம்!

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மஞ்சுபாஷிணியின் வீட்டுக்குள் நுழைந்தால், திரும்பின பக்கமெல்லாம் அழகழகான குஷன்கள். சதுரமாக,  வட்டமாக, இதய வடிவத்தில், திண்டு மாடலில்.... இன்னும் விதம்விதமான வடிவங்களில் அசத்தும் அத்தனையும் அழகு குஷன்கள்.கார் வைத்திருப்பவர்களும், வீட்டை ஆடம்பரமாக வைத்திருப்போரும் மட்டும்தான் ஒரு காலத்தில் குஷன் உபயோகிப்பார்கள். இன்று வீட்டுக்கு வீடு  அவற்றின் உபயோகத்தைப் பார்க்க முடிகிறது. ‘‘எம்.ஏ எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன். அடிப்படையில நான் ஒரு பியூட்டிஷியன். அழகு விஷயத்துல  ஆர்வம் அதிகம். அழகழகான கைவினைப் பொருள்கள் பண்றதுலயும் ஈடுபாடு உண்டு. ஒருமுறை ஒரு கடையில குஷன் பார்த்தேன். அதோட  நேர்த்தியும், டிசைனும்...

கற்பனையும் கைத்திறனும்: வீட்டுக்குள் மரம்!

என்னென்ன தேவை? பிவிசி பைப் - 1 (விருப்பமான சைஸில் கட் செய்து வாங்கிக் கொள்ளவும்) கயிறு - தேவையான அளவு பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பவுடர் - 1 கிலோ (செராமிக் பவுடரும் பயன்படுத்தலாம்) ஃபெவிகால் - 1 பாட்டில்அக்ரிலிக் பெயின்ட் - (பிடித்த வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளவும்)பிளாஸ்டிக் இலைகள் - தேவையான அளவு (கடைகளில் கிடைக்கும்) மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி - 1பிளாஸ்டிக் பூக்கள் - ஒரு கொத்துகூழாங்கற்கள் - தேவைக்கேற்ப பிரஷ் - 1. “மிரட்டும் அலங்காரங்கள் வேண்டாம்... ஆடம்பரமான பொருள்களை அறைக்குள் திணித்து அடைக்க வேண்டாம்... கலைநயம் மிளி ரும் சின்னச்  சின்னப் பொருள்கள் போதும்... கலையழகு வீட்டில் தாண்டவமாடும். அதற்கு நிச்சயம் உதவும்...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top