தலைவா, சிங்கம்-2 வை முறியடித்து அதிக விலைக்கு அள்ளப்பட்டுள்ளது அஜித்தின் ஆரம்பம்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம்.
இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யா மூவிஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட முடிவு செய்தனர். ஆனால் தற்போது அந்த முடிவை ஒத்திவைத்துள்ளனராம்.
இந்நிலையில் கோவை திருப்பூர், ஊட்டி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் படத்தின் விநியோக உரிமையை காஸ்மோ பிக்சர்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம்.
தலைவா, சிங்கம்-2...
Saturday, 31 August 2013
கறிவேப்பிலை மகிமைகள்!
சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலந்தொட்டே நம் நாட்டில் உள்ளது. தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளான கறி, இரசம் போன்றவற்றிலும், வடை, முறுக்கு போன்ற திண்பண்டங்களிலும் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.கறியில் போடும் இலை என்பதாலும், அந்த இலையின் தோற்றம் வேப்பிலையின் தோற்றத்தை ஒத்திருப்பதாலும் கறி + வேம்பு + இலை = கறிவேப்பிலை என பெயர் பெற்றுள்ளது. “கறி” எனும் தமிழ் சொல்லை ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டதைப் போலவே, கறிவேப்பிலை எனும் சொல்லும் (Curry leaf) தமிழ் வழி ஆங்கிலம் சென்ற ஒரு சொல் ஆகும்.”கறிவேப்பிலை” எனும் சொல் கறுவேப்பிலை, கறுகப்பில்லை, கறுகப்பிள்ளை, கறிப்பில்லை என பலவேறு...
இரத்தத்தை உறையவைக்கும் மருந்து தயார்!
விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள் மரணத்துக்கு அதிக ரத்த போக்கே முக்கிய காரணமாக இருக்கிறது. ரத்தபோக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புகளை பெருமளவில் தவிர்த்து விடலாம். இதற்காக புதிய மருந்து ஒன்றை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
ஜப்பானில் உள்ள தேசிய ராணுவ மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இதில் நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டுபிடித்தனர். அந்த மருந்தில் கண்ணுக்கு தெரியாத நுட்பமான பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை உடலில் செலுத்தியதும் ரத்தநாளத்தில் சேதமடைந்த பகுதிகளை அடைத்துக் கொள்ளும். இதன் மூலம் ரத்த கசிவு உடனடியாக தடுக்கப்படும்.
தற்போது விலங்குகளுக்கு...
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி வாய்ப்பு!
மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) என்ற பெயரால் நம்மால் அதிகமாக அறியப்படுகிறது. பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர் சர்வ தேச அளவில் நியூக்ளியர் ரிசர்ச் துறையில் அறியப்படுகிறது. இந்த மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகளும் காலி இடங்களும்: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 69ம், லேபரட்டரி பிரிவில் 41ம், லைப்ரரி சயின்ஸ் பிரிவில் 4ம், கெமிக்கல் பிளாண்ட் ஆப்பரேட்டர் பிரிவில் 7ம், பிட்டர் பிரிவில் 17ம், மில் ரைட் பிரிவில் 3ம், மெஷினிஸ்ட் பிரிவில் 13ம், வெல்டரில் 9ம், டர்னரில் 4ம், ஏ.சி., மெக்கானிக்கில் 24ம், இன்ஸ்ட்ரூமென்டேஷனில்...
டீசல்,மண்ணெண்னை விலை உயரப்போகிறது!
டீசல்,மண்ணெண்னை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயரப்போகிறது.ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
பெட்ரோலிய துறை அமைச்சர் இது தொடர்பாக நிதி அமைச்சர் பி.சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார்..அந்த சந்திப்பின் போது பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் இந்த வருடம் மட்டும் 180000 கோடி இழப்பு ஏற்படும் அதை ஈடுகட்ட விலை உயர்வு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
விலையை உயர்த்த வேண்டும் என பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.டீசல் விலை ஐந்து ரூபாய்...