இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 20
விழுக்காட்டினர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில்
வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள
சத்ரபதி சாஹீஜி மருத்துவப் பல்கலைக்கழகம், புதுவையில் உள்ள ஜிப்மர்
மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும்
இணைந்து 60 வயதிற்கு மேல் வாழும் மக்களின் மனநோய் தொடர்பான ஆய்வில்
ஈடுபட்டு வந்தனர்.இந்த ஆய்வின் முடிவு உலக மனநல தினமான அக்டோபர் 10 அன்று
வெளியிடப்பட்டது. இந்த முடிவின்படி 60 வயதிற்கு மேற்பட்டவர்களில்
நகரங்களில் 17.3 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் 20
விழுக்காட்டினரும் ஒருவகை மனநலம் சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்று தெரிய வந்துள்ளது.
இந்திய மக்களின் சராசரி
ஆயுட்காலம் 1947ஆம் ஆண்டு 32 வயதாக இருந்தது. அது 2011ஆம் ஆண்டு 63.4 ஆக
உயர்ந்தது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 7.1
விழுக்காடாக உள்ளது.
இதேபோல் வரும் 2050ஆம் ஆண்டுக்குள்
இந்தியாவின் மக்கள்தொகை ஒட்டுமொத்தமாக 55 விழுக்காடு வரை வளர்ச்சியை
எட்டக்கூடும் என தெரிய வந்துள்ளது. அப்போது 60 வயதிற்கு மேற்பட்ட
முதியவர்களின் எண்ணிக்கை 326 விழுக்காடாகவும், 80 வயதிற்கு மேற்பட்ட
முதியோரின் எண்ணிக்கை 700 விழுக்காடாகவும் உயரும் வாய்ப்புள்ளது என்றும்
அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
தற்போது 1.71 கோடி
பேர் மனநோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். வரும் காலங்களில் இந்த
எண்ணிக்கையில்.............
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....