.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 6 January 2014

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?

மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.  சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை...

தெரிந்து கொள்வோம்..!

தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது. 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா. பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும். சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை. காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து. மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம். பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்! தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை....

``அப்பா`` ஆன “விக்ரம்``...!

ஷங்கர் இயக்கத்தில் “விக்ரம் “நடித்துள்ள படம் “ஐ”. இந்த படத்துக்காக கடந்த இரண்டு வருடங்களாக கடினமாக உழைத்து வந்த விக்ரம், தற்போதுதான் அந்த மேக்கப்பை கலைத்து விட்டு, புதிய படங்களுக்காக கதை கேட்டு வருகிறார்.தாண்டவம், ராஜபாட்டை உள்பட சில படங்கள் தோல்வி காரணமாக இப்போது ரொம்பவே உஷாராகி வருகிறார் விக்ரம். அவர் சில நாட்களாக நடித்த “கரிகாலன்” படமும் கிடப்பில் போடப்பட்டதால், இனி அதுபோன்ற பிரச்னைகள் தனக்கு ஏற்படக்கூடாது என்றும் கவனமாக செயல்பட்டு வருகிறார்.இந்த நிலையில் மற்ற மொழிகளிலும் வெளியான தரமான கதைகளாக இருந்தாலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் விக்ரம், சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்த “த்ரிஷ்யம்” படத்தை பார்த்து அசந்து விட்டார்....

விஜய் அஜித்துடன் மோதும் சத்யராஜ்..!

நக்கல் மன்னன் சத்யராஜ் நடித்துள்ள கலவரம் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.சத்யராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் கலவரம் திரைப்படத்தை எஸ்.டி.ரமேஷ்செல்வம் இயக்கியுள்ளார். ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இக்கதை இருக்குமென்றும் கூறப்படுகிறது. யுனிவர்சல் புரொடக்சன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் முறையே ஜில்லா மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்கள்வெளியாகவிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும், ஏற்கெனவே இப்படங்களுக்கான முன்பதிவு தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து...

விஜயுடன் - தனுஷ் .....!

இளைய தளபதி விஜயுடன் தான் பாட்டுப்பாடி, நடனமாடி மகிழ்ந்ததாக தனுஷ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.சமூக ஊடகமான ட்விட்டரில் தனுஷ் பெரும்பாலும் ஏக்டிவாக இருக்கிறார். அவரது அப்டேட்டுகளை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள டிவிட்டர் அவருக்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது. சமீபமாக தனுஷின் டிவிட்டர் ஐடி வெரிஃபை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இளையதளபதி விஜயுடன் அவர் ஆடிப்பாடி மகிழ்ந்ததாக விஜயுடன் தான் இருக்கும் புகைப்படத்தைத் டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். nஉடனே விஜய் ரசிகர்கள் இளையதளபதியைத் தங்களுக்கு ஒரு ஹாய் சொல்லச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். உடனே விஜய் தனது ரசிகர்களுக்கு ஹாய் சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்தார்....
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top