.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 29 December 2013

Sunday Special - உருண்டை குழம்பு....





Sunday Special - உருண்டை குழம்பு....


தேவையான பொருட்கள் :

கடலைபருப்பு - 1/2 கப்

துவரம்பருப்பு - 1/2 கப்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

சின்னவெங்காயம் - 7(அ) பெரியவெங்காயம் - 1

பட்டைமிளகாய் - 4

மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்


குழம்புக்கு தேவையானவை :


புளி - எலுமிச்சையளவு

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்

தக்காளி - 1

சின்னவெங்காயம் - 8

உப்பு தேவையான அளவு

சோம்பு தூள் - 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 மேசைகரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :


கடலை பருப்பு, துவரம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி உப்பு, பட்டை மிளகாய், சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி அரைத்த பருப்புடன் சேர்க்கவும் இதனுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வைக்கவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெயிட்டு கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து தாளித்து குழம்பு கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பின் ஒரு பருப்பு உருண்டையை எடுத்து கொதிக்கும் குழம்பில் போட்டு சிறிது கொதி வந்தவுடன் உருண்டையை ஒரு கரண்டியால் எடுத்து பார்க்கவும்.

உருண்டை கரையாமல் வந்தால் மேலும் கொதிக்க கொதிக்க உருண்டைகளை போட்டு வேகவைத்து இறக்கவும்.

 (உருண்டைகள் கரைந்தால் இட்லி தட்டில் வைத்து லேசாக வேகவைத்து பின் குழம்பை நன்றாக சுண்டிய பின் உருண்டைகளை அதில் போட்டு இறக்கலாம்)

கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம் - எச்சரிக்கை!!!






பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்

 இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்...

சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 3 நிலைகள் உள்ளன.

முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும். 3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. 


 
இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். 



இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

 

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின், ‘ஸ்லிங்’ எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது…

 

இவையெல்லாம் பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்

இலவசமாக பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!! ஏர்டெல்லின் அசத்தலான ஆஃபர்...!




இனி இலவசமாக பேஸ்புக்கை பயன்படுத்தலாம்!! ஏர்டெல்லின் அசத்தலான ஆஃபர்...
சமூக வலை தளமான பேஸ்புக் பயன்பாட்டை ஒன்பது மொழிகளில் நாடு முழுதும் உள்ள தன் ப்ரி-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக வழங்க உள்ளதாக பார்தி ஏர்டெல்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 "இது பேஸ்புக் தளத்தை நாடு முழுதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஒன்பது மொழிகளில் இலவசமாக பயன்படுத்த வழங்கும்" என அந்நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய மொழிகள்

 மொபைல் போன்களில் பேஸ்புக் உபயோகிப்போர் (ப்ரௌசர் அல்லது நேரடி அப்ளிகேஷன்) இனி ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இலவசமாக பயன்படுத்தலாம் என வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட கால சலுகை


"ஒரு குறிப்பிட்ட கால சலுகையாக வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 30 எம்பி வரையிலான இந்த இலவச பயன்பாட்டை பெற்று மகிழ ஏர்டெல் அனுமதிக்கும்" என அந்நிறுவன அறிவிப்பு தெரிவிக்கிறது.

மென்பொருள்

 இந்த புதிய சேவை ஜாவா, ஆண்ட்ராயிடு, ஐபோன் மற்றும் விண்டோஸ் முதலியவற்றில் இயங்கும் சாதனங்களுக்குப் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொபைல் இண்டர்நெட் சேவை


 ஏர்டெல் நிறுவனம் மொபைல் இண்டர்நெட் சேவையின் முலம் அதிகப்படியான லாபத்தை அடைகிறது. டிராய் எஸ்எம்எஸ் கட்டுப்பாடு விதிகளை விதித்தப் பிறகு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்தது. இதனால் மொபைல் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்தது. அதன் மூலம் ஏர்டெல் 6 மடங்கு அதிக லாபத்தை அடைந்தது.

தாயுமானவன் என் தந்தை...!




எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்...

பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்...

பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்...

இருபத்திரண்டுவயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்...

இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்...

எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்...

எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்...

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது. என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி தியாகம் செய்த தாயுமானவன் என் தந்தை...!

டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!




டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!

டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

Soft Data Cable

USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.

இந்த அப்ளிகேசனை(software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

Download Link – தரவிறக்கச்சுட்டி

Install Soft Data Cable ( http://goo.gl/0jbJaz )

மேற்கண்ட இணைப்பின் வழிச்சென்று உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்போனில் இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவிடுங்கள்.

அடுத்து அந்த பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள் கணினி, டேப்ளட் பிசி, மொபைல் போன்ற சாதனங்களுடன் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

இதன் மூலம் எந்த ஒரு கம்பி இணைப்பு இல்லாமலேயே, கணினிக்கும், மொபைலுக்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் வேண்டிய தகவல்பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷனின் பயன்கள்: (ஆங்கிலத்தில்)

BENEFITS WITH SOFTWARE DATA CABLE
The fewer cables to carry the better
The computer doesn’t need to have drivers it does need installed
Send photos, music, videos, apps etc. to other phones, tablets or TV anytime, anywhere
Auto-sync photos and other important files to computer or cloud storage (on a daily, weekly basis to backup data)
Extend mobile storage space without any cost

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top