திருமணம் முடித்த கையோடு புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க......
திருமண ஷாப்பிங், பியூட்டி பார்லர் என்று குஷியாக இருக்கும் புதுப்பெண்கள், அடுத்த மாதம் முதலே ஒரு குடும்பத்தைக் கட்டி ஆளும் பொறுப்புக்கு பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். குறிப்பாக முன்பின் அறிமுகமில்லாத வீட்டின் நிதி நிர்வாகம் அவர்கள் கைக்கு வரும். கணவரின் சம்பளம், இன்ஷூரன்ஸ், லோன், வரி என்று அவற்றை ஆரம்பம் முதலே திறம்பட திட்டமிட்டு, புகுந்த வீட்டில் கைதட்டல் வாங்க இங்கே அணிவகுக்கின்றன அத்தியாவசியமான நிதி ஆலோசனைகள்...
தனிக்குடித்தன தயாரிப்புகள்!
திருமணம் முடித்த கையோடு, ஃபர்னிச்சர் முதல் பாத்திரங்கள் வரை வாங்க வேண்டியிருக்கும். தனிக்குடித்தனம் என்றால், இது கட்டாயம். இப்படி வாங்கும்போது, நீண்டகாலத்துக்கு பயன்தரும் வகையில் யோசித்து வாங்குவது நல்லது.
வீட்டுக்கு வந்து போகும் பெற்றோர், உறவினர்களுக்கு ஏற்றபடியும், குழந்தைகள் வளரும்வரை...
Saturday, 28 December 2013
ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?
14:44
ram
No comments
ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?
அக்காலத்தில் எல்லாம் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமானால், பெயிண்ட் பிரஷ் தான் பயன்படுத்துவோம். ஆனால் தற்போது மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெயிண்ட் அடிக்க ஸ்ப்ரே போன்ற ஒரு கருவி வந்துள்ளது. இப்படி வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால் நல்லதல்ல என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஏன் என்று தெரியுமா?
அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று வீட்டின் சுவற்றிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால், அது சீக்கிரம் போவதோடு, உடலுக்கு தீங்கையும் விளைவிக்கும். இங்கு அந்த ஸ்ப்ரே பெயிண்ட்டை எதற்கு பயன்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ஸ்ப்ரே பெயிண்ட் அடிப்பதை தவிர்த்திடுங்கள்.
ஏன் வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்காதன்னு சொல்றாங்க தெரியுமா?
* வீட்டிற்கு ஸ்ப்ரே பெயிண்ட் அடித்தால்,...
பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி...
14:37
ram
No comments
பெஸ்ட் கன்ட்ரோல் - கரப்பான்பூச்சி, எலி, பல்லி, எறும்பு...
இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலிகள் என்று பெரிய பட்டியலே இருக்கும்...
அதில் பூச்சிகள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டாயம் இடமுண்டு. ஆம்...
கரப்பான்பூச்சி, பல்லி, எலி, எறும்பு, மூட்டைப்பூச்சி என வீட்டில் வாழும் 'ஜீவன்'களின் தொல்லை... தாங்க முடியாத தொல்லையே.
'அடச்சே...
என்ன செய்தாலும் இதையெல்லாம் ஒழிக்க முடியலையே' என்று புலம்பிக்கொண்டே இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு, அவற்றை விரட்டி
அடிக்கும் வழிகள்...
கெட் அவுட் கரப்பான்பூச்சி!
''பொதுவாக ஈரம், இருட்டுள்ள இடங்களிலும், சமையலறையிலும் கரப்பான்பூச்சியின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லி ஸ்பிரே உள்ளிட்ட ரசாயன பொருட்களை உபயோகித்து விரட்ட முயற்சிக்கும்போது, அந்த ரசாயனங்கள் காற்றில் கலந்து... அரிசி, மாவு, மசாலா பொருட்கள் போன்றவை திறந்திருந்தால், அதில் கலந்துவிட அதிக...
உன்னதமான உறவு!!!
14:13
ram
No comments
ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும் ,ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு .ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும் ,கசப்பையும் ,இனிப்பாக்க வல்லது இவ் உறவு .புது புது உறவுகளை உருவாக்க கூடியது .இதை விட புனிதமான உறவும் இல்லை நெருக்கமான உறவும் இல்லை, இது ஒரு தெய்விகமான உறவு .
இன்றைய காலகட்டத்தில் நமது அறியாமையால், நமக்கு நாமே ஏற்ப்படுத்தி கொள்கின்ற பொருளாதார சிக்கல்களினால், ஆளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகளால் , தனது ஆதிக்கமே நடைபெற வேண்டுமென்ற தன்முனைப்பால் உண்மையான உறவுகள் பல உடைந்து போகின்றது .
ஒருவரின் பெருமையை ஒருவர் உணராத சிறுமையால் இன்று பரவலாக பல இல்லங்களில் கணவன் மனைவி உறவு தன் புனிதத்தை இழந்து புழுதியாகிவிட்டது ,இந்த உறவின் வீழ்ச்சியால் தான் உருவாகிறது ,சமூகதின் அத்தனை வீழ்ச்சிகளும் .உடல்களை பகிர்ந்து கொண்ட அளவிற்கு உள்ளங்களை பகிர்ந்து...
நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?
14:07
ram
No comments
சென்ட்டர் ஃபர் சிஸ்ட்டம்ஸ் நியூராலஜி, பாஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது. அங்கே ஆராய்ச்சி செய்யும் லாங்குயன் லின் மற்றும் ஜோ டிரெய்ன் என்ற இரு நரம்பியல் வல்லுநர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மூளையில் எப்படி நினைவுகள் பதிவாகின்றன என்பதை ஓரளவுக்கு விளக்குவதாக உள்ளது. நரம்புக்கூட்டத்தின் சமநேர மின்துடிப்பே நினைவுகள்.
நேரடியாக மின் முனைகளை எலிகளின் மூளையில் பதித்து, அவை இயல்பாக நடமாடும்போதே நினைவுகள் எப்படி பதிகின்றன என்பதை நவீன கருவிகள் கொண்டு ஆராய்ந்தனர். தக்க புள்ளியியல் கணக்குகளைப் பயன்படுத்தி தகவல்களை தொகுத்திருக்கின்றனர்.
நரம்பு செல்களின் வழியாகப் பாயும் மின்சார ஒட்டம்தான் நினைவுகள் என்பதை பொதுவாக எல்லோருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்படி ஒரே சமயத்தில் துடித்து செயல்படும் நரம்பு செல் கூட்டங்களே குறிப்பிட்ட நினைவுகளுக்குக் காரணம் அவற்றில்தான் நினைவுகள்...