
ரக்ஷாபந்தன் எனும் சகோதர திருநாள் நம் இந்திய திருநாட்டில் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் அடிப்படையான வரலாற்று செய்தியை நாம் இங்கு காண்போம். நம் வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.
தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர்.
தங்களுக்கும் சகோதரி...