.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 December 2013

ஸ்ஸ் ஸப்பா...ரொம்ப கஷ்டம்.. முடியல...





1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது.


2.தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாறியே பாவனை பண்றது.


3.கடும் குளிர்ல விடிய காலலைல எழுந்தறிப்பது.


4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது.


5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது.


6.புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது.


7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது.


8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது.


9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல அரை நாள் இருப்பது


10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து டிவி ரிமோட்ட வாங்கறது.


11. கம்ப்யூட்டர் ல எதையாவது கிளிக் செஞ்சிட்டு ஓபன் ஆகற வரை இன்னொரு முறை கிளிக் செய்யாமல் இருப்பது.


12. தலைவன் எப்ப கைய தூக்குவான், கால தூக்குவான் நாமா கத்தலாம்னு காத்திருக்கிற கூட்டத்துக்கு நடுவுல தியேட்டர்ல ஒரு சினிமா பார்ப்பது.

தன்னில் எது சமூக மாற்றம் ? கவிதை!




தன்னில் எது சமூக மாற்றம் ?

தேவைக்கு அதிகமாய்
 எதையும்
 சேர்க்காமல் இருப்பது.


வீட்டில் எது சமூக மாற்றம் ?
அவரவர் வீட்டுக்குப்பையை
 அடுத்தவீட்டு வாசலுக்கு
 தள்ளாதிருப்பது.


வீதியில் எது சமூக மாற்றம் ?
மற்றவர் வைத்த
 மரங்களெனினும்
 பற்றுவைத்து பராமரிப்பது.


சாலையில் எது சமூக மாற்றம் ?
பின்னே ஒலி எழுப்பும்
 வாகனத்திற்கு
 முன்னே செல்ல வழிவிடுவது.


ஊரில் எது சமூக மாற்றம் ?
இன்னொரு இனத்தின்
 இழவிற்கு
 கண்ணீரோடு கலந்துகொள்வது.


மாநிலத்தில் எது சமூக மாற்றம் ?
வீணாய் கடல்சேரும் முன்
 தானாய் மனமுவந்து
 தண்ணீரை திறந்துவிடுவது.


நாட்டில் எது சமூக மாற்றம் ?
மரபணுக்களில் ஊறிப்போன
 ஊழல் தொற்றை
 அறவோடு அழிப்பது.


உலகில் எது சமூக மாற்றம் ?
உரிமைக்காக போராடும்
 உணர்வாளர்களுக்கு
 உண்மையாக குரல்கொடுப்பது.

விருப்பமே ஆசையின் காரணம் - கவிதை!





விருப்பமே ஆசையின் காரணம்


 ஆசையே கடனுக்கு காரணம்


 அன்பே கடமைக்கு காரணம்


 பண்பே உயர்வுக்கு காரணம்


 பணமே உழைப்பிற்கு காரணம்


 பகையே போருக்கு காரணம்


வெற்றியே விருப்பத்திற்கு காரணம்


 அடிமைத்தனமே விடுதலைக்கு காரணம்


 ஆதிவெடிப்பே ஓசையின் காரணம்


 ஓசையே தமிழுக்கு காரணம்


 தமிழே உலகமொழிகளுக்கு காரணம்


 பக்தியே அருளின் காரணம்


 நிறைவே பூரணத்தின் காரணம்


 பிறப்பே தந்தையின் காரணம்


 வாழ்வே தாயின் காரணம்


 முக்தியே இறைவனின் காரணம்


 முடிவே உனது காரணம்.

பயனில்லாத ஏழு!!!





ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,



அரும்பசிக்கு உதவா அன்னம்,




தாகத்தைத் தீர்க்காத தண்ணீர்,




தரித்திரம் அறியாப் பெண்டிர்,




கோபத்தை அடக்கா வேந்தன்,




குருமொழி கொள்ளாச் சீடன்,




பாவத்தைத் தீராத் தீர்த்தம்,




பயனில்லை ஏழும்தானே.


சஹாரா கண்...




சஹாரா கண்...





மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம்


ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது....



 கண் போன்று தோன்றுவதால்,



சஹாரா கண்



என்ற பெயர் அதற்கு வந்தது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top