.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 14 December 2013

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…!!





திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.


இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற "துர்கானா ஏரி" கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.


மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.


இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று "என்வைட்டினெட்". இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் "திரும்ப வராது" என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.


முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.


கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.


இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர்.


ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.


இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்' என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.


பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.


இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை

Friday, 13 December 2013

பெண்களின் வாழ்க்கையை சிதைக்கும் ஆண் நட்பு...



பழகும் போதே மொத்தத்தில் ஆண் நண்பர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். தவறான நட்பை ஆரம்பத்திலேயே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்து கொண்டு பழகுங்கள். பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில் தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் தான் பெண்களுக்கு ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள்.


பள்ளி வயதில் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும் அவர்கள் கல்லூரிக்கு சென்றதும் சுதந்திரமாக ஆண் நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கிறது. சிலருக்கு பெற்றோரை விட்டு தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது. கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது.


இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் ஃபிரண்டாக` மாறி விடுகிறான். நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான் என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு அன்பை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும் போது தான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.


பல பெண்கள். எவ்வித பிரச்சனையும் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு வேறு ரூபத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள். பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை.


மனைவி இயல்பாகவே தன் பாய் ஃபிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது.


இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய் ஃபிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேக அம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.

சப்போட்டா பழம் பற்றிய தகவல்.




சத்தான பழம் என்றுதான்
 சப்போட்டா பற்றி அனைவரும்
 நினைத்து கொண்டிருக்கின்ற
 னர். ஆனால்
சருமத்தை மிருதுவாக்கும்
 தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள்
 தெரிவித்துள்ளனர்.

நம்
 இளமைக்கும் அழகுக்கும்
 சப்போர்ட் தரும் சப்போட்டா பழம்
 பற்றி சில சுவையான தகவல்கள்
 உங்களுக்காக.

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28
மில்லி கிராம் கால்சியமும், 27
மில்லிகிராம் பாஸ்பரசும்
 உள்ளது. எனவே தினமும்
 இரண்டு சப்போட்டா பழம்
 சாப்பிட்டால்
 வளர்ச்சி அதிகரிக்கும்,
எலும்புகள் வலுவடையும்,
சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா உடம்பில் உள்ள
 தேவையில்லாத
 கொழுப்பை குறைக்கும்.
சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட
 பிடிக்காதவர்கள்,
இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர்
 பால் சேர்த்து, மிக்ஸியில்
 அடித்து மில்க் ஷேக்
 செய்து சாப்பிடலாம்.

ஒல்லியாக
 தெரிவது சிலரது அழகுக்கு குறைச்சலாக
 இருக்கும். அவர்கள் பூசினார்
 போல தோற்றப் பொலிவுடன் மாற
 சப்போட்டா பழம் மிகுந்த
 உதவிபுரிகிறது.

தோல்
 நீக்கியா சப்போட்டா பழத்துடன்
 சிறிதளவு பால்
 சேர்த்து அரைக்கவும். அந்த
 விழுதுடன் 2 டீஸ்பூன்
 வெள்ளரி விதைப் பவுடன்
 கலந்து குளிப்பதற்கு முன் கை,
முழங்கை விரல்களில் நன்றாக
 பூசி குளிக்கவும்.

சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம்
 கைகளை பொலிவாக்கி,
பூசினாற் போன்ற
 தோற்றத்தை ஏற்படுத்தும்.
கன்னம் ஒட்டிப்போய்
 எலும்பு தூக்கிக்கொண்டிர
 ுக்கிறதா? கொழு,
கொழு கன்னங்கள் பெற
 சப்போட்டா பழ
 சதையை எடுத்து அத்துடன்
 ரோஸ் வாட்டர், சிறிது சந்தன
 பவுடர் கலந்து கிரீமாக தயார்
 செய்து கொள்ளவும். இந்த
 கிரீமை முகம் முதல்
 கழுத்துவரை இட, வலமாக தடவ
 வேண்டும்.

காய்ந்த பின்னர் இளம்
 சூடான நீரில் முகம் கழுவ
 வேண்டும். வாரம்
 இருமுறை இதுபோல
 செய்து வர பளபளவென கன்னம்
 மின்னும்.

இவை இரத்த நாளங்களில்
 கொழுப்பு படிவதைத் தடுக்கும்
 சிறப்பு செயல்பாடு உடையன
 ஆகும். கொலஸ்டிரால்
 பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்.
தினம் இரண்டு சப்போட்டா பழங்கள்
 சாப்பிடுவது நலன்
 பயக்கும்.

இதயம் சம்பந்தமான
 கோளாறுகளுக்கு ஏற்ப
 பாதுகாக்கும் தன்மையும்
 சப்போட்டா பழத்திற்கு உண்டு என
 அமெரிக்காவில் மேற்கொண்ட
 ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது
.சப்போட்டா பழச்சாறுடன்,
தேயிலைச் சாறும் சேர்த்துப்
 பருகினால்,
இரத்தபேதி குணமாகும்.

சிந்தனைகள் பத்து..!



 *படித்தவனிடம் பக்குவம் பேசாதீர்கள்,
பசித்தவனிடம் தத்துவம் பேசாதீர்கள் .


 *மகான் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.


 *உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.


 *வாய்ப்பு ஒரு முறைதான் வரும்,
இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.


 *பகைவரையும் நண்பனாக கருதுங்கள், பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.


 *ஆசைகள் வளர வளர தேவைகள்
 வளர்ந்து கொண்டே போகும்.


 *எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ
 அவ்வளவு குறைவாகப் பேசுங்கள்.


 *மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.


 *கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.


 *அதிகம் வீணாகிய நாட்களில் நாம்
 சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

ஆத்திச்சுடி மொத்தம் 108:-



ஆத்திச்சுடி மொத்தம் 108:-

1. அறஞ்செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண்ணெழுத் திகழேல்.
8. ஏற்ப திகழ்ச்சி.
9. ஐய மிட்டுண்.
10. ஒப்புர வொழுகு.
11. ஓதுவ தொழியேல்
12. ஒளவியம் பேசேல்.
13. அஃகஞ் சுருக்கேல்.
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப்போல் வளை.
16. சனிநீ ராடு.
17. ஞயம்பட வுரை.
18. இடம்பட வீடெடேல்.
19. இணக்கமறிந் திணங்கு.
20. தந்தைதாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர்செய்.
23. மண்பறித் துண்ணேல்.
24. இயல்பலா தனசெயேல்.
25. அரவ மாட்டேல்.
26. இலவம்பஞ்சிற் றுயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகலா தனசெயேல்.
29. இளமையிற் கல்.
30. அறனை மறவேல்.
31. அனந்த லாடேல்.
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப் படவாழ்.
35. கீழ்மை யகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்ப தொழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட் டொழி.
43. கௌவை அகற்று.
44. சான்றோ ரினத்திரு.
45. சித்திரம் பேசேல்.
46. சீர்மை மறவேல்.
47. சுளிக்கச் சொல்லேல்.
48. சூது விரும்பேல்.
49. செய்வன திருந்தச்செய்.
50. சேரிடமறிந்து சேர்.
51. சையெனத் திரியேல்.
52. சொற்சோர்வு படேல்.
53. சோம்பித் திரியேல்.
54. தக்கோ னெனத்திரி.
55. தானமது விரும்பு.
56. திருமாலுக் கடிமைசெய்.
57. தீவினை யகற்று.
58. துன்பத்திற் கிடங்கொடேல்.
59. தூக்கி வினைசெய்.
60. தெய்வ மிகழேல்.
61. தேசத்தோ டொத்துவாழ்.
62. தையல்சொல் கேளேல்.
63. தொன்மை மறவேல்.
64. தோற்பன தொடரேல்.
65. நன்மை கடைப்பிடி.
66. நாடொப் பனசெய்.
67. நிலையிற் பிரியேல்.
68. நீர்விளை யாடேல்.
69. நுண்மை நுகரேல்.
70. நூல்பல கல்.
71. நெற்பயிர் விளை.
72. நேர்பட வொழுகு.
73. நைவினை நணுகேல்.
74. நொய்ய வுரையேல்.
75. நோய்க்கிடங் கொடேல்.
76. பழிப்பன பகரேல்.
77. பாம்பொடு பழகேல்.
78. பிழைபடச் சொல்லேல்.
79. பீடு பெறநில்.
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
81. பூமி திருத்தியுண்.
82. பெரியாரைத் துணைக்கொள்.
83. பேதைமை யகற்று.
84. பையலோ டிணங்கேல்.
85. பொருடனைப் போற்றிவாழ்.
86. போர்த்தொழில் புரியேல்.
87. மனந்தடு மாறேல்.
88. மாற்றானுக் கிடங்கொடேல்.
89. மிகைபடச் சொல்லேல்.
90. மீதூண் விரும்பேல்.
91. முனைமுகத்து நில்லேல்.
92. மூர்க்கரோ டிணங்கேல்.
93. மெல்லினல்லாள் தோள்சேர்.
94. மேன்மக்கள் சொற்கேள்.
95. மைவிழியார் மனையகல்.
96. மொழிவ தறமொழி.
97. மோகத்தை முனி.
98. வல்லமை பேசேல்.
99. வாதுமுற் கூறேல்.
100. வித்தை விரும்பு.
101. வீடு பெறநில்.
102. உத்தம னாயிரு.
103. ஊருடன் கூடிவாழ்.
104. வெட்டெனப் பேசேல்.
105. வேண்டி வினைசெயேல்.
106. வைகறைத் துயிலெழு.
107. ஒன்னாரைத் தேறேல்.
108. ஓரஞ் சொல்லேல்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top