.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 3 December 2013

நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்யும் தந்தையைப் பார்த்தே அந்த இரண்டு சகோதரர்களும் வளர்ந்தார்கள். குடித்ததில் செலவானது போக மீதமிருந்தது தான் குடும்பச்செலவுக்கு. அது போதவில்லை என்பதால் தாயும் வேலைக்குப் போய் தன்னால் முடிந்ததை சம்பாதித்து வீட்டுக்குக் கொண்டு வந்து குடும்பத்தை சமாளித்தாள். சில சமயம் அவள் சம்பாதித்ததையும் அவள் கணவர் பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வருவதுண்டு. வீட்டில் தினமும் சண்டை, தகராறு, அடி, உதை, அழுகை....


அந்த நிம்மதியற்ற சூழ்நிலையில் வளர்ந்த ஒரு சிறுவன் பிற்காலத்தில் தந்தையைப் போலவே குடிகாரனாக மாறி விட்டான். இப்படி ஆனது ஏன் என்று அவனைக் கேட்ட போது அவன் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் வருத்தத்துடன் சொன்னான். "தினமும் நான் பார்த்து வளர்ந்த அந்த சூழ்நிலை என்னையும் இப்படி ஆக்கி விட்டது"


இன்னொரு சிறுவன் ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதித்து பணம் சேர்த்து அதை வைத்து தொழில் ஆரம்பித்து பிற்காலத்தில் மிகப்பெரிய தொழிலதிபரானான். அவன் வெற்றிக்குக் காரணம் கேட்ட போது அவனும் தன் இளமைக்கால வாழ்க்கையைப் பற்றியும் தந்தையைப் பற்றியும் சொன்னான். "எப்படியெல்லாம் இருந்து விடக் கூடாது என்பதற்கான உதாரணமாக அந்த சூழ்நிலைகள் இருந்தன. அதற்கு எதிர்மாறான ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் சிறு வயதிலிருந்தே எனக்கு ஆழமாக இருந்தது...."


ஒரே விதமான அனுபவத்திலிருந்து இருவரும் இருவேறு படிப்பினைகள் பெற்றதைப் பாருங்கள். எதுவும் நாம் பார்க்கும் விதத்திற்கேற்ப மாறுகிறது. அதைப் பொறுத்தே அதனால் பலனடைகிறோம் அல்லது பாதிக்கப்படுகிறோம்.


ஆங்கிலத்தில் படித்த ஒரு அழகான கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகிறது.


"Two men looked out from prison bars
One saw mud, the other saw the stars"


சிறைக்கம்பிகளின் வழியே வெளியே பார்த்தனர் இரு கைதிகள். ஒருவன் சேற்றைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான். இருந்த இடம் ஒன்று தான். ஆனால் பார்வைகள் போன இடங்கள் வேறு. எதைப் பார்க்கிறோம் என்பதை இருக்கும் இடமும், சூழ்நிலையும் தீர்மானிப்பதில்லை. நாமே தீர்மானிக்கிறோம்.


இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாசிகளிடம் சிக்கி பலவித சித்திரவதைகளை அனுபவித்து உயிர் பிழைத்த எத்தனையோ பேர் போர் முடிவுக்கு வந்த பின்னும் அந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில் மன நோயாளிகளாக மாறி விட்டனர். சகஜ நிலைக்கு வர பலருக்கு கவுன்சலிங், மருந்துகள் தேவைப்பட்டனர். ஆனால் அதே சித்திரவதைகளை அனுபவித்த ஒரு சிலருக்கு அவை ஒரு பாடமாக அமைந்தன. சுதந்திர வாழ்க்கையே மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதையும் அதில் தேவையில்லாமல் கவலைகளில் மூழ்கி வாழ்வை அனுபவிக்க மறப்பது முட்டாள்தனம் என்பதையும் உணர்ந்தார்கள். அந்த நாட்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் பின் எந்த நாளும் நல்ல நாளே என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். சிலர் தங்கள் அனுபவங்களைப் புத்தகமாக எழுதி பெரும் பணம் சம்பாதித்தார்கள். ஒரே விதமான அனுபவங்கள் எத்தனை விதமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள்.


எனவே நான் இப்படியாக மாற மற்றவர்கள் தான் காரணம், சூழ்நிலைகள் தான் காரணம் என்பது மிகப் பெரிய பொய். முன்பு சொன்ன குடிகாரத் தந்தையின் இரு மகன்கள் எதிர்மாறான இருவேறு நிலைகளை அடைய வைத்தது அவரவர் பண்புகளே. இரண்டாம் உலகப் போர்க்கைதிகளில் பலர் மன நோயாளிகளாக மாற, சிலர் பக்குவப்பட்டு மகிழ்ச்சியான மனிதர்களாக மாறியதும், சிலர் அதைப் பற்றி எழுதிப் பணம் பார்த்ததும் அந்த அனுபவங்களை அவர்கள் எடுத்துக் கொண்ட விதத்தினாலேயே. அவர்களை மட்டுமல்ல எவரையும் எதுவாகவும் ஆக்குவது அவரவர் பார்வைகளே.


நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?

சோலார் பேனல் மான்யத்திற்கு ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம்!

 

 வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்–லைனிலேயே விண்ணப்பிக்கலாம். - தமிழ்நாட்டில் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலை போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கவில்லை. இப்போது பரவலாக மழை பெய்வதாலும், தென்மாவட்டங்களில் பலத்த காற்று வீசுவதாலும் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதனால் மின்சார தட்டுப்பாடும் கணிசமாக குறைந்துள்ளது.


இருப்பினும், மின்சார தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு சூரிய மின்சக்தி கொள்கையை வெளியிட்டார். அதன்படி, புதிதாக கட்டப்படும் அரசு அலுவலக கட்டிடங்களில் கண்டிப்பாக சூரிய மேற்கூரை மின் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் படிப்படியாக இந்த அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சோலார் பேனல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் சோலார் பேனல் அமைக்க மாநில அரசு மானியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது.


இதற்கிடையே, வீடுகளில் மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒருவர் தனது சொந்த வீட்டுக்கு சோலார் பேனல் அமைத்து அதன்மூலம் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த விரும்பினால் ஆன்-லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் இணையதளத்தில் www.teda.in இ-பார்ம்ஸை கிளிக் செய்ய வேண்டும். அதில் டொமஸ்டிக் கிளிக் செய்தால் விண்ணப்ப படிவம் வந்துவிடும். அதில் கேட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து மேற்கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு ஆன்-லைனிலேயே அனுப்பப்படும்.


இந்த இணையதளத்தில் சோலார் பேனல் விற்பனையில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளின் பட்டியலும் இடம்பெற்றிருக்கும். அதில் ஏதாவது ஒரு கம்பெனியை வீட்டு உரிமையாளர் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தில் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகபட்சம் 1 கிலோ வாட் (1000 வாட் அவர்) திறன் கொண்ட சோலார் பேனலுக்கு மட்டுமே அரசு மானியம் கிடைக்கும்.




ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் மூலம் தினமும் குறைந்தபட்சம் 4 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரத்தைக் கொண்டு ஒரு வீட்டில் 4 டியூப் லைட்டுகள், இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சி பெட்டியை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருந்தால் சோலார் பேனல் மூலம் கிடைக்கும் மின்சாரம் போக மீதமுள்ள மின்சாரத்தை ‘கிரிட்’ மூலம் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.


ஒரு கிலோ வாட் திறன் கொண்ட சோலார் பேனல் (பேட்டரி இல்லாமல்) அமைப்பதற்கு ரூ.1 லட்சம் செலவாகும். சூரிய சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்துவைத்து இரவு நேரத்திலும் பயன்படுத்த விரும்பினால் அதற்கு பேட்டரியுடன் கூடிய சோலார் பேனல் வாங்குவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும். சோலார் பேனலுக்கு 25 ஆண்டுகள் வாரண்டியும், ஒட்டுமொத்த சிஸ்டத்திற்கும் 5 ஆண்டுகள் வாரண்டியும் அளிக்கப்படுகிறது.


பேட்டரியின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும். அதன்பிறகு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பேட்டரியை மாற்ற வேண்டியதுவரும். சோலார் பேனல் அமைக்கும்போது கம்பெனிக்கு மத்திய அரசின் 30 சதவீத மானியத் தொகையை கழித்துக் கொண்டு வீட்டு உரிமையாளர் கொடுத்தால், அந்த மானியத்தொகை கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்படும்.


ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் சோலார் பேனல் வைத்தபிறகு அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி பொறியாளர் ஆய்வு செய்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பிறகு ஒரு மாதத்திற்குள் மானியத் தொகை வழங்கப்பட்டுவிடும்


அதாவது ஒருவர் ரூ.1 லட்சம் செலவு செய்து தனது வீட்டுக்கு பேட்டரி இல்லாமல் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் தற்போது மத்திய அரசு மானியமாக ரூ.30 ஆயிரம் கிடைக்கும். இத்துடன் தமிழக அரசு மானியமான ரூ.20 ஆயிரமும் கிடைத்தால், மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக கிடைக்கும். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் செலவு செய்தால் ஒருவர் தனது வீட்டில் சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்து கொள்ள முடியும். வீடுகளில் சோலார் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்தால் பொதுமக்களுக்கு கணிசமான பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

ஆண்கள் பெண்களை வெறுக்கும் சில காரணிகள்!

சில பெ‌ண்களை பெ‌ண்களு‌க்கே‌ப் ‌பிடி‌க்காது.. ஆ‌ண்களு‌க்கு‌ப் ‌பிடி‌க்குமா? 

 எ‌ன்று கே‌ட்பா‌ர்க‌ள்... ஆனா‌ல் அத‌ற்கு ‌பிடி‌‌க்கு‌ம் எ‌ன்பதுதா‌ன் ப‌தி‌ல். ஒரு பெ‌ண் பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்கு‌ம் ‌விதமு‌ம், ஒரு ஆ‌ண் பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்கு‌ம் ‌விதமு‌ம் மாறுபடு‌கிறது.


சில‌ர் பா‌ர்‌த்து‌ப் ‌பிடி‌த்தது‌ம் காத‌லி‌க்க‌த் துவ‌‌ங்‌கி‌விடுவா‌ர்க‌ள். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்‌க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய ‌பிறகுதா‌ன் அ‌ந்த‌ப் பெ‌ண்ணை‌ப் ப‌ற்‌றி பு‌ரி‌ந்து கொ‌ண்டு மன‌ம் பேத‌லி‌த்து‌ப் போவா‌ர்க‌ள்.


முத‌ல் வகை...


எ‌ப்போது‌ம் எதையாவது ஒ‌ன்றை சொ‌ல்‌லி ந‌ச்ச‌ரி‌ப்பூது. எந்த ஒரு மனிதரும் அதிகம் பார்த்துப் பயப்படுவது இந்தப் பெண்ணைத்தான். இந்தப் பெண் சளசளவென்று புகார் மழை பொழிபவளாகவும், எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பவளாகவும் இருப்பாள். அவள் ஓர் உறவுக்குள் விழுந்து, பாதுகாப்பாக உணர்ந்தபின், தனது தேவைகளை அடுக்கத் தொடங்குவாள்.


ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றியு‌ம், காதல‌ர் ‌விரு‌ம்பு‌ம் நப‌ர்களை‌ப் ப‌ற்‌றியு‌ம் அ‌திக‌க் குறை கூறுவா‌ர். எதை‌ச் செ‌ய்தாலு‌ம் இவரது ‌விரு‌ப்ப‌த்தை ‌பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாதவராகவு‌ம் இரு‌ப்பா‌ர்க‌ள். இ‌ந்த பெ‌ண்ணை எ‌ந்த‌ ஆணு‌ம் வெறு‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடுவா‌ர்‌.


ச‌ந்தேக‌ப் ‌பிரா‌ணிக‌ள்



ம‌ற்ற பெ‌ண்களை‌ப் பா‌ர்‌த்தாலோ, பே‌சினாலோ அத‌ற்கெ‌ல்லா‌ம் கோ‌பி‌த்து‌க் கொ‌ண்டு ச‌ண்டை போடுபவ‌ளை முத‌லி‌ல் ர‌சி‌த்தாலு‌ம், போக‌ப் போக ஆ‌ண் வெறு‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடுவா‌ர்‌. இ‌துபோ‌ன்ற பெ‌ண்ணுடனான காதலை மே‌ற்கொ‌ள்ளு‌ம் ஆ‌ண், ‌விரை‌வி‌ல் அவனது ந‌ல்ல பெ‌ண் தோ‌‌ழிகளை இழ‌க்க நே‌ரிடு‌ம். தோ‌‌ழிக‌ள் ம‌ட்டும‌ல்ல.. ஆ‌ண் ந‌ண்‌ப‌ர்களையு‌ம் இழ‌க்க வே‌ண்டிய ‌நிலை வரலா‌ம். இதுபோ‌ன்ற‌ப் பெ‌ண்ணை காத‌லி‌க்க‌த் துவ‌ங்கு‌ம் போது, அவளது ச‌ண்டைகளை ர‌சி‌க்கு‌ம் ஆ‌ண், போக‌ப் போக தனது சுத‌ந்‌திர‌த்தை இழ‌ந்து கொ‌‌ண்டிரு‌ப்பதை உண‌ருவா‌ர்க‌ள். அ‌ப்போது காத‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம்.


ஓ‌ட்ட வா‌ய்


ஒருநாளைக்கு ஓர் ஆணை விட ஒரு பெண் அதிகமாக ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் என்பது பொதுவான கருத்து. பல பெண்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். `பெண் என்றாலே அதிகமாகப் பேசுவாள்' என்றில்லாமல், தங்களுக்கு விருப்பமான விஷயங்களை பெண்கள் எளிமையாகப் பேசுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.


ஆனா‌ல், எ‌ப்போது‌ம் வளவளவெ‌ன்று பே‌சி‌க் கொ‌ண்டே இரு‌க்கு‌ம் பெ‌ண்ணையு‌ம் ஆ‌ண்க‌ள் அ‌திக‌ம் ‌விரு‌ம்புவ‌தி‌ல்லையா‌ம். அவ‌ளிட‌ம் எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ப் போ‌ய்‌விடு‌ம் எ‌ன்ற கரு‌த்து‌ம், ஓ‌ட்ட வா‌ய் எ‌ன்ற ப‌ட்ட‌ப் பெயரு‌ம் வை‌த்து ‌விடுவா‌ர்க‌ள்.


எனவே, மே‌ற்க‌ண்ட வ‌ற்‌றி‌ல் ‌நீ‌ங்க‌ள் வ‌ந்தா‌ல், உடனடியாக உ‌ங்‌களது பழ‌க்க‌த்தை ச‌ற்று மா‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌‌ங்க‌ள். காத‌ல் இ‌னி‌க்கு‌ம்.
 

அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

 

1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!

· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து,,, நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்???

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு! தெரிந்து கொள்வோம்!.


1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்


2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி


3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்


4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்


5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்


6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)


7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)


8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்


9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை


10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை


11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)


12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்


13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்


14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)


15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)


16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]


17. இரண்டாவது மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )


18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)


19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)


20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)


21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்


22. கோயில் நகரம் – மதுரை


23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)


24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்


25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top