.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 2 December 2013

அரசியல் பன்ச் இல்லாத ஜில்லா!

 

'ஜில்லா' பொங்கலுக்கு வெளியாகிறது என அறிவித்த பின்னர் இன்னும் ஸ்பீடாக பட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

பாடல் காட்சிகளை ஜப்பான், ஹைதரபாத்தில் ஷூட் செய்த பின்னர்,  இப்போது பொள்ளாசியில் ஷூட் செய்து இருக்கிறார்கள்.

பசுமையான வயல்வெளிகள், தென்னை மரத் தோப்புகள், சோலைகளுக்கு நடுவில் விஜய் பாடுவதாக படத்தின் ஓப்பனிங் பாடல் இருக்கிறதாம்.

பொள்ளாச்சி விஜய்க்கு ரொம்ப ராசியான இடமும் கூட.
'வேட்டைக்காரன்', 'வேலாயுதம்' உட்பட பல படங்களின் பாடல் காட்சிகள் பொள்ளாச்சியில் ஷூட் செய்யப்பட்டவைதான்.

இப்போது 'ஜில்லா' படத்திற்கு செம மாஸ், க்ளாஸாக விஜய்யுடன் 80 நடனக்கலைஞர்களும், 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட்களும் பங்கேற்றுள்ளனர்.

அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவர் ராஜு சுந்தரம். இதில் அரசியல் குறித்து எந்த வரியும் இல்லையாம்.

டி.இமான் இசையில் படத்தில் மொத்தம் 6 பாடல்கள். அதில் விஜய், ஸ்ரேயா கோஷல் பாடிய மெலோடி பாடலைத்தான் ஜப்பானில் பூக்கள் பூத்து குலுங்கும் ஒரு தோட்டத்தில் ஷூட் செய்திருக்கிறார்கள்.

குளிர்காலங்களில் வீட்டில் வெதுவெதுப்பான சூழ்நிலையை உருவாக்க சில வழிகள்!!!

குளிர்காலம் வந்தாலே நமது உடல் நலத்தை பராமரிப்பதோடு நமது வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் பராமரிக்க வேண்டும். ஏன்னெனில், நம்மை போலவே நமது வீடும் குளிர்காலத்தை உணரும் தன்மையை கொண்டது. அதனால், இந்த குளிர்காலங்களில் நமது வீட்டில் உள்ள பொருட்களை தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.

குளிர்காலங்கள் குளிர்ந்த காற்றை வீசி நாம் வெளியில் செல்லுவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்கச் செய்கின்றது. எதை தொட்டாலும் சில்லென்று இருப்பதால் ஒரே இடத்திலேயே இருக்கச் செய்கின்றது. இன்றைய மாடர்ன் வீடுகளில் உள்ள ஹால் மற்றும் படுக்கை அறைகளில் சிறந்த முறையில் அறையை வெப்பமாக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இந்த வெப்பமாக்கும் கருவிகள் இல்லாத நிலையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கு வேறு வழிகளை நாடவேண்டி வரும்.

இயற்கையான முறையில் நமது வீட்டை வெப்பமாக வைப்பதற்கான வழிகளை கண்டறிவது கடினமான ஒன்று அல்ல. வெப்பமாக்கும் கருவிகள் உங்களை நிம்மதியாக உறங்க வைத்தாலும் அதன் விளைவாக வரும் அதிக மின்கட்டணங்கள் உங்களை பெரிதும் பாதிக்கும். இதற்கு மாறாக, இந்த குளிர்ந்த நிலைகளை கட்டுக்குள் வைக்கும் விலை மலிவான சில வழிகள் உள்ளன. இவற்றின் மூலமாக குளிர்காலத்தில் உங்கள் வீடு வெப்பமாக இருப்பதற்கு உதவும்.

குளிர்காலங்களில் உங்கள் வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக்குவதற்கான வழிகள் பல உள்ளன. இதற்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், சில எளிமையான அடிப்படை வழிகளை புரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டின் சுழலை எளிமையான முறையில் வெப்பமாக வைத்து குளிரை கட்டுப்படுத்தலாம். இந்த எளிய வழிகளை உபயோகித்து உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து குளிரால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சரியான திரைச்சீலைகளை உபயோகிப்பது


குளிர்காலங்களில் உங்கள் வீட்டை வெப்பமாக வைப்பதற்கு நீங்கள் சரியான திரைச்சீலைகளை பயன்படுத்த வேண்டும். இது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வீட்டு பராமரிப்பு டிப்ஸ். சூரிய வெளிச்சம் உள்ளே வரும் ஜன்னல்களை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்தவும். மற்ற ஜன்னல்களுக்கு தடிமனான திரைச்சீலைகளை பயன்படுத்தவும்.

பர்னிச்சர்களை நகர்த்தி வைத்தல்


உங்கள் பர்னிச்சர்களை ஜன்னல் மற்றும் கதவுகளிடம் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும். இது வெப்பமாக்கும் கருவிகள் இல்லாமல் உங்கள் வீட்டை வெப்பமாக வைக்க உதவும் இயற்கையான முறைகளில் ஒன்றாகும். உங்கள் வீட்டு பர்னிச்சர்களை ஈரமான மூலைகளில் இருந்து நகர்த்தி வைக்க வேண்டும்.

செயற்கை அடுப்புகளை உபயோகிக்கக்கூடாது

செயற்கை அடுப்புகள் சுற்றுசூழலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி சிம்னி வழியாக வெளியேற்றிவிடும். அது எரிந்து கொண்டிருக்கும் போது வெப்பமாக இருந்தாலும், அதனை அணைத்த பின்பு உங்கள் அறையில் மீண்டும் குளிர் நிறைந்து இருக்கும்.

ஜன்னல்களை மூடி வைக்கவும்

இந்த வீட்டு பராமரிப்பு வழி மிகவும் எளிமையான ஒன்றாகும். வெப்பமாக இருப்பதற்கு உங்கள் வீட்டில் உள்ள எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் மூடியே வைக்க வேண்டும். அவற்றை காற்றுப்புகாதவாறு அழுத்தி மூட வேண்டும்.

தடைகளை அகற்றுவது


குளிர்காலத்தில் சில நாட்கள் வெயில் வரக்கூடும். நமது வீட்டை இயற்கையான முறையில் வெப்பமாக வைப்பதற்கு நமது வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற இடையூறுகளை நீக்க வேண்டும். இதன் மூலமான உங்கள் வீட்டிற்குள் அதிக சூரிய வெளிச்சம் வந்தடையும்.

கம்பளி மற்றும் தரைவிரிப்பான்


நீங்கள் இயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக வைத்து கொள்ள நினைத்தால், உங்களுக்கு அதிகமான கம்பளம் மற்றும் தரைவிரிப்பான்களும் தேவைப்படும். இவற்றை நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் ஹால்,சாப்பிடும் அறை, படுக்கை அறைகளின் தரைகளில் உபயோகப்படுத்தவும்.

உரைகளை பயன்படுத்தவும்

உங்கள் ஹாலை வெப்பமாக்குவதற்கு பர்னிச்சர்களுக்கும் சோபாக்களுக்கும் கம்பளி உரைகளை பயன்படுத்தவும். இதன் மூலமாக ஒவ்வொரு முறை நீங்கள் சோபாவில் உட்காரும் போதும் குளிரை போக்கி வெதுவெதுப்பாக உணருவீர்கள்.

மெழுகுவர்த்திகள் பயன்படுத்தவும்


இயற்கையான முறையில் உங்கள் வீட்டை வெப்பமாக்குவதற்கு மெழுகுவத்திகளை ஏற்றி வைக்க வேண்டும். இது விலை மலிவான வழி மட்டுமல்லாமல் எளிதாக செய்யக்கூடிய ஒன்றாகும். மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதன் மூலமாக குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான சூழ்நிலையில் இருந்து உங்கள் அறையை வெளிச்சமாகவும் வெப்பமாகவும் மாற்றும். 

கணவன் / காதலன் இருவரிரிடமும் அன்பை வெளிபட ...

உலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சேர்ந்து இருக்கும் நேரத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து ஆதரவாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

கணவனும் மனைவியும் மனம் ஒத்து இருத்தலும் இருவருக்கும் இடையில் புரிதலும் அரிதாகிவருகிறது! சின்னச் சின்ன விசயங்களில் உருவாகும் புரிதலின்மைகள் வளர்ந்து பூதங்களாகி இருவருக்கிடையில் ஒத்துப்போகாத நிலையில் போய் முடிகிறது.

இந்த நிலைக்கு பல காரணிகள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான அன்பை சொல்லத்தெரியாததுதான். நான் உன்னைக் காதலிக்கிறேன், உன் மீது அன்பாக இருக்கிறேன் என்று நாம் தினமும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆயினும் அவற்றைச் சொல்ல சின்னச்சின்ன வழிகளை நாம் கையாள வேண்டும்!!எல்லாம் தெரிந்ததுதான் புதிதா என்ன இதெல்லாம்? என்று அலுப்புப் படாமல் புத்துணர்ச்சியுடன் இவற்றைக் கடைப்பிடித்தால் விளைவுகள் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்!


1.உங்களுக்கு கணவனிடம்/காதலனிடம் கேட்க நிறைய கேள்விகள் சந்தேகங்கள் இருக்கும். தயங்க வேண்டாம் நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.ஆரம்பத்திலேயே நேரடியாகக் கேட்பது மிக நல்லது.நேரடியாகக் கேட்டு பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடுங்கள்.


2.உங்கள் எதிர்காலம் பற்றி பேசுங்கள். எதிர்காலம் என்பது வெகு தொலைவில் இல்லை. இன்னும் 10 வருடம் கழித்து எப்படியிருக்கும் உங்கள் வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களைக்கூறுங்கள்! கணவனின் கருத்தையும் கேளுங்கள். இருவரும் சேர்ந்து அந்த இலக்கு நோக்கி நகரும்போது வாழ்க்கை இன்பமான சுமையாக இருக்கும்.


3.வீட்டில் கணவனை மகாராஜா போல் நடத்துங்கள். வெளியில் அவர் சாதாரண வேலையில் இருக்கலாம் புகழ் அற்றவராக இருக்கலாம். ஆனால் வீட்டுக்கு அவர்தான் ராஜா என்று அவர் உணரவேண்டும்(வீட்டு நிர்வாகத்தில் நீங்கதான் முடிவெடுப்பீங்க. ஆனால் அவரின் உத்தரவுப்படி நடப்பதுபோல ஒரு பாவ்லாதான் வேறென்ன!!)


4.வாக்குவாதங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நிறையப் பிரச்சினைகளைப் பற்றி வாக்குவாதங்கள் வந்துகொண்டுதான் இருக்கும். ஆண்கள் வெற்றிபெறவே விரும்புவர். வெற்றிபெற விடுங்கள். அந்தப் பெருமையை அவர்களுக்குக் கொடுங்கள். நிறைய வீடுகளில் வாக்குவாதங்களில் ஆண்கள் வெற்றிபெறுவார்கள். கொஞ்ச நாள் கழித்து செயல் என்று வரும்போது பெண்கள் இஷ்டப்படிதான் வேலை ஆகும். இதனை கண்கூடாக நாம் பார்க்கலாம்.


5. உங்கள் கணவனை வேறு ஆண்களுடன் ஒப்பிடவே வேண்டாம். உங்கள் அப்பாவுடனோ, சகோதரர்களுடனோ கூட ஒப்பிடவேண்டாம். ஒருவர் போல் மற்றவர் இல்லை. உங்கள் கணவரை அவருக்கே உரிய குணங்களுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். சினிமா கதாநாயகர்கள் போலிகள். கணவர் உங்களின் சொந்த அசல் கதாநாயகன் என்பதை மறவாதீர்கள்!


6.கணவனை/காதலனைப் புரிந்து கொள்ளுங்கள். 24 மணிநேரமும் அவருடைய நிகழ்ச்சிகள் என்ன என்பதை கேட்டு அறியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அலுவலக பிரச்சினைகள்,அவர் நண்பர்களின் விபரங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். விரைவில் கணவனுடைய மிகச்சிறந்த நண்பனாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.


7.உங்கள் கணவரின் உடல் நலத்தை கவனியுங்கள். இரவில் படிக்கிறேன், படம் பார்க்கிறேன் என்று நடுஇரவுவரை விழிக்க அனுமதிக்காதீர்கள். நிறைய தூக்கம்,கட்டாய உடற்பயிற்சி, அடிக்கடி மருத்துவ ஆலோசனை என்ற முக்கியமான விசயங்களை கணவன்  அசிரத்தையாக இருந்தாலும் நீங்கள் மிகுந்த அக்கரையுடன் செய்யுங்கள்.


8.உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். கணவனின் வரவுக்குள் செலவு ! ஆடம்பரம் வேண்டாம்.கணவன் பாராட்டு உங்களுக்கு உண்டு என்று சொல்லவா வேண்டும்.


9.சொந்தத்திலோ நட்பிலோ கணவனை யாரும் இகழ்ந்துபேச அனுமதிக்க வேண்டாம். அவர் பக்கம் நியாயத்தை எடுத்துச்சொல்லி அவருடைய மரியாதையைக் கட்டாயம் காப்பாற்றுங்கள். கணவனுக்கு மதிப்பளிக்காத நபரோ,இடமோ ஒதுக்கித்தள்ளி விடுக்கள்.


10.உங்கள் மனம் கோணும்படி சில வார்த்தைகள் கணவன் என்றோ கூறி இருப்பார். பெரும்பாலும் அப்படிச்சொன்னதற்காக உண்மையில் உள்ளத்தில் பிற்பாடு வருத்தம் வந்திருக்கும். ஆனால் அதை நிறையப்பேர் சொல்லமாட்டார்கள். நீங்கள் வாக்குவாதம் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை ஞாபகப்படுத்த வேண்டாம். மறந்து விடுங்கள்.


11.நிறைய பெண்கள் கணவன் தன் முகக்குறிப்பறிந்து நாம் கேட்காமலேயே எல்லாம் வாங்கித்தருவார், செய்வார் என்று எதிபார்க்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி புத்திசாலியாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புத்திசாலிப் பெண்கள் இதை எதிபார்க்காமல் நேரடியாக காரியத்துக்கு வந்துவிடுவார்கள். இது இது இப்படி வேண்டும் என்று முன்னமே சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்ன? கணவன்மார் அவற்றைச் செய்து முடிப்பதைத் தவிர வழி ஏது?


12.வீட்டை சந்தோசமான இடமாக வைத்திருங்கள். ”ஏண்டா வீட்டுக்கு வருகிறோம்” என்று கணவன் நொந்து போவதுபோல் இல்லாமல் மகிழ்ச்சியின் கூடாரமாக வீட்டை மாற்றுங்கள்.


13.கணவன் சில காகிதங்கள்,புத்தகங்கள் ஆகியவற்றை சேர்த்துவைத்திருக்கக் கூடும். அவை உங்களுக்கு உபயோகம் இல்லாதவையாகத்தோன்றும். ஆனால் அவற்றைத் துப்புறவு செய்கிறேன் என்று தூக்கி எறிந்துவிட வேண்டாம். துப்புறவு மட்டும் செய்யுங்கள். எல்லாவற்றையும் குழப்பி அடுக்கினால் வரும் சண்டை ஓய 2 நாள் ஆகும்.


14.உங்களுடைய சந்தோசங்களை, நகைச்சுவைகளை கணவனிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பியுங்கள். இது கணவனுக்கு உற்சாகத்தை அளிக்கும். குரங்கு தொப்பி கதைபோல் பகிரப்பட்ட சந்தோசமும் நகைச்சுவையும் இரண்டு மடங்காக திரும்பக்கிடைக்கும்.


15.உங்களைப் பற்றி நீங்களே ஒரு நல்ல அபிப்பிராயம் கொள்ளுங்கள்..  தன்னைப் பற்றியே வெறுப்பில் உள்ளோரைச் சுற்றி எப்படி மகிழ்ச்சி இருக்கும். நீங்கள் உங்களையே ரசிக்க ஆரம்பியுங்கள்.  தன்னை ரசிப்பவர்கள் இடம் ஒரு அதீத மகிழ்ச்சியும்,அவர்களைச் சுற்றியிருக்கும் இடம் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். உங்களை நீங்கள் காதலியுங்கள். உங்கள் கணவனைக் காதலிப்பது மிக எளிதாகிவிடும்.

நண்பர்களே! உங்களோடு ஒரு நிமிடம்!!!!

வணக்கம்! மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி.
ந்ண்பர்களே! உங்களோடு ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

இப்பதிவை பதிவு செய்வதன் காரணம்:
ஒரு தீய நண்பனின் செயலால் பாதிக்கப்பட்ட பெண்னிண் அவல நிலையும், அக்குடும்பத்தின் மன உளைச்சலையும் அறிந்த போது, "யாருக்கும் இதுபோன்ற நிலை எற்பட‌க்கூடாது" என்ற அக்கறையின் காரணமாகவேகும்........

நாள்_1:

* நண்பனின் அலைபேசியில்(Mobile Phone) தவறிய அழைப்பு பார்த்தவுடன், திரும்ப அழைத்த போது, ஒரு பெண்ணின் குரல்....
தவறுதலாக தனது Cell Noன் பத்து இலக்க எண்ணின் கடைசி எண்ணை மாற்றி அழைத்தால் அழைப்பு வந்தாக‌ சொல்லவும்,
அவனும் இயல்பாக பேசி வைத்து விட்டான்..
அடுத்து இரண்டுநாட்கள் கழித்து:

* இம்முறை வேண்டுமென்றே, அவன் வேறு எண்ணில் இருந்து Missed Call கொடுக்கவும், அப்பெண்னிடம் அழைப்பு (call) வரவும் பேசும் போது தவறுதலாக தன் நணபன் நினைத்து Missed Calல் விட்டதாக் குறிப்பிட்டு, அப்படியே தன் தேன்னொழுகும் பேச்சில் ம்யக்கி விட்டான்.
(அவன் இயல்பே அப்படித்தான்!யாரையும் பேசி மடக்குவதில் கில்லாடி)

* நாட்கள் செல்லச் செல்ல...
நல்ல நட்புடன் பழக ஆரம்பிததிருக்கிறான்..
மெல்ல மெல்ல அப்பெண்னிண் பேச்சிலிருந்து நண்பர்க்ள்,பெற்றொரின் நிலை, சொந்தபந்தம், சொத்து விபரம் உட்பட எல்லாவற்றினையும் தெரிந்து கொண்டான்..

* மேலும், அப்பெண்னிண் photo ஒன்றை வாங்கிய‌தும், பேசியவற்றை அனைத்தையும் Record செய்தும், அப்பெண்னிற்கு Gifts அனுபுவதுமாகவும் மாதங்கள் சென்று கொண்டிருந்தன..

பின்,
ஒருதடவை தன் பணக்க்ஷ்டத்திலிருப்பதால்,தனக்கு உதவி செய்ய கேட்கவும்,
அப்பெண்ணும் நம்பி வீட்டிற்க்கு தெரியாமல் சில ஆயிரங்களை கொடுத்திருக்கிறாள்....

அடுத்து வந்த பிற‌ந்த நாளில், அவளிடம் காதலை கூறி விட்டு,,
தான் படிப்பு முடித்துவிட்டு, வேலை கிடைத்த பின்பு வீட்டை விட்டு வெளியே வந்து இருவரும் ஒடிப்போகலாம் என்று முடிவு செய்திருக்கின்ற‌னர்....

இப்படியாக காத்திருந்த‌ இந்த ஜோடி நேரம் பார்த்து ஓடிவிட்டது.....

எல்லாம் முடிந்த போது,பின்புதான் அப்பெண்ணுக்கு தெரிந்திருக்கிறது....

இதெல்லாம் வெறும் "பணம்,காமம் " இரண்டிற்காக நாடத்தப்பட்ட நாடகம் என்று!!!!!

காரியம் முடிந்த பின்பு, அவன் வெளிநாட்டிற்றிற்க்குச் சென்று விட்டான்....
அப்பெண்னிண் நிலையோ அந்தோ பரிதாபம்..

இப்பொழுது வீட்டிற்க்கும் செல்ல முடியாமல் தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு, திசையும் திக்கும் தெரியாமல் இருந்த அப்பெண்ணுக்கு மறு வாழ்வு கிடைக்க போர‌டியும் பலனில்லை...

வேறு வழியின்றி கோழைகளும், வாழ வ்ழி தெரியாமல் தவிப்போரும் எடுக்கும் துணிச்சல் முடிவான தற்கொலை செய்ய எத்தனித்தப்போது தற்செயலாக எங்களால் அப்பெண்ணை காப்பாற்றி ,
நானும்,எனது நண்பர்கள் தீபக்,அரவிந்த்,பாஸ்கர் முயற்சியால் இப்பொழுது பெண்கள் காப்பகம் ஒன்றில் சேர்த்து விட்டு,எங்களாலான சிறு வேலையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம்.

நண்பன் செய்த தவறுக்கு எங்களால் ஆன மறு உதவி செய்துள்ளோம்.

நண்பர்களே! சகோதார்களே!!
* காதல் என்ற பெயரில் காமவேஷம் போடாதீர்கள்..

*பொதுவாகவே பெண்களின் குணமே மென்மையானது தான். அதை பயன்படுத்தி நம்ப வைத்து ஏமாற்றம் செய்வது போன்றவை கீழ்தரமானவை..

பாவ மன்னிப்பு கூட கொடுக்க இலலாதவை...
* அப்பெண்னை பெற்றோருக்கும் எவ்வளவு வேதனையும், வலியும் இருந்திருக்கும்.....

*உங்கள் நண்பாகளே ஆனாலும், தவறிழைக்கும் போது ஒரு போதும் உடந்தையாக செயல் படாதீர்கள்!

இறுதியாக அப்பெண் எங்களிடம் கூறியதாவது:
" தலைவலியும், வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியும்! என்பார்களே..

அது போல், ஒரு பெண்னின் வேதனையும்,கஷ்டம் அவனுபவித்தால்
தானே அவனுக்கு புரிந்திருக்கும்"

உண்மைதான் நண்பர்களே!!!

" வாழ்க்கையில் காணும் எல்லா பிரச்சினைகளும் நமக்கு வேடிக்கை தான்.
அது நமக்கு நடக்காதவரையில்!!!"

ஒரு மரம் சுமார் 50 ஆண்டுகள் வெட்டப்படாமல் இருந்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

 


 ஒரு மரம் நாட்டுக்குச் செய்யும் சேவை மதிப்பு சுமார் 30 லட்சமாகும்.


பத்து ஏர்கண்டிசனர்கள் 24 மணிநேரம் ஓடுவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒருமரம் தனி நிழல் மூலம் தருகின்றது.


சுமார் 20 பேருக்குத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளரும் மரங்கள் தருகின்றன.


பிராண வாயுவின் மதிப்பு - 4.00 இலட்சம் ரூபாய்



காற்றைச் தூய்மை செய்வது - – 7.00 இலட்சம் ரூபாய்



மண்சத்தைக் காப்பது - 4.50 இலட்சம் ரூபாய்



ஈரப்பசையைக் காப்பது - 4.00 இலட்சம் ரூபாய்



நிழல் தருவது - 4.50 இலட்சம் ரூபாய்



உணவு வழங்குவது - 1.25 இலட்சம் ரூபாய்



பூக்கள் முதலியன - 1.25 இலட்சம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top