பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன.
இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.
பார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே இருக்காது. காரணம், இரண்டு இதழ்களுக்கு இடையிலிருந்து குட்டி குட்டி பூக்கள் பூக்கும் என்பது தான், ஆச்சரியமான விஷயம...
Sunday, 1 December 2013
சுற்றுகிற வரைதான் பூமி – போராடுகிற வரைதான் மனிதன்!
20:17
ram
No comments
இலைகளை உதிர்த்துவிட்டு வெள்ளாடை கட்டாத விதவையாய் மரங்களெல்லாம் வாடி நிற்கிறபோது இதோ அவை துளிர்த்து சிரிக்கிற வசந்த காலத்தை நினைத்தால் மகிழ்ச்சியளிக்கிறது.
ஆற்றுப் படுகையின் வெடிப்புகளைப் பார்க்கிறபோதெல்லாம் நாளை அங்கு ஈரவாடையோடு பசுமை நம்பிக்கைக் கோலங்கள் வரைவதை நினைத்தால் உற்சாகம் உள்ளூர ஊற்றெடுக்கிறது.
கோடை காலத்தில் வெப்பம் தகித்து வியர்வை ஆறு ஓடுகிறபோது தை மாத சுகந்தமான குளிர்க்காற்று மனத்திற்கு சுகாமாயிருக்கிறது.
வெப்பமும், வெதுவெதுப்பும், குளிரும், கூதலும் ஒரு வருடத்தின் பருவங்கள் அதுபோலத்தான் மனிதவாழ்விலும் சுகமும் துக்கமும் வந்து போகும்.
இன்றைய இரவு நாளை விடிந்து விடும்; துன்பங்கள் துயரங்கள் மடிந்து விடும். நடக்கிறவரை நட பாலைவனப் பயணத்திலும் ஒருநாள் பசுஞ்சோலை தென்படும் என்ற நம்பிக்கையோடு நட.
முள்செடியின் கீறல்களை சகித்துக்கொள்ளாவிட்டால் தேன் எப்படி எடுக்க இயலும்?. கல்லிலும்...
எது இன்பம்...?
20:00
ram
No comments
நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.
புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது!
நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா?
சிறிது காலம் அழுகின்றோம்;
சிறிது காலம் சிரிக்கின்றோம்;
கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!
உலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....?
இன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை.மாறாக எது உண்மையான இன்பம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றே கூறுகிறத...
திருட்டு மொபைலை மோப்பம் பிடிக்கும் ஸ்மார்ட் சிம்!
19:21
ram
No comments
மொபைல் திருட்டு போனால் ஒரே வழி அதை மறந்து விட வேண்டும் ஏன் என்றல் எடுத்தவன் டக்குனு ஆஃப் பண்ணி விடுவதுதான். அப்புறம் ஆஃப்லைன்ல சிம்மை எடுத்திட்டு ரீஸெட் பண்ணி ஒன்று அவன் உபயோகிப்பான் அல்லது விற்று விடுகிறார்கள். அதனால் ஐ எம் ஐ வைத்தெல்லாம் கண்டுபிடிப்பது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விடுகிறது.அதனை போக்க ரஷியாவின் மாஸ்கோ மெட்ரோ போலீஸ் ஒவ்வொரு மெட்ரோ ஸ்டேஷ்னிலும் ஒரு மோப்பம் பிடிக்கும் சிம் போல நிறுவ உள்ளனர். இது எங்கே எங்கே நிறுவபட்டிருக்கிறது என்ற தகவல் போலீஸுக்கு மட்டும் தான் தெரியும். இதனால் நீங்கள் தொலைத்த மொபைல் ஃபோனை உடனே போலீஸில் தெரிவித்தால் அவர்கள் திருட்டு ஃபோன் டேட்டாபேஸில் இந்த ஃபோனை லிஸ்ட் செய்து விடுவார்கள்.பின்னர்...
அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்!
19:08
ram
No comments
உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்.இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால்...