
என்னை எல்லோரும் 'சிறுத்தை' சிவான்னு சொல்றாங்கன்னு எனக்கே தெரியாது. நாலு மாசத்துக்கு முன்னாடிதான் தெரியும். என்னோட பெயரை மக்கள் மறக்கமால் இருந்தா போதும். எப்படிக் கூப்பிட்டா என்ன..?’ என்று அடக்கமாகப் பேசுகிறார் அஜித்தை வைத்து 'வீரம்' படத்தை இயக்கிவருறார் சிவா.
வீரம் எந்த மாதிரியான படம்?
வீரம் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்துல சின்னக் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வந்து பார்க்குற ஜாலியான படமாக இருக்கும். அதே சமயத்துல ஆக்ஷனும் இருக்கும்.
அஜித் என்ன மாதிரியான கேரக்டர் பண்ணியிருக்கார்?
அஜித் இதுக்கு முன்னாடி இந்த மாதிரிக் கேரக்டர்ல பண்ணியிருக்கார். ஆனால் முழுப்படமும் பண்ணியதில்லை. கமர்ஷியல் படத்துல...