.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 29 November 2013

வில்லங்கம் பார்த்து வீடு வாங்குங்க...

பழைய வீடுகளை வாங்கும்போது, குடியிருக்கும் வீட்டில் என்ன வில்லங்கம் இருக்கப்போகிறது என நினைத்து கவனக்குறைவாக இருக்கக்கூடாது. பழைய வீடு வாங்கும்போதுதான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். முதலில், வாங்கப் போகும் பழைய வீட்டின் மீது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை பார்க்கவேண்டும். வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னர் வீட்டின் பத்திரம், பட்டா, மூலபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுப்பெற வேண்டும். அந்த ஆவணங்களை வக்கீல் மூலம் ஆராய வேண்டும்.

பத்திரம் காணாமல் போய்விட்டால், அந்த வீட்டை வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில், வீடு கட்டுவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து வங்கியிலோ அல்லது தனி நபரிடமோ கடன் பெற்றிருக்கலாம். இந்த சூழ்நிலையில், பத்திரம் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து நகல் பத்திரம் வாங்கியிருக்க வாய்ப்புண்டு. எனவே, ஒரிஜினல் பத்திரம் இல்லை என்று கூறினால் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஏனெனில், வீடு விற்பனைசெய்த பிறகு ஒரிஜினல் பத்திரம் வைத்திருப்பவர்கள் அந்த வீட்டை எளிதில் தங்களது கஸ்டடியில் எடுத்துக்கொள்ள முடியும்.

மேலும், ஒரிஜினல் பத்திரம் உயிரோட்டத்துடன் இருக்கும்போது நகல் பத்திரம் செல்லுபடியாகாமல் போய்விடும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் முந்தைய ஓனர் வீடு மீது வாங்கிய கடனையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டியதாகி விடும்.

இதேபோல பத்திரத்தில் குறிப்பிடும் நீள, அகல அளவுகளில் வீட்டுமனை உள்ளதா என்பதையும் சர்வேயர் மூலம் அளப்பது நல்லது. ஏனெனில், பத்திரத்தை பொறுத்தவரை பழைய பத்திரத்தில் என்ன அளவு உள்ளதோ அதே அளவு அடுத்தவருக்கு விற்கும்போதும் எழுதப்படுகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கலாம் அல்லது உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினால் கையகப்படுத்தி இருக்கலாம். பொதுச்சுவர் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் கவனிக்க
வேண்டும்.

சொத்துவரி, வீட்டுவரி, தண்ணீர்வரி உள்ளிட்ட வரிகள் அனைத்தும் தவறாமல் கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்பதை விற்பவர்களை கேட்டு தெரிந்துகொண்டு, அதற்கான ஆவணத்தை பெறவேண்டும்.

வளர்ந்து வரும் புறநகர் குடியிருப்பு பகுதிகளில் குன்றத்தூர்

குடிநீர் வசதி, எங்கு வேண்டுமானாலும் சென்று வர சிறந்த சாலை இணைப்பு, போக்குவரத்து வசதி, பள்ளிகள், கல்லூரிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதி, தூய்மையான சுற்றுச்சூழல் இவையெல்லாம் ஒரு பகுதியில் இருந்தால் அப்பகுதியில் அதிகளவிலான மக்கள் குடியிருக்க விரும்புவார்கள். ஜிஎஸ்டி சாலைக்கு மிக அருகில் இருக்கும் புறநகர் பகுதியான குன்றத்தூர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சென்னையின் புறநகர் பகுதி என்று கூறப்பட்டாலும் இது சென்னை விமான நிலையத்திலிருந்து வெறும் 10 கி.மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது. குரோம்பேட்டை ரயில் நிலையம் மிக அருகில் அமைந்துள்ளது.

சமீபத்தில் குன்றத்தூர் சந்திப்பு பகுதியை இணைக்க புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. பல்லாவரம் அருகே ஜிஎஸ்டி சாலையிலிருந்து விரைவில் மேம்பால பணி நடைபெறவுள்ளது. கோடம்பாக்கம்,ஸ்ரீபெரும்புதூர் சாலை, குன்றத்தூர் சாலை, முருகன் கோயில் சாலை, பம்மல் முக்கிய சாலை ஆகியவை குன்றத்துரை பல்வேறு பகுதிகளுடன் இணைக்கின்றன. பள்ளிகள், கல்லூரிகளும் இங்கு நிறைந்துள்ளன. 45 ஆண்டுகள் பழமையான சேக்கிழார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பல தனியார் பள்ளிகளும், மாதா பொறியியல் கல்லூரி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி போன்ற கல்லூரிகளும் மிக அருகில் உள்ளன.

இவை மட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார மையம், மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளும் இங்கு உள்ளன. மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களே இங்கு அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் குறைந்த விலையில் வீட்டு மனைகள் கிடைப்பதும், எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் அளவுக்கு சிறந்த சாலை, போக்குவரத்து வசதிகளும் இருப்பதே இதற்கு காரணமாகும். தாம்பரம், போரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை மிக அருகில் இருப்பதும் மற்றொரு காரணமாகும்.

2010ம் ஆண்டு முதல் இப்பகுதியில் ஏராளமான வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் பெருகி வருகின்றன. சிறந்த கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் மக்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளனர். அருகில் உள்ள தாம்பரம், நங்கநல்லூர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு தொடக்க விலையே சதுர அடி ரூ.5,500 இருக்கும்போது, இங்கு சதுர அடி ரூ.3,500 முதல் ரூ.5,000 விலையில் கிடைக்கிறது.

எப்போதுமே பில்டரின் ஒப்பந்தம் மீது 2வது நம்பிக்கை கொள்ளுங்கள்


பில்டர் ஒப்பந்தத்தின் வரைவு நகல் என்பது அனைத்து வீடு வாங்குபவர்களும் படிக்க வேண்டிய ஆவணத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்று. ஒப்பந்தம் பில்டருக்கு சாதகமாக ஒருதலை பட்ச மாக உள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டி யது அவசியம். வழக்கமாக கிளப் ஹவுஸ், உட்புற சாலைகள், மொட்டைமாடி மற்றும் திறந்தவெளிகள் மேலும் சங்கம் அமைப்பது ஆகியவற்றின் பாத்யதை உரிமை மீதான தரமான அச்சுபிரதியில் எப்போதும் ஒரு சிறு தெளிவின்மை இருக்கும். வீடு வாங்குவது என்பது வாழ்நாள் முடிவு என்பதால் தொழில்முறை ஆலோசனை மேற்கொள் வது உதவிகரமாக அமை யும். எந்த ஒரு விஷயமும் தவறாக இருக்கக்கூடாது மேலும் அது உங்கள் முழு வாழ்க்கையை வேத னைப்படுத்தும்.

வாங்கும் மனையின் சுற்றுப்புற சூழ்நிலையால் பெறும் பலன்கள்

பிளாட்டுக்கு அருகில் ஆறு அல்லது கால்வாய் இருப்பது நன்மை தரும். இது பிளாட்டுக்கு வடக்குப் பக்கமாகவும் தண்ணீர் மேற்கில் இருந்து கிழக்காக ஓடிவரும் நிலையில் இருந்தால் பலவிதங்களில் நன்மை தரும். மனைக்கு கிழக்கில் இருந்தால் தண்ணீர் தெற்கில் இருந்து வடக்காக செல்வது யோகம் தரும். மனைக்கு தெற்கு அல்லது மேற்கில் ஆறு, ஓடை இருப்பது நலம் தராது. மனைக்கு தெற்கிலோ, தென்மேற்கிலோ, மேற்கிலோ மலை குன்று இருப்பது நன்மை தரும். மனைக்கு முன் அல்லது பின்புறமாக மயானம் புதைகுழி இருப்பது மன நிம்மதி தராது.

மனைக்கு எதிராக திருக்கோயில் இருந்தால் , அங்கு குடியிருப்பவர்களது வயது வளர வளர அவர்களது செல்வமும் குறைந்துகொண்டே வரும். அவ்விதமான வீட்டை பொது உபயோகத்துக்கு உபயோகிப்பது நன்மை தரும். அதாவது நூல் நிலையம், தண்ணீர் பந்தல், பயணிகள் தங்குமிடம், ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றை அமைப்பது நன்மை தரும்.

மனைக்கு எதிராக சிவன் கோயில் இருந்தால் , தீராத வியாதி வரும். மனைக்கு எதிராக விஷ்ணு கோயில் இருந்தால் , மன அமைதி கெடும். துர்க்கை கோயில் இருந்தால் , உடல் நலம் பாதிக்கும். திருக்கோயில் நிழல் வீட்டின் மீது விழுவதும் தீராத துன்பங்களை தரும். திருக்கோயில் வீட்டின் வலது பக்கமாகவும், பின்புறமாகவும் இருந்தால் செல்வ இழப்பும், இடது பக்கமாக இருந்தால் முன்னேற்ற தடையும் ஏற்படும். திருக்கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றிலிருந்து 100 அடி சுற்றளவுக்கு அப்பால் இருந்தால் பாதகம் தராது.

இரண்டு பெரிய வீடுகளுக்கு நடுவில் உள்ள மனையை வாங்குவது கூடாது. அதில் வீடு கட்டினால் நாளாக நாளாக செல்வ இழப்பு ஏற்படும்.
மனைக்கு தென் கிழக் கில், தென் மேற்கில், வட மேற்கில் கிணறு போர்வெல் நீச்சல் குளம் இருந்தால் பல இன்னல்களைத்தரும். ஆனால் அவை வடக்கு, வடகிழக்கில் இருப்பது நன்மை தரும்.

தாழ்வு மனப்பான்மை!

வெற்றி பெற வேண்டும் என்று விரும்பாதவர்களே கிடையாது. நம் பலம் எது, பலவீனம் எது என்பதை உணர்ந்துக் கொண்டால் வாழ்க்கை என்பது இனிமையாகும். ஆனால் சிலர் மட்டுமே இந்தத் தெளிவை அடைவதினால் அந்த சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது. இதற்குக் காரணம் மனம்.

தாழ்வு மனப்பான்மை என்பது முழுக்க முழுக்க மனம் சம்பந்தபட்ட விஷயம். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களின் வாழ்க்கையில் செல்வம் இருக்கலாம்; கல்வி இருக்கலாம்; உடல் வலிமை கூட இருக்கலாம்: ஆனால் நிம்மதி இருக்காது.  


தாழ்வு மனப்பான்மை பொதுவாக இளம் வயதிலேயே உருவாகிறது. புறக்கணிக்கப்பட்டவர்கள்,பல முறை தோல்வி கண்டவர்கள், பிறருடன் பழக வாய்ப்பில்லாதவர்கள் இவர்களுக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்பு இருக்கிறது. தாழ்வு மனப்பான்மையினால் இவர்களது மனம் அடிக்கடி தங்களை பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? உடனிருக்கும் நண்பரோ.உறவினரோ இவர்களது தயக்கத்தைத் தக்க நேரத்தில் கண்டுப்பிடித்தல் அதன் பிறகு அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

தாழ்வு மனப்பான்மை வாழ்வின் நிம்மதியை கெடுக்கும். இந்த தாழ்வு மனப்பான்மை ஒழிக்க என்ன செய்யலாம்? அதை தவிர்க்க பல முயற்சிகள் எடுக்கலாம்.பிறகு,பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்ப்பதுதான். தற்ப்போது இல்லாத விஷயங்களுக்கு வருத்தபடுவதில் தவறு இல்லை. அந்த வருத்தமே வாழ்க்கை முறையாக மாறுவது தான் தவறு. அதன் தொடர்ச்சியாக என்னால் முடியாது என்று சோர்ந்து போவது தவறு. இந்த தவறுகளே வெற்றிக்கு தடைக்கற்கள்.

இது மாற,வெற்றி நம் வசமாக நாம் எடுக்க வேண்டிய முதல் பயிற்சி தாழ்வு மனப்பான்மையை உருவாக்காமல் பார்த்துக் கொள்வது தான். 



"விழுவது அழுவதற்கு அல்ல: மீண்டும் எழுந்து நடப்பதற்கே".

நம்மை போல், டால்பின்களும் பெயர்கள் மூலம் ஒருவருக்கொருவர் அழைக்கின்றன!

 

உலகின் மிக அறிவார்ந்த விலங்குகளில் ஒன்றாகும் -டால்பின்களுக்கு பெயர்கள் உள்ளன, அவைகளுக்கு பெயர்கள்  மனிதர்களால் கொடுக்கப்பட்டது இல்லை.

முதன் முறையாக, ஆராய்ச்சியாளர்கள் டால்பின்கள் எப்படி 'தனிப்பட்ட பெயர்கள்'  கொண்டு பதிலளிக்கின்றன என்று சோதித்து பார்த்தனர்.

 கடல் பாலூட்டிகள் தனிப்பட்ட விசில் பயன்படுத்தி இதன் மூலம்  ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டு கொள்ளும் மற்றும் அவர்களது சொந்த அழைப்பை கேட்கும் போது பதிலளிக்கும் என்று  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடல் உயிரியல் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஸ்டீபன் கிங் மற்றும் வின்சென்ட் ஜனிக் பாட்டில்நோஸ் டால்பின்கள் ஒலி  பின்னணி பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் விசில் பிரதிகளை கொண்டு விலங்குகள் உண்மையில்  அவர்களுக்கு எதிர்செயலாற்றும் என்பதை சோதனை செய்து பார்த்தனர்.

 அணி குழுக்கள் தொடர்ந்து காட்டு டால்ஃபின் வகை  மீன்கள் பயன்படுத்தி, தங்கள் தனிப்பட்ட 'பிரதிகள்' விசில்களையும் பற்றி பதிவு செய்தனர்.

பின்னர் அவர்கள் மீண்டும் அதே  மக்களிடம் இருந்து வேறு ஒரு மக்கள் அல்லது அறிமுகமில்லாத விலங்குகளின் விசில் பிரதிகளை அல்லது கணினி பதிப்பு  வகித்த விலங்கு பிரதிகள்  விசில்களையும் ஆராய்ந்து பார்த்தனர்.

ஒவ்வொரு டால்பின்களும் அதன் சொந்த விசில் பிரதிகளை  கேட்டு தான் பதிலளிக்கும், மற்ற விசில் பிரதிகளுக்கு பதிலளிக்காது என்று கண்டுபிடித்தனர்.

மம்முட்டி படத்தில் விஜய்?

 

மம்முட்டியுடன் இணைந்து விஜய் நடனமாடப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் மம்முட்டி, ரீமா கல்லிங்கள் நடிக்கவிருக்கும் படம் ‘கேங்ஸ்டர்’. இந்தப் படத்தை ஆஷிக் அபு இயக்குகிறார். இவர்தான் ’22 ஃபீமேல் கோட்டயம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.

இந்நிலையில் படத்தில் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலுக்கு  ஆடவைத்துவிட வேண்டும் என்று இயக்குனர் ஆஷிக் அபு ஆசைபடுகிறாராம். அதற்கான தீவிர முயற்சியில் இப்போதே இருங்கிவிட்டாராம்.

மலையாளத்தில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பது ஊரறிந்த விஷயம். அதனால் மம்முட்டியின் படத்தில் விஜய் டான்ஸ் ஆடினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே விஜய், இந்தியில் ‘ரவுடி ரத்தோர்’ படத்தில் அக்ஷய்குமாருடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு!

 

“திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.அதே சமயம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல.”என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது.இது தொடர்பாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.

இந்த உறவில், ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். அல்லது, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். திருமண உறவை அங்கீகரித்தது போல இந்த உறவையும் அங்கீகரிக்க வேண்டும்.

அதே சமயத்தில், திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவை பாராளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.கள்ளத் தொடர்பு, பலதார மணம் ஆகியவற்றை ‘திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்’ உறவில் சேர்க்க முடியாது.” என்று,நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top