.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 29 November 2013

வேண்டியவை மூன்று எவை?



 * இருக்க வேண்டியது மூன்று தூய்மை, நீதி, நேர்மை


* அடக்க வேண்டிய மூன்று நாக்கு, நடத்தை, கோபம்


* பெற வேண்டிய மூன்று தைரியம், அன்பு, மென்மை


* கொடுக்க வேண்டிய மூன்று ஈதல், ஆறுதல், பாராட்டு


 * அடைய வேண்டிய மூன்று ஆன்மசுத்தம், முனைவு, மகிழ்வு


* தவிர்க்க வேண்டிய மூன்று இன்னா செய்தல், முரட்டுத்தனம்,

நன்றியில்லாமை


* நேசிக்க வேண்டிய மூன்று அறிவு, கற்பு, மாசின்மை

சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள் !!!!


நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம் , போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ? எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் ஜுஜுபி ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா ...?

அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல ..
நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ, சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ? நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்... நோயிற்க்கான மருந்து அல்ல....
மண்டை குலம்புகிறதா..?

தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.

போலியோ சொட்டு மருந்து :


போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான்.

 ''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர்.

 ''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது...

மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின் கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு முதலாளித்துவ சமூகம் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.

தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.

கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான். போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது. இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

இதனால்தான் 'இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்' என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..!

அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008). இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை...

1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

1870 - 71களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள்.

அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.

இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்... அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை...

இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள்.

1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான். மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும்.

ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு. இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது.

உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது. இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.

இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன. இந்த மருந்தை என்ன செய்வது? அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்.

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை...!!!!

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

 'முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே... தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?' நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம்.

2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது.

எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும். இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை - அதாவது தானாகவே மறையும் தன்மை - மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் - தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் - நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன.

சில பழைய பக்கங்களை பார்ப்போம். 1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக...

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.

இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன.

இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக -

இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். அதாவது 'புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு...' என்று அச்சிடுகிறார்கள் இல்லையா? அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி
3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு
4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்
5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள்

... ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான். ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை. அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? குழந்தை திடீரென இறந்து போகும்...

ஆனால், இந்த உண்மையை - அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை - எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்.

உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சில சிறப்பான வழிகள்!!!


உற்சாகமில்லாதது போல உணர்கிறீர்களா? வழக்கமான பாதையிலிருந்து விலகியது போல உணர்கிறீர்களா? சருமப் பிரச்சனைகள், தலைவலி, உடல் வலிகள் அல்லது செரிமானக் கோளாறு போன்றவற்றால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? அப்படியெனில் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது என்று பொருள். மேலும் இது உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்க வேண்டிய நேரம்.

இதற்கு ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் சீன மருத்துவ முறை உள்பட உலகமெங்கும் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நச்சு நீக்கும் முறைகள் உள்ளன. உடலிலுள்ள நச்சுக்களை நீக்குவது என்பது, ஓய்வெடுத்தல், சுத்தப்படுத்துதல் மற்றும் புத்துணர்வூட்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உடலிலிருந்து நச்சுப்பொருளாகிய டாக்ஸின்களை நீக்கி அறவே இல்லாதொழித்தலாகும். அதன் பின் ஆரோக்கியமான சத்துப்பொருட்களை உடலுக்குள் செலுத்த வேண்டும். இப்படி உடலிலுள்ள நச்சினை நீக்குவதன் மூலம், நமது உடலினை வேறு நோய்கள் தாக்காவண்ணம் பாதுகாக்கலாம். இதனால் அது உடலை அதிகப்படியான ஆரோக்கியத்துடன் திகழ உதவுகிறது.

நச்சு நீக்கும் முறை என்பது எப்படி செயல்படுகிறது?

நச்சு நீக்குதல் என்பது அடிப்படையில் இரத்தத்தினை சுத்தப்படுத்துதல் ஆகும். டாக்ஸின்கள் உற்பத்தி செய்யப்பட்டு செயல்படத் தொடங்கும் இடமான கல்லீரலில், இரத்தத்திலிருந்து அசுத்தங்களை நீக்குவதன் மூலம் இது மேற்கொள்ளப்படுகிறது. நமது உடலே, சிறுநீரகங்கள், குடல்கள், நுரையீரல்கள், நிணநீர்க் குழாய்கள் மற்றும் சருமம் வழியாக டாக்ஸின்களை வெளியேற்றிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அசுத்தங்கள் முழுமையாக நீக்கப்படுவதில்லை. இதன் மூலம் உடலிலுள்ள ஒவ்வொரு செல்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன.

ஆகவே நமது உடலிலுள்ள நச்சுக்களை நீக்கிய பிறகு பின்வரும் உணவுகள், உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி, உடலினை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

 இரசாயன உரமிடப்படாமல் உற்பத்தி செய்யப்பட்ட பசுமையான காய்கறிகளையும் பழங்களையும் உண்ண வேண்டும். மேலும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். கைக்குத்தல் அரிசி எடுத்துக் கொள்வது சிறந்தது. பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, ஸ்பைருலினா, குளோரெல்லா போன்றவை அற்புதமான நச்சு நீக்கும் உணவுகளாகும்.

க்ரீன் டீ

 தினமும் ஒரு கப் க்ரீன் டீ பருகி வந்தால், கல்லீரலை நன்றாகப் பாதுகாத்து சுத்தம் செய்யலாம்.

வைட்டமின் சி உணவுகள்

 நமது உடலிலிருந்து டாக்ஸின்களை விரட்டியடிக்க உதவும் கல்லீரலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருளான குளுடாத்தியோன் (glutathione) எனப்படும் வேதிப்பொருளை உற்பத்தி செய்வதற்கு உதவுகின்ற வைட்டமின் சி உள்ள உணவை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளூங்கள்.

தண்ணீர் பருகவும்

 ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்துங்கள்.

நன்கு சுவாசிக்கவும்

 சுவாசிக்கும் பொழுது ஆக்ஸிஜன் நன்றாக உட்கிரகிக்கப்படும் வண்ணம் மூச்சினை நன்றாக ஆழமாக உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.

நேர்மறை எண்ணங்களை வளர்க்கவும்


 மன அழுத்தத்தினை நேர்மறையான எண்ணங்கள் மூலம் மாற்றியமையுங்கள்.

சுடுநீர் குளியல்


 நல்ல சூடான வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் குளிப்பதன் மூலம் வெந்நீர் குளியல் எனப்படும் ஹைட்ரோதெரபியை (hydrotherapy) செய்து வாருங்கள். மேலும் வெந்நீரானது முதுகில் நன்கு படவேண்டும். அதன்பின் குளிர்ந்த நீரானது 30 வினாடிகள் முதுகில் ஓட வேண்டும். இது போல மூன்று முறை மாற்றி மாற்றி செய்யுங்கள். அதன் பின் 30 நிமிடங்கள் படுக்கையில் படுத்திருங்கள்.

நீராவி பிடிக்கவும்

 சானா நீராவிக் குளியலை மேற்கொள்ளுங்கள். இதனால் வியர்வை வழியாக நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும்.

பாதங்களை பராமரிக்கவும்


 சருமத்தினை ட்ரை பிரஷ் (Dry-brush) செய்யுங்கள் அல்லது டிடாக்ஸ் ஃபுட் ஸ்பா (detox foot spas) பயன்படுத்துங்கள். பாதக் குளியல் செய்யுங்கள். இதன் மூலம் சருமத்துவாரங்கள் வழியாக நச்சுக்கள் வெளியேறிவிடும். இதற்கான சிறப்புப் பிரஷ்கள் இயற்கைப்பொருள் விற்பனைக் கடையில் கிடைக்கும்.

உடற்பயிற்சி


 நச்சுக்களை நீக்கும் முறையில் மிகவும் முக்கியமானது என்னவென்று தெரியுமா? "உடற்பயிற்சி" யோகாசனம் அல்லது ஸ்கிப்பிங்க் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் செய்ய வேண்டும். கிகாங்க் (Qigong) எனப்படும் வீரக்கலைப் பயிற்சியையும் செய்து பார்க்கலாம். இதில் நமது உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளுடன், நச்சு நீக்குதலுக்கான சிறப்பான பயிற்சிகளும் உள்ளன.
 

கோடிக்கணக்கில் வருவாய் இருந்தும் கும்பாபிஷேகம் காணாத கோயில்கள்!

 

இந்திய கலாசாரத்தின் ஆணிவேர்களாகவும், அடையாளமாகவும் விளங்கி வருபவை திருக்கோயில்களே. இந்தியாவின் பன்மொழி கலாசாரத்தை ஒரு மெல்லிய நூலிழையில் வலுவாக பிணைத்து காத்து வரும் பெருமைமிகு சின்னங்கள் கோயில்கள். இத்தகைய கோயில்களுக்கு அந்நாட்களில் அரசர்களும், தனவந்தர்களும், பெரும் அரசு பொறுப்பில் இருந்தவர்களும் அசையும், அசையா சொத்துகளை உடமையாக்கி வைத்திருந்தனர். இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் அந்த கோயில்களில் அன்றாட பூஜைகள் தடையின்றி நடக்கவும், கோயில்களை நம்பியுள்ள அர்ச்சகர்கள், பிற பணியாளர்களின் ஊதியத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதோடு கோயில்கள் கல்விச்சாலைகளாகவும், வைத்திய சாலைகளாகவும், கலாசார பண்பாட்டு மையங்களாகவும், அவசர காலங்களிலும், இயற்கை சீற்றங்களின் போதும் மக்களை காக்கும் மையங்களாகவும் திகழ்ந்தன. இன்று கோயில்களுக்கு சொந்தமான அந்த சொத்துகள் அனைத்தும் அப்படியே உள்ளதா என்றால் இல்லை. அதே நேரத்தில் இன்றளவும் சொத்துகளுடன் வருவாய் வாய்ப்புள்ள கோயில்களும் ஏராளமாக உள்ளன. சொத்துகள் இருந்தபோதிலும் அவை ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருவாய் சரிவர வராமல் உள்ள திருக்கோயில்களும் உள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38,500 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் சொத்துகள் மூலம் வரும் வருவாய், உண்டியல் வருவாய், தரிசன டிக்கெட்டுகள், பிரசாத விற்பனை என மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு ஈட்டும் வருவாய் இன அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு மொத்தமாக ஈட்டப்படும் வருவாய் ரூ.300 கோடியை தாண்டுகிறது.

இந்த வருவாயில் கோயில் பூஜை, அர்ச்சகர், பிற பணியாளர்களுக்கு சம்பளம், அன்னதான திட்டம் என்று போக, மீதியுள்ள தொகை மொத்தமாக அரசின் கஜானாவை சென்றடைகிறது.இந்த வருவாயை கொண்டுதான் பாழடைந்து வரும் கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளை கடந்த கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும், ஒரு கால பூஜைக்கே தடுமாறும் கோயில்களை அடையாளம் கண்டு அந்த கோயில்களில் ஒரு கால பூஜைக்காவது வழிவகை செய்யப்பட வேண்டும்.தமிழகம் முழுவதும் 520 கோயில்களில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 இதற்காக ரூ. 7 லட்சம் செலவிடப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள திருக்கோயில்களின் சொத்துகளை மீட்க வேண்டும். குத்தகை, பாக்கி இனங்கள் அனைத்தும் வசூலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்து சமய ஆன்மிகவாதிகள் மத்தியில் எழுந்துள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் பங்களிப்புடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல கோயில்கள் கும்பாபிஷேகம் கண்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரும் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இணை ஆணையர் கட்டுப்பாட்டில் 536 கோயில்களும், உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் ஆயிரம் திருக்கோயில்களும், பிற சிறிய கிராமப்புற கோயில்களும் உள்ளன.

வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட கோயில்கள் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர், ரத்தினகிரி பாலமுருகன், வேலப்பாடி வரதராஜ பெருமாள், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில், ஒடுகத்தூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில், வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில் என்று பட்டியல் நீள்கிறது. தமிழகத்தில் அதிக வருவாய் உடைய கோயில்களாக பழனி, திருத்தணி, திருச்செந்தூர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உட்பட பல கோயில்கள் உள்ளன.

அத்துடன் கோயில் உண்டியல் வருவாயை அரசின் கஜானாவிற்கு கொண்டு செல்லாமல், அந்த நிதியை நலிவடைந்த கோயில்களுக்கு பரவலாக்கப்பட்டு செலவிடப்பட வேண்டும் என்பதே ஆன்மீகவாதிகளின் எதிர்பார்ப்பு.திருக்கோயில்களின் அசையா சொத்துகள்: கோயில்களுக்கு சொந்தமாக ஆண்டுக்கு இருபோகம் விளையக்கூடிய 4 லட்சத்து 78 ஆயிரத்து 546 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இவற்றை 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேர் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர்.

பல்வேறு அரசு மற்றும் பொது உபயோகங்களுக்காக 135.69 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துகள் தொடர்பாக கடந்த மார்ச் 31ம் தேதி வரை 33,347 வழக்குகள் தொடரப்பட்டது. இதில் 17,191 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டு ரூ.14.86 கோடிக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. 16,156 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுடன் தொடர்புடைய நிலுவைத்தொகை ரூ.18.45 கோடியாகும். அசையா சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.59 கோடி வருவாய் கிடைக்கிறது.

வறுமையில் வாடும் கோயில் ஊழியர்கள்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் கிளார்க் என்றால் கோயில் வருவாய் அடிப்படையில் ரூ.1,500 முதல் ரூ.3,000ம் வரையும் அதற்கு கீழே உள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள், பிற பணியாளர்கள் அனைவரும் ரூ.1,500 வரையே ஊதியமாக பெறுகின்றனர். இதிலும் ரூ.100 முதல் ரூ.750 வரை ஊதியம் பெறும் ஊழியர்களும் வருகின்றனர். இந்த வருவாயில் வாழ்க்கையை நடத்துவது கஷ்டம் என்பதால் இதற்கும் அரசு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, திருக்கோயில் பணியாளர்களையும் அரசு ஊழியர்களை போல பணிவரன்முறைபடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கோயில்களின் வருவாய்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36,488 கோயில்களும், மடங்கள் 56ம், கோயிலுடன் இணைந்த மடங்கள் 58ம், சமண கோயில்கள் 17, சிறப்பு அறக்கட்டளை கோயில்களாக 1,721 கோயில்களும், சிறப்பு நிர்வாகத்தின் கீழ் 189 கோயில்களும் என 38,529 உள்ளன. இதில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் வருவாய் உள்ள கோயில்கள் 34,336, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரூ.2 லட்சத்துக்குள் வருவாய் உள்ள கோயில்கள் 3,402. ரூ.2 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சத்துக்குள் வருவாய் உள்ளவை 557, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள கோயில்கள் 234.கிராமப்புற திருக்கோயில் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் 10 கோயில்கள் முதல்கட்டமாக இந்த நிதி ஆண்டில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உபரி நிதியில் இருந்து ரூ.2 கோடி நிதி கடந்த நிதி ஆண்டு பெறப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 256 கோயில்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிதி ஆண்டு மேலும் 300க்கும் மேற்பட்ட கோயில்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.


ஒரு கால பூஜைக்கு வழி

ஒரு கால பூஜையும் நடைபெறாமல் தள்ளாடும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள 11 ஆயிரத்து 931 கோயில்களில் ஒரு கால பூஜை தொடர்ந்து நடைபெற ரூ.1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 539 கோயில்களில் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.10 ஆயிரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பங்களிப்பு ரூ.90 ஆயிரம் சேர்த்து ரூ.1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. அதில் இருந்து வரும் ரூ.750 வட்டியை கொண்டு கோயில் பூசாரி ஒரு கால பூஜையை தொடர்ந்து மேற்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

விதியா மதியா?

மனிதன் இருக்கிறானே, அவன் மகா சாமர்த்தியசாலி; ஆளப்பிறந்தவன். சாதிக்கப் பிறந்தவன். கடவுளின் படைப்பகளிலேயே மிக உன்னதப் படைப்பு.

ஆறு, மலை, கடல், காடு போன்றவற்றைத்தான் கடவுள் இந்தப் பூமியில் படைத்தார். இவனோ ஆயிரமாயிரம் விஷயங்களைப் படைத்துவிட்டான். இன்னமும் தினம் தினம் புதிதாக எதையாவது படைத்துக்கொண்டே இருக்கிறான்.

எப்படி?

அவனுடைய அறிவால். அவனுடைய முயற்சியால்.

சரிதானே?

அறிவு

மனிதனின் அறிவு என்பது ஒரு அற்புதமான ஆயுதம். அதைக் கூர்தீட்டுவதைப் பொறுத்தும், பயன்படுத்துவதைப் பெறுவதும், ஒருவருடைய சிறப்பும் செழிப்பும் அமைகிறது
.

முயற்சி


தனது இலக்கை நோக்கி, ஒரு மனிதன் எடுக்கின்ற முயற்சியின் தீவிரமும், தொடர்முயற்சிகளும், விடாமுயற்சிகளும் அவனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத விஷயங்கள்.

வள்ளுவர் சூப்பராக ஒரு போடுபோடுகிறார் பாருங்கள்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக் கூலி தரும்.


இது முடியாது என்று கடவுளே கைவிட்ட காரியமாக இருந்தால்கூட, நீ கைவிட்டு விடாதே. முயன்றுபார். நீ எடுக்கிற முயற்சியின் அளவுக்குத்தகுந்தபடி உனது வெற்றியின் அளவும் அமையும் – என்பதுதானே இதன் பொருள்.

அதாவது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் (Payment According to performance).

தெய்வத்தை ஒதுக்கி வைக்கிற அளவுக்கு, முயற்சிக்கு முக்கியத்துவம் தருகிறார் வள்ளுவர்.

ஆனால்

இந்தக் கருத்து நூற்றுக்கு நூறு ஒததுக்கொள்ளக கூடியதுதான் என்று நம் உள்ளம் சொன்னாலும்…

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒரு உள்மனம் இலேசாக புருவத்தை உயர்த்துகிறது. என்னவென்று?

அதே திருவள்ளுவர் இன்னொரிடதில் இதற்கு நேர்மாறாக இன்னொரு கருத்தை சொல்லியிருக்கிறாரே, அது கொஞ்சம் இடிக்கிறதே? என்று. அந்தக்குறள் -

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.


இது என்ன சொல்கிறது?

விதியைவிட வலிமயுடையது எது?

எதுவுமில்லை.

அந்த விதியை வெல்வதற்காக என்னதான் வேறு வழிகளில் முயன்று உழைத்தாலும், விதியானது அங்கேயும் வந்து நின்று வென்று காட்டிவிடும்.

இது எப்படி இருக்கிறது?

அந்தக் குறள்படி, முயற்சி, தெய்வத்தால் ஆகாததையும் முடித்துக்கொடுத்து விடும்.

இந்தக் குறள்படி, முயற்சியை முறியடித்துவிட்டு விதி வென்றுவிடும்.

அப்படியென்றால்….

திருவள்ளுவர் நம்மை குழப்புகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.

திருவள்ளுவரா குழப்புகிறவர்? மிக மித் தெளிவாக தனது கருத்துக்களை வைப்பவர் அல்லவா அவர். ஆக, நாம்தான் உரிய விதத்திலே புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி?

மனிதன் முன்னேற விரும்புகின்றவன். முன்னேறப் பிறந்தவன். முன்னேறியே ஆக வேண்டும். அதற்கு அவன் முதலில் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அது தன்னம்பிக்கை.

அதோடு மட்டுமல்லாமல், அவன் சோம்பி இருக்கக் கூடாது.

உள்ளம் முழுவதம் தன்னம்பிக்கை இருந்தாலும், உடலிலே சோம்பல் இருந்துவிட்டால ஒன்றையும் சாதிக்க முடியாது. கடுமையாக உழைக்க வேண்டும். எந்த வெற்றியும் வியர்வை சிந்தாமல், விலை கொடுக்காமல் எளிதாக வந்து விடாது.

இந்தக்கருத்தை, மனிதனின் மனதிலே மிக மிக ஆழமாகப் பதிப்பதற்காகத்தான், “தெய்வத்தால் ஆகாது எனினும்” என்ற வார்த்தைகளைப் போட்டு, அந்தக் கருத்துக்கு அதிகபட்ச வலிமையை ஊட்டியிருக்கிறார்.

இதுசரி, பிறகு எதற்கு விதியை விட வலிமையுடையது வேறெதுவும் இல்லை என்ற கருத்தையும் சொல்ல வேண்டும்?

ஏனென்றால்…

மனிதன் மற்ற உயிரினங்களைவிட உயர்ந்தவன். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார் அவ்வையார்.

அப்படிப்பட்ட பிறவியை எடுத்தவன், ஐந்தறிவு படைத்த விலங்குகளைப் போல, மிருக குணம் காட்டியா வயிறு வளர்ப்பது? வாழ்ந்து காட்டுவது? வளர்ந்து காட்டுவது? கூடாதல்லவா?

ஆனால், அதை உணராமல், குறுக்கு வழிகளிலே, தீய வழிகளிலே, மனித நேயத்தை மறந்து, இழி குணத்தை மட்டுமே காட்டி,

“ஜெயித்துக் காட்டுகிறேன் பார்”

“வளர்ந்து காட்டுகிறேன் பார்”


“உயரத்தை அடையாமல் ஓயமாட்டேன் தெரியுமா?”

என்று முயற்சிகளை எடுக்கும்போது கூட அவனது முயற்சிகளுக்கு மதிப்புக்கொடுத்து வெற்றிகள் அவனிடம் வருகின்றன.

ஆனாலும், அவன் செல்லுகின்ற பாதை, நீதி நெறியால், தர்மத்தால், நியாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத பாதை என்கிறபோது, அந்த நீதிநெறி, தர்மநெறி நியாயம் எல்லாம் விதி என்ற பெயரில் அவனது வாழ்வில் விளையாடி விடுகிறது.

எப்போதோ அவன், அடுத்தவரின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் தீய நோக்கத்தோடு விளையாடி, வென்றிருக்கலாம்.

ஆனால், பிறகு எப்போதோ, நல்ல நோக்கத்துக்காக அவன் எடுக்கும் நல்ல முயற்சிகளைக்கூட, விதி முறியடித்து முந்திச் சென்று முதலிடம் பிடித்துவிடுகிறது. கணக்கை நேர் செய்து விடுகிறது.

அதாவது, செய்த வினைகளுக்கு ஏற்பவே, விளைவுகள் நிகழ்கின்றன. வினையை விதைத்தால் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும்.

இந்தக் கருத்து காலத்தால் அழியாத கருத்து, வாழ்க்கைத் தத்துவங்களிலேயே வளம் செறிந்த கருத்து. புல்முனை கூட புறக்கணிக்க முடியாத கருத்து.

இப்போது புரியுமே, விதியைவிட வலியது எதுவுமில்லை என்று ஏன் சொன்னார் வள்ளுவர் என்று.

இப்போதும் புரியவில்லையா? இன்னொரு குறளையும் எடுத்து விடுகிறார் பாருங்கள்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்
பிற்பயக்கும் நாற்பா லவை.

என்ன பொருள்?

பிறரை வருத்தப்பட வைத்து ஒருவன் பெற்ற பொருளெல்லாம் அவனை வருத்தப்பட வைத்து, அவனை விட்டுப் போய்விடும். நல்லவழியில் வந்தவைகளோ, கைவிட்டுப் போனாலும், வேறு எந்த விதத்திலாவது நன்மையே தரும்.

சுருக்கமாக

முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, வழியில் குறுக்கிடும் மனிதர்களையும், வாகனங்ளையும் இடித்துத்தள்ளிவிட்டு, மூர்க்க்தனமாக வண்டியை ஒட்டுபவனை, வெற்றி பெற்றவனாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாராட்டமுடியும்?

நீ முன்னேறு. யார் வேண்டாம் என்றார்கள். ஆனால் அடுத்தவன் வயிற்றில் ஏன் அடிக்கிறாய்? அடுத்தவனை ஏன் மோசம் செய்கிறாய்? நம்பியவனுக்கு ஏன் துரோகம் செய்கிறாய்?

யோசிக்கலாமே?

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top