.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 22 November 2013

திருமணக் காப்பீடு... கட்டாயம் எடுக்கணும்!

அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. கல்யாண ஹாலில் எல்லோரும் சந்தோஷமாக திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க, திடீரென மணப்பெண்ணின் பத்து பவுன் தங்க செயின் காணவில்லை. தங்க செயினை யார் எடுத்திருப்பார்கள் என மணப்பெண் வீட்டார் விசாரிக்க ஆரம்பிக்க, மணமகன் வீட்டைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் வந்தது. அவரை பெண் வீட்டார் கேள்வி கேட்க, இது மணமகன் வீட்டாருக்குத் தெரிந்தவுடன் அவர்கள் தாம்தூமென்று குதிக்க, கடைசியில் திருமணமே நின்றுபோகும் அளவுக்கு வந்துவிட்டது. நல்லவேளையாக, அந்தத் தங்கச் செயின் எப்படியோ திரும்பவும் கிடைத்துவிட, நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது. 

எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  உருவாக்கப்பட்டதுதான் திருமணக் காப்பீடு. நகை திருட்டுக்கான இழப்பீட்டை பெற மட்டுமல்ல;  திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எதிர்பாராமல் நடக்கும்  அசம்பாவிதங்களினால் ஏற்படும் இழப்பு களுக்கோ இந்த பாலிசி கைகொடுக்கும்.

இதுகுறித்து விளக்குகிறார் பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்.


''தமிழகத்தில் திருமணம் என்பதை சென்டிமென்ட்-ஆக பார்க்கிறார்கள். எனவே, இந்த இன்ஷூரன்ஸ் எடுப்பதை பலர் விரும்புவதில்லை. இன்ஷூரன்ஸ் எடுப்பதினாலேயே எந்த அசம்பாவிதமும் நடந்துவிடப் போவதில்லை. அது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். 

திருமண இன்ஷூரன்ஸ் அதிகபட்சம் ஏழு நாட்களுக்குக் கிடைக்கும். திருமண அழைப்பிதழை அடிப்படையாக வைத்து இன்ஷூரன்ஸ் பெறலாம். திருமணத்திற்கு எவ்வளவு நகை, பணம் எவ்வளவு புழங்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவேண்டும். மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டார், திருமணத்திற்கு விருந்தினராக வருகிறவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம்.  திருமணத்திற்கு முதல்நாள்கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.


எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?

பணம், நகை திருடுபோனால், விபத்து ஏற்பட்டால், நெருங்கிய உறவுகள் இறந்து அதனால் திருமணம் தடைபட்டால், திருமண மண்டபத்தில் ஏற்படும் சொத்து சேதம் ஆகியவற்றிற்கு கவரேஜ் கிடைக்கும்.  திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டுமே இழப்பீடு பெறமுடியும். வெள்ளம், கனமழை, புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தினால் திருமணம் நின்றாலும் க்ளைம் கிடைக்கும். அதேபோல ஊரடங்கு உத்தரவு, அவசர காலநிலை, தீவிரவாதத் தாக்குதல் போன்றவை 25 கி.மீட்டருக்குள் நடந்து, அதனால் திருமணம் தடைபட்டால்  க்ளைம் கிடைக்கும்.

எதற்கெல்லாம் கிடைக்காது?

வரதட்சணை பிரச்னை, காதல் விவகாரங்கள் போன்றவற்றால் திருமணம் தடைபட்டால் க்ளைம் பெறமுடியாது. இந்து கோயில்களில் நடக்கும் திருமணத்திற்கு இந்த இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. கிறிஸ்தவ ஆலயத்தில் நடக்கும் திருமணத்திற்கு க்ளைம் கிடைக்க வாய்ப்புள்ளது.

க்ளைம்-ல் கழிவு!


தீ, இயற்கை சீற்றத்தினால் திருமணம் தடைபட்டால் க்ளைம் தொகையில் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், திருமண மண்டபத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டிருந்தால் 5 சதவிகிதம் அல்லது 10,000 ரூபாய், பணம் தொலைந்துவிட்டால் 10 சதவிகிதம் அல்லது 5,000 ரூபாய், நகை தொலைந்துவிட்டால் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், பொதுமக்கள் சேதத்திற்கு 5 சதவிகிதம் அல்லது 25,000 ரூபாய். இதில் எது அதிகமோ அதை க்ளைம் தொகையில் கழித்துவிட்டு மீதித் தொகை மட்டும்தான் கிடைக்கும்.

பிரீமியம்!


திருமணம் நிறுத்தப்பட்டால், திருமண மண்டபத்திற்கு சேதம் ஏற்பட்டால், விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், நகை, பணம் திருடு போனால் ஆகியவற்றிற்கு தனித்தனியாக தலா 2 லட்ச ரூபாயும், பொதுமக்களுக்குச் சேதம் ஏற்பட்டால் ஒரு லட்ச ரூபாயும் மொத்தம் 11 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பிரீமியம் சுமார் 3,000 ரூபாய்க்குள்தான்'' என்றார்.

இனி என்ன, திருமண பட்ஜெட்டில் இன்ஷூரன்ஸுக்கும் ஒதுக்கிடலாமே! 

Thursday, 21 November 2013

சீதாப்பழ பர்பி - சமையல்!

                             
என்னென்ன தேவை?

சீதாப்பழம் - 4,

தேங்காய் துருவல் - 1 கப்,

முந்திரி - 50 கிராம்,

சர்க்கரை - 1 கப்,

நெய் - சிறிதளவு.


எப்படிச் செய்வது? 

சீதாப்பழத்தின் சதைப் பகுதியை எடுத்து அதனுடன் முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். சர்க்கரையை கம்பிப்  பதத்துக்குக் காய்ச்சி, அதில் கலவையை கொட்டி நெய் விட்டு கிண்டவும். சுருள வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.

It is part of the flesh citappalat with cashew, coconut and grind put on Mickey.

ஒருமுறை மட்டும் படிக்கக்கூடிய Email அனுப்ப முடியும்!

 

மின்னஞ்சல் என்பது தவிக்க முடியாத ஒன்றாகி விட்டது நாம் ஒவ்வொரு நாளும் நிறைய மின்னஞ்சல் அனுப்புகிறோம்  ஆனால்  அவைகளில் சில முக்கியமான தகவல்களும் அடங்குகின்றது  நம்மை தவிர யாரும் பாத்து விட கூடாது என்கிற தகவல்களையும் அனுப்புகின்றோம் . இணையத்திருடர்களால் நம்முடைய கணக்கு திருடப்பட்டால் கூட  நம்முடைய இரகசியங்களை யாரும் பாத்திடா வண்ணம்  ஒரு முறை பாக்க கூடிய மின்னஞ்சல்களை எப்படி அனுப்பலாம் என்று பார்ப்போம்

 அழகாக மின்னஞ்சல் அனுப்ப மென்பொருள் என்ற பதிவில் எப்படி அழகாக முன்னன்சல் அனுப்புவது என்ற பதிவையும் பாருங்கள்

காதலை சொல்ல கூட இதனை பயன்படுத்தலாம் காரணம் அண்ணாவிடம் போட்டு குடுக்க முடியாது …

சரி இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம் அதற்கு தீர்வாக தான் ஒரு இணையதளம் உள்ளது. கீழே உள்ள சுட்டியில் சென்றவுடன் தோன்றும் விண்டோவில் சென்று  அனுப்ப வேண்டிய தகவலை தட்டச்சிடவும்.

அதன் பின் தங்களுக்கு ஒரு தொடுப்புக் கிடைக்கும். அதை தகவல் சேர வேண்டியவருக்கு எப்படியாவது அனுப்பிவிடுங்கள்.
அவர் திறந்து வாசிக்கலாம் அதன் பிறகு அவர் மூடி விட்டுத் திறந்தால் மறுபடியும் அங்கே தகவல் இருக்காது.

இணைய முகவரி   https://privnote.com/

காணாமல் போன விளையாட்டுகள்!

village games
அழிந்து போன கிராமத்து விளையாட்டுகளைத் தேடி ‘குங்குமம் தோழி’ மேற்கொண்ட பயணத்தில் கிடைத்த பொக்கிஷத்தை சென்ற இதழில்  பகிர்ந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில அருமையான விளையாட்டுகள் இங்கே... ஆடுவோமே!

உப்புக்கோடு


உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று  கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார்.  மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும்.  முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு. இவரது கவனத்தைத் திருப்ப, மற்றொரு  கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று அழைப்பார். இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத்  தொட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர் கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று  சத்தமிட்டபடி ஒவ்வொரு கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான  விளையாட்டு!

மெல்ல வந்து கிள்ளிப்போ!

2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர்,  பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை  இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு... ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து
கிள்ளிப்போ...’). ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க  என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை திறந்து
விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!

கள்ளன் வாரான்...  களவாணி வாரான்!

மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே  வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார்.  மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

‘காயே கடுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி’

என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார்.  வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை  எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!

பூப்பறிக்க வருகிறோம்!


2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள்.  இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம்  வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையை தேடுவோம்’ இப்படி பாடியதும்  ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே  களேபரம்தான்!

கழங்கு

பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான 7 கூழாங்கற்கள். மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள  வேண்டும். ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக  விளையாடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!

ஒன்றான்: அலசல் அலசல் பாட்டிமா
தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
அம்மியிடுக்குல படுத்திட்டேன்
படுத்த பாயில சுருட்டிட்டேன்
ரெண்டான்: ஈரெண்டு எடுக்கவும்
இளந்தம் பழுக்கவும்
பழுத்து தின்னவும்
மூன்றான்: முக்குட்டு சிக்குட்டு
மூன்றாம் படிக்கட்டு
நான்காம்: நாக்கொத்தி செங்கொத்தி
நாகம் பழங்கொத்தி
அஞ்சான்: ஐப்பால் அரங்கு
பம்பாய் சிலுக்கு
ஆறாம்: ஆக்கூர் முறுக்கு
அள்ளிப்போட்டு நொறுக்கு
ஏழாம்: ஏழதாள எங்க நீ போற
எட்டாம் நம்பர் சேல

இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம்,  நாடு பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக், கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம், கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா  மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள  பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டு அனுபவங்கள்
கிட்டுவதேயில்லை!

பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்!


கனடியன் கைப்பேசிகளின் தயாரிப்பு நிறுவனமான பிளாக்பெர்ரி உடன் பார்ஸ்ச்  டிசைன் இணைந்து ஒரு புதிய அனைத்து டச் பார்ஸ்ச் டிசைன் P'9982 லக்சரி  ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982  ஸ்மார்ட்ஃபோனை நவம்பர் 21-ம் தேதியில் இருந்து பார்ஸ்ச் டிசைன் கடைகளில்  கிடைக்கும்.

வரம்பிடப்பட்ட 500 போர்ஸ் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் சாதனங்கள் மட்டுமே  டிசம்பர் மாத தொடக்கத்தில் உலகளவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.  பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 ஸ்மார்ட்ஃபோன் விலை விவரங்கள் இதுவரை  அறிவிக்கப்படவில்லை. P'9982 ஸ்மார்ட்ஃபோன் பிளாக்பெர்ரி 10.2 ஓஎஸ்  பதிப்புகளில் இயங்கும் என்று பிளாக்பெர்ரி குறிப்பிட்டுள்ளது.

P'9982, 1.5GHz டூயல் கோர் குவால்காம் MSM8960 சிப்செட் மூலம்  இயக்கப்படுகிறது. 2GB ரேம், 4.2-இன்ச் டிஸ்ப்ளே உடன் 768x1280 பிக்சல்கள்  தீர்மானம் கொண்டுள்ளது. பிரீமியம் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்ஃபோனில் 16GB  inbuilt சேமிப்பு வருகிறது மற்றும் 64GB வரை விரிவாக்க கூடிய மைக்ரோ  SD கார்டு உடன் கொண்டுள்ளது.

பிளாக்பெர்ரி பார்ஸ்ச் டிசைன் P'9982 முக்கிய குறிப்புகள்

1.5GHz டூயல் கோர் குவால்காம் MSM8960 சிப்செட்,

4.2-இன்ச் டிஸ்ப்ளே உடன் 768x1280 பிக்சல்கள் தீர்மானம்,

2GB ரேம்,

பிளாக்பெர்ரி 10.2 ஓஎஸ் பதிப்பு

64GB வரை விரிவாக்க கூடிய மைக்ரோ SD கார்டு

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top