.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 20 November 2013

நீங்கள் மூளையின் வல பக்கமா? இடப் பக்கமா?ஒரு சின்ன டெஸ்ட்!!


உலகிலேயே மிக மிக ஆச்சரியம் – மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண் துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.இந்நிலையில் மூளையை பொறுத்த மட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்பு குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “corpus callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகள் என மூளையை கொண்டுள்ளது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும், வலது பாகம் உடலின் இடது புறத்தையும் கவனித்துக்கொள்கிறது. “corpus callosum” பகுதியை சமமாக வெட்டினால் இரு பாகங்களான மூளைக்கு தொடர்பே இருக்காது.

அதிலும் ஒரு பாகம் செயல் படுவது மற்றொரு பாகத்துக்கு தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றுது செய்யுமா? (அ) செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? 1861ல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது. பிரெஞ்சு டாக்டர் ப்ராகா பேச முடியாத நோயாளியை கண்டார். நாம் சொல்வதை புரிந்து கொண்டாலும் அவனால் திரும்ப பேச முடியாது. முக பாவங்களை, கை அசைவு கொண்டு அவனால் அறிவு பூர்வமாக பதிலளிக்க முடியும். ஆனால் பேச முடியாது.

இதற்கிடையில் இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள்.

சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் ஒரு இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் எல்லோரும் சட்டென புரிந்து கொள்ள முடியும்)

இந்த பரீட்சையின் முடிவில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்டுபிடிக்கலாம் என்று தான் இந்த இணையத்தளம் சொல்லும். ஆனால் அதற்காக ஆர்வக் கோளாறில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பட்டு பட்டுனு பட்டன்களை தட்டிச் சென்றீர்கள் என்றால் இறுதி முடிவு சில வேளை தவறாக கொடுக்கலாம். எனவே கொஞ்சம் நின்று நிறுத்தி நிதானமாக மனம் என்ன சொல்கிறதோ, மன்னிக்க, மூளை என்ன சொல்கிறதோ அதனபடி பதில் அளியுங்கள். முடிவில் நீங்கள் எந்தப்பக்க மூளையை பயன்படுத்துபவர் என ஆதாரத்தோடு அடித்துச் சொல்கிறது இப்பரீட்சை.

இனி பரிட்சைக்கு க்ளிக் :::http://en.sommer-sommer.com/braintest/

மோடிக்கு நோ விசா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீ்ர்மானம்!

 nov 20 - modi u s
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர். மதசுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மோடிக்கு விசா மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்று அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த தீர்மானம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தங்களுக்கு நீதி கோரி வருவதையும் குறிப்பிட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2002–ம் ஆண்டு கலவரம் நடந்தது. அதில் ஏராளமானவர்கள் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் – மந்திரியாக நரேந்திரமோடி பதவி வகித்தார்.

இதையடுத்து மத சுதந்திரத்தின் விதிமுறையை மீறியதாக கூறி இவருக்கு ‘விசா’ வழங்க அமெரிக்கா மறுத்தது. அதை தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெறும் வர்த்தக மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேரில் பங்கேற்காமல் வீடியோ, கான்பரன்சிங் (வாணொலி காட்சி) மூலம் அவர் பேசி வந்தார்.

இந்த நிலையில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து எதிர்காலத்தில் அவர் பிரதமராகும் பட்சத்தில் அவருடன் அமெரிக்கா சுமூக உறவு மேற்கொள்ளும் என அமெரிக்கா அறிவித்தது.

எனவே, தடைகள் நீக்கப்பட்டு நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு ‘விசா’ மறுப்பு நீடிக்கப்படுகிறது.அதற்கான தீர்மானம் அமெரிக்கா பாராளு மன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மைனாரிட்டிகளின் உரிமைகள் மற்றும் மத சுதந்திரங்களை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்த தீர்மானத்தை ஆளும் குடியரசு கட்சியின் கெய்த் எல்லிசன், எதிர் கட்சியின் குடியரசு கட்சியின் ஜோபிட்ஸ் மற்றும் 25–க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர்.

பெங்களூரில் பிஸியான இடத்தில் ஏடிஎம் செண்டரில் வெட்டப்பட்ட பெண் (வீடியோ)?



 

பெங்களூரில் கார்ப்பரேசன் சர்க்கிள் என்னும் இடம் மிகவும் பிஸியான இடம், இந்த இடத்தில் இருந்த ஏடிஎம் செண்டரில் நேற்று காலை 7.30 மணிக்கு புகுந்த ஒருவன் கையில் துப்பாக்கி கத்தியோடு மிரட்டி பணம் பறிக்க முயன்றான், ஆனால் 44 வயதான அந்த பெண் கொடுக்க மறுத்ததால் அந்த பெண்ணை வெட்டிவிட்டு சென்று விட்டான், வெட்டப்பட்ட பெண் மயக்கமடைந்து கிடந்தார், பின் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏடிம் செண்டரின் ஷட்டரை மூடிவிட்டு நடந்த கொடூரம் பெங்களூர் மக்களை குறிப்பாக பெண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

"பரம்பரை "யின் உண்மையான பொருள்!

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்
 பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
 என்று சொல்வதுண்டு...

பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
 என்று சொல்லலாம் என்றாலும்,
 "தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும்.

அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
 நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
 மகன் + மகள்
 பெயரன் + பெயர்த்தி
 கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
 எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

 நமக்கு முந்தைய தலைமுறைகள்:

நாம் - முதல் தலைமுறை

 தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

 பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

 பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

 ஓட்டன் + ஓட்டி -
ஐந்தாம் தலைமுறை

 சேயோன் + சேயோள் -
ஆறாம் தலைமுறை

 பரன் + பரை - ஏழாம் தலைமுறை

 ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள்
 என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
 (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
 பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
 என்று பொருள் வரும்.
எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
 இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

உங்கள் நண்பர்களுக்கு தெரிய பகிரவும் !!

உடலின் செயலற்ற பகுதிகளை ஸ்டெம் செல்களால் இயங்க செய்யலாம்!


 ஸ்டெம் செல்களை அதிகரிக்கச் செய்வதன் மூலம் உடலில் செயலற்ற பகுதிகளை இயங்க செய்ய முடியும் என்று லைவ் 100 மருத்துவமனையின் இயக்குனர் நாகராஜ் தெரிவித்தார்.

பெங்களூருவில் திங்கள்கிழமை அம்மருத்துவமனையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: முதுகுத்தண்டில் எதிர்பாராதவிதமாக அடிபடுதவதால், விபத்துகளால் முதுகுதண்டு பாதிக்கப்பட்டு, உடலில் கை,கால்கள, இடுப்பு உள்ளிட்ட பகுதிகள் செயலிழந்து போகும். தற்போது புதிய மருத்துவ கண்டுபிடிப்பால், ஸ்டெம் செல்களை அதிகரிகச் செய்து செயலிழந்துள்ள பகுதிகளை இயங்கச்செய்ய முடியும்.

இது மருத்துவ உலகிறகு வர பிரசாதமாகும். விபத்து உள்ளிட்டவைகளால் உடலின் சில பகுதி செயல் இழந்துவிட்டால் பெரும்பாலானவர்கள் தங்களது எதிர்காலம் சூயன்யமாகிவிட்டதாக கருதுகின்றனர். தற்போது மருத்துவத்தில் பல வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. எனவே உடலில் சில பகுதிகள் செயலிழந்தால் யாரும் மன தைரியத்தை இழக்காமல், உரிய சிகிச்சை பெற்ற நீண்ட நாள் வாழ வழி உள்ளது என்பதனை உணரவேண்டும் என்றார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top