.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 20 November 2013

நீ தாண்டா சூப்பர் மேன்!

1) வீதியில் எச்சில் துப்பாதவன் ..

2) பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்

3) சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன்

4) கழிவறையில் சிறுநீர் கழிப்பவன்

5) தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செல்லுபவன்

6) ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன்

7) பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்

8) மூடநம்பிகையை நம்பாதவன்

9) பந்தா லொள்ளு செய்யாதவன்

10) குடியால் குடியை அழிக்காதவன்..

பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்:-

தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது அவற்றின் வளர்ச்சியைப் பொருத்த விஷயமாகும். ஆனால் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி இங்கு காணலாம்.

முதல் மாதம்

 கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.

இரண்டாம் மாதம்

 அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.

மூன்றாம் மாதம்

 தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.

நான்காம் மாதம்

 நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.

5ம் மாதம்

 ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.

6ம் மாதம்

 வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.

7ம் மாதம்

 ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.

8ம் மாதம்

 பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.

9ம் மாதம்

 ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.

10ம் மாதம்

 அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.

12ம் மாதம்

 ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.

15வது மாதம்

 தனியாக நடப்பார்கள். உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள். படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.

இவ்வாறாக குழந்தை வளர்ந்து சிறுவனாகிறது. இந்த படிநிலைகளில் சில குழந்தைகளின் வளர்ச்சியும், மற்ற சில குழந்தைகளின் வளர்ச்சியும் வேறுபடும்.

Tuesday, 19 November 2013

பேஸ்புக் & தமிழன்? ஒப்பீடு!

பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கி உள்ளார் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
 செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
 முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
 முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
 வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

 6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

 7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

 8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
 "Block this person"

 9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

 10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
 வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

புத்தகம் வாசிப்பது பற்றி புகழ் பெற்ற மேதைகள் சொன்ன சில சுவாரசியமான தகவல்கள் !!!


► ''என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று'' என்றார் பெட்ரண்ட் ரஸல்.


► மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.


► 'வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.


► பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.


► ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.


► 'ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

'தூம் 4'ல் நடிப்பாரா அஜித்?

  
பாலிவுட்டில் 'தூம்1', 'தூம்2'  படங்கள் மாஸ் ஹிட் ஆனதால், 'தூம்3' படம் உருவானது.

'தூம் 3' படம் ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது. அமீர்கான், அபிஷேக்பச்சன், காத்ரீனா கைஃப், உதய் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 'தூம் 4' படம் எடுத்தால் அதில் அஜித் நடித்தால் நடிப்பார்  என்று சொல்லப்படுகிறது.

'மங்காத்தா', 'ஆரம்பம்' படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் அஜித்.

கார், பைக் ரேஸில் அஜித்தை அடித்துக்கொள்ள ஆளில்லை  என்பதால் 'தூம்4' படத்தில் நடிக்க அஜித் மிகப் பொருத்தமாக இருப்பார் .

மேலும், 'ஆரம்பம்' பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த சமயத்தில் அஜித் பாலிவுட்டில் நடிப்பது சரியாக இருக்கும் என்கிறார்கள்.

அஜித் பாலிவுட்டில் நடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top