பாலிவுட்டில் 'தூம்1', 'தூம்2' படங்கள் மாஸ் ஹிட் ஆனதால், 'தூம்3' படம் உருவானது.
'தூம் 3' படம் ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது. அமீர்கான், அபிஷேக்பச்சன், காத்ரீனா கைஃப், உதய் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 'தூம் 4' படம் எடுத்தால் அதில் அஜித் நடித்தால் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
'மங்காத்தா', 'ஆரம்பம்' படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் அஜித்.
கார், பைக் ரேஸில் அஜித்தை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதால் 'தூம்4' படத்தில் நடிக்க அஜித் மிகப் பொருத்தமாக இருப்பார் .
மேலும், 'ஆரம்பம்' பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த சமயத்தில் அஜித் பாலிவுட்டில் நடிப்பது சரியாக இருக்கும் என்கிறார்கள்.
அஜித் பாலிவுட்டில் நடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
0 comments: