.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 18 November 2013

கார்த்தியின் ‘பிரியாணி’ டிசம்பர் 20-ந் தேதி ரிலீஸ்!



பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம் 2’, அஜீத்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி’ படத்தையும் பொங்கலுக்கு களமிறக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், பெரிய ஜாம்பவான்களின் படங்கள் அன்றைய தினம் வெளியாகவுள்ளதால், அவர்களுடன் போட்டி போட முடியாது என நினைத்த இப்படக்குழு படத்தை டிசம்பர்-20ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. அரையாண்டு விடுமுறையை மனதில் வைத்து இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘பிரியாணி’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடித்துள்ளார். பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

சின்னதாய் யோசித்து பார்ப்போமா ?

*கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்கின்றார்கள்
என்பதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை என்றாகி
விடுமா? இல்லவே இல்லை, ஏனென்றால் தம்பதியினர் ஒருவரை ஒருவர் மனதார நேசிக்கின்றார்கள்.இருந்தாலும் சில சமயங்களில் ஏன் சண்டை வருகின்றது.இப்படி சண்டை வருவதால் ஒருவரை
ஒருவர் புரிந்து கொள்ளாது மணவாழ்கை தனை முறிந்துக்
கொண்டு போகத்தான் வேண்டுமா என்பதனை சின்னததாய்
யோசித்து சின்னதாய் திருந்தினால் என்ன...............

*பொரும்பாலான தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் அன்புடனும்
கனிவுடனும் நடத்தவே விரும்பினாலும் ,எல்லோரும் கருத்து
வேறுபாடு காரணமா, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்
தங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
வாக்குவாதம் செய்து பெரிதாக கத்தி கூச்சல் போட்டு
கெட்ட கெட்ட வார்தையால் திட்டி கடினமாக நடக்கின்றோமே
இப்படி நடக்கத்தான் வேணுமா ?இப்படி ஒருவரை ஒருவர்
காயப்படுத்துவதால் நாங்கள் எதை சாதிக்கின்றோம்.
என சின்னதாய் இருவரும் யோசித்து பார்த்தால் என்ன?

*கணவனும் மனைவியும் ஒரோ விதமான கருத்துக்களை
பரிமாறிக்கொள்வோம் என்று இல்லை, பெரும்பாலும்
இது நபருக்கு நபர் வேறுபடும். உதரணமாக, ஒருவர்
ஒருவிடையத்தை கூறும் போது விரிவாய் கூறவிரும்பலாம்
மற்றவர் அதனை சுருக்கமாக கேட்க விரும்பலாம், இதனை
புரிந்து கொள்ளாது சண்டை ஏற்படும் போது உங்களை புரிந்து
கொள்ள, உங்கள் மனதை சின்னாய் திறந்து ,சிந்திந்து சின்னதாய்
ஒரு தரம் யோசிந்தால் என்ன?இப்படி யோசிந்து வரும்
வாக்குவதை தவிப்பதற்காக ஒருவர் கலந்து பேசாது தவிர்க்கலாம்.
இதனையும் புரிந்து கொள்ளாது மற்றவர் விடப்பிடியாக
பேசமுயலும் போதும் அப்போதும் சண்டைவரலாம் இப்படி புரிந்து
கொள்ளாது கூட குடும்பங்களில் சண்டை வரலாம்
இதனை இருவரும் சின்னதாய் புரிந்து சின்னதாதய் யோசித்தால் என்ன?

*கணவனும் மனைவியும் வெவ்வோறு சுழலில் வளர்ந்தவர்களாக
இரு்ப்பதால் தங்களுக்குள் எப்படி பேசிக்கொள்ளவேண்டும்
என்பது குறிந்து வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள் .
உதரணமாக, ஒருவர் அமைதியான வீட்டு சூழலில் வாழ்ந்து
இருப்பார் மற்றவர் கலகலப்பான வீட்டு சூழலில் வாழ்ந்திருப்பார்
இப்படியான வாழ்வியலில் இருந்து வரும் போது ஒருவர் தன்
மனம் திறந்து பேச தெரியாமல் தவிப்பார் .மற்றவர் தன்
மனம் திறந்து வெளிப்டையாக பேசுவார், இதனை புரிந்து
கொள்ளாது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு
ஒருவர் மேல் ஒருவர் கோவம் கொள்வதால் ஏற்படுபடும்
கருத்து வேறுபாட்டால் வரும் சண்டையை தவிர்ப்பதற்கு
சின்னததாய் மனம் திறந்து யோசிந்து பார்த்தால் என்ன?

கழுதை – வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் அபூர்வ ‘வரிக்கழுதை’

 
உயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த டார்வின் காலத்தில் இருந்தே உயிரினங்களின் வாழ்க்கை ரகசியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், பல்வேறு கலப்பின உயிரினங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் ஆண் வரிக்குதிரை மற்றும் பெண் கழுதையின் கலப்பினச் சேர்க்கையின் பலனாக வரிக்கழுதை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

விலங்கினங்களில் வரிக்குதிரை, கழுதை போன்றவை குதிரை இனத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. எனினும், உயிர் உற்பத்திக்கு தேவையான ‘குரோமோசோம்’களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு விலங்கினத்திலும் வேறுபாடு உண்டு.

இந்த வேறுபாடுகளை எல்லாம் கடந்து பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு ஆண் வரிக்குதிரை வேலியை தாண்டி தப்பிச் சென்று, வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த பெண் கழுதையுடன் இனச் சேர்க்கையில் ஈடுபட்டதன் விளைவாக வரிக்குதிரையின் கால் மற்றும் கழுதையின் முகம் மற்றும் உடலமைப்புடன் இந்த அபூர்வ வரிக்கழுதை பிறந்துள்ளது.

இதற்கு முன்னரும், வரிக்குதிரை – குதிரை, ஆண் கழுதை – பெண் குதிரை போன்றவை கலப்பினச் சேர்க்கையில் ஈடுபட்டு குட்டிகளை ஈன்றுள்ளன.

இருப்பினும், ஆண் வரிக்குதிரையும், பெண் கழுதையும் இணைந்து ஒரு குட்டியை ஏற்படுத்தியது இதுவே முதல் முறை என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சும்மா’ என்ற சொல் கோபமூட்டும்!

பேசும்போது சிலர் வழக்கமாக ஒருவித சொற்களை உச்சரிப்பார்கள், அது மற்றவர்களுக்கு பிடித்திருக்கலாம்; அல்லது எரிச்சல் தரலாம். அப்படி, நமது உரையாடலில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்கள் எவை?, அதில் அதிக எரிச்சலை மூட்டும் சொற்கள் எவை? என்பது பற்றி சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில், “வேறு என்ன?”, “அப்புறம்” என்ற சொற்கள் தான் அதிகமாக உறவு முறிவை, மனக்கசப்பை ஏற்படுத்தும் சொல் என்று தெரிய வந்துள்ளது. நியூயார்க் நகரிலுள்ள மாரிஸ்ட் கல்லூரி மாணவர்கள் இந்த கணக்கெடுப்பை நடத்தினார்கள். அந்த ஆய்வில் 10-ல் நான்கு பேர், “வேறென்ன”, “ஏதாவது” என்ற சொற்கள்தான் தங்களுக்கு தொந்தரவு செய்யும் வார்த்தையென்று குறிப்பிட்டுள்ளனர். ஐந்தில் ஒருவர், “இந்த மாதிரி”, “உனக்குத் தெரியுமா” போன்ற வார்த்தைகள் தங்களுக்கு எரிச்சல் தரும் என்று கூறி இருந்தனர்.

அதேபோல, “சும்மா”, “நிஜமாகவே” போன்ற வார்த்தைகள் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தை ஊட்டுவதாகவும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. நீங்கள், மற்றவர்களுடன் சுமூகமான உறவை நீடிக்க விரும்பினால், “வேறு ஏதாவது பேசு”, “வேற ஒண்ணுமில்லையா?”, “அப்புறம்” என்ற வார்த்தைகளை குறைவாக உச்சரியுங்கள். “நீ இந்த மாதிரி தவறுகளை செய்கிறாய்,” “அவன் இந்த மாதிரிதான்”, “அது உனக்குத் தெரியுமா?” “என்னைப் பற்றித் தெரியுமா”, “அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?”, “சும்மாதான் சொன்னேன்,” “விளையாட்டுக்குச் சொல்லவில்லை, சீரியசாகவே சொல்கிறேன்” போன்ற வார்த்தைகள் அதிகம் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

திருமணங்களை நடத்தி வைக்கும் “ரோபோ’க்களை அடுத்து மாடு மேய்க்கும் ரோபோ ரெடி!




 சமீப காலமாக் ஜப்பானியர்கள் ரோபோக்களை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சிறிய ரக கார்களை ஓட்டும் மினி ரோபோக்கள், மனிதனின் கட்டளைகளுக்கு ஏற்ப சிறு சிறு பணிகளை செய்து முடிக்கும் வகையிலான ரோபோக்கள் போன்றவற்றை வடிவமைத்து ஜப்பானியர்கள் உலகின் பார்வையை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளனர்.

அத்துடன் திருமணங்களில் மணமக்களின் நண்பனாகவும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளராகவும் செயல்படும் அதிநவீன ரோபோக்களையும் ஜப்பானிய நிபுணர் வடிவமைத்ததையடுத்து ஜப்பானை சேர்ந்த இளம் ஜோடிகள் பலரும் தங்கள் திருமணத்தில் இந்த அதி நவீன ரோபோக்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.இந்த வகையில், மாடு மேய்க்கவும் ரோபோக்களை ஆஸ்திரேலியாவில் உள்ள சில விஞ்ஞானிகள் வடிவமைத்து அசத்தி இருக்கிறார்கள்,

இதற்காக இந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நான்கு சக்கரங்கள் கொண்ட ஒரு ரோபோவை தயாரித்துள்ளனர். இந்த ரோபோ மேய்ச்சலுக்கு மாடுகளை கொண்டு செல்லும். அது மட்டுமின்றி இரவில் மாடுகளை கண்காணிக்கும். விவசாயிகளுக்கு பெரும் பயன் அளிக்கும் இந்த ரோபோவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரோபோ முற்றிலும் தானியங்கி முறையில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 nov 17 - tec robot-roundup.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top