.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 18 November 2013

டீ என்கிற தேநீர் – சூடு பறக்கும் சில உண்மைகள்!

 nov 17 - tea biscut.Mini

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பீகார் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஏழை குடும்பத்தில் பிறந்த நான், ரெயில்வே நிலையம் மற்றும் ஓடும் ரெயிலிலும் டீ விற்று இருக்கிறேன் என்று கூறினார்.இதைத் தொடந்து ஒரு கான்ஸ்டபிள் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது, டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் கமான்ட் அடிக்க மோடி பதிலடியாக “டீ விற்றவரை நாட்டின் பிரதமராக கொண்டு வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டை விற்பதை காட்டிலும் டீ விற்பதே சிறந்தது.” என்றார் இப்படி சூடு பறக்கும் தேநீர் பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `

கிமு 2737ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு புகழ்பெற்ற சீனக் கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான். புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம்.

இப்பேர்பட்ட தேநீரை தினமும் 3 கோப்பை குடித்தால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக தேநீர் குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவுக்கு தடுக்கிறது.இப்படி தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கெனவே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் தினமும் 2 கோப்பைக்கும அதிகமாக தேநீர் குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைகிறது என்றும தற்போதைய ஆய்வில் தினமும் 3 கோப்பைகளுக்கு மேல் தேநீர் குடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அளவுக்கு குறைவது தெரியவந்துள்ளது.

அத்துட்ன் தேநீர் குடிப்பது கோப உணர்ச்சியையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ரத்தக்குழாய்களை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இதனால்தான் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இதையெல்லாம் விட மேலாக தேநீரில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அந்நிலையில் மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `தேநீர்ச் செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக தேநீர் இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் தேநீர் தடுக்கிறது.இனி பல்லை பாது காக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. தேநீர் குடித்தாலே போதும்.

வானில் 28 - 29-ந் தேதிகளில் வால் நட்சத்திரம் தோன்றும்!



நமது சூரிய குடும்பத்தில், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் உள்பட 8 கிரங்கள் உள்ளன. ஒரு சில கிரங்களைச் சற்றி துணக்கோள்களும் (நிலவு) இயங்குகின்றன.


இவற்றை தவிர ஏராளமான விண்கற்களும் சூழன்று வருகின்றன. இவற்றில் சில வால் நட்சத்திரங்களைப் போன்று தோன்றும் அந்த வகையில் ஐசான் என பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் , நவம்பா் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் காட்சியளிக்க உள்ளது.


இந்த வால்நட்சத்திரம் வினாடிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இது பூமியை நோக்கி நெருங்கி வருகிறது.


 குறிப்பாக தென்னிந்திய பகுதியை நோக்கி வருவதால்  இப்பகுதி மக்கள் இதை காண முடியும். 2 நாட்களிலும் மாலை 5 மணியளவில் இந்த நட்சத்திரம் காட்சியளிக்கத் தோன்றும்.


 மேகக் கூட்டங்களில் காண்பது கடினம். ஆகவே, சென்னை அறிவியல் மையத்தில் இதை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 6 சுற்றுகள்; என்ன செய்யப் போகிறார் ஆனந்த்?

 

அடுத்தடுத்த சுற்றுகளில் தோல்வி அடைந்ததன் மூலம் கார்ல்ஸெனை விட 2 புள்ளிகள் பின் தங்கி உள்ளார் ஆனந்த். இன்னும் 6 சுற்றுகள் மட்டுமே மீதி உள்ளது. அதனால், அனுபவம் வாய்ந்த ஆனந்த் எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற ஆவல் மேலோங்கி உள்ளது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) நடத்தும் இத்தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதுவரை முடிந்த 6 சுற்றுக்களின் முடிவில், நார்வேயின் கார்ல்ஸென் 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 5-வது மற்றும் 6-வது சுற்றுக்களில் அடுத்தடுத்து அவர் 2 வெற்றிகள் பெற்றதே இதற்கு காரணம்.

இத்தொடரில் 6.5 புள்ளிகளை முதலில் பெறுபவரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். தரவரிசையில் முதல் இடத்திலுள்ள கார்ல்ஸென் இன்னும் 2.5 புள்ளிகள் பெற்றால், உலக சாம்பியனாகி விடுவார்.

ஓய்வுக்குப்பின் திங்கள்கிழமை 7-வது சுற்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆனந்த் தன் திறமையை நிரூபித்தாக வேண்டும். இந்த தொடர் தொடங்கும் முன், ஆனந்த் இவ்வளவு எளிதில் சரணடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் நான்கு சுற்றுகள் டிராவில் முடிந்தபோது நம்பிக்கையுடன் இருந்த ஆனந்த், அடுத்தடுத்த தோல்வியால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். 6-வது சுற்றின் முடிவில் இது கண்கூடாகத் தெரிந்தது.

5-வது சுற்றின் தோல்வி, 6-வது சுற்று ஆட்டத்தில் எதிரொலித்தது என்று ஆனந்த் தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த தோல்விகளைக் கையாளும் விதம் குறித்து நார்வே பத்திரிகையாளர் ஒருவர் ஆனந்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆனந்த், ""இன்னும் திறமையாக செயல்பட வேண்டும்'' என்றார்.

பதிலை விரிவாகத் தெரிவிக்குமாறு அந்த நிருபர் வலியுறுத்தினார். அதற்கு ஆனந்த், ""திறமையாக செயல்பட வேண்டும் என்பதற்கு அர்த்தம் திறமையாக செயல்பட வேண்டும் என்பதே. இந்த ஆங்கிலம் ஏன் உங்களுக்குப் புரியவில்லை எனத் தெரியவில்லை'' என்றார்.

இதற்கு முன்பும் தோல்விக்குப் பின் பத்திரிகையாளர்கள் இதுபோல ஆனந்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஆனந்த் அப்போதெல்லாம் நிதானம் இழக்கவில்லை.

7-வது சுற்றில் ஆனந்த் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாட உள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறக் காய்களிலும் கார்ல்ஸென் திறமையை நிரூபித்து விட்டார். குறிப்பாக, கருப்பு நிறக் காய்களுடன் காரோ கான் மற்றும் பெர்லின் தடுப்பு முறைகளில் ஆனந்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார்.

புள்ளிகள் பட்டியல்

சுற்று ஆனந்த் கார்ல்ஸென்

1               0.5     0.5

2               0.5     0.5

3               0.5     0.5

4                0.5    0.5

5                    0      1

6                     0     1

* டிராவானால் தலா 0.5 புள்ளிகள்.

* வெற்றி பெற்றால் 1 புள்ளி.

Sunday, 17 November 2013

நமக்கு ஏற்படும் கோபத்தை குறைக்க சில வழிகள்!

சராசரியாக  எல்லா மனிதருக்குமே இருக்கும் ஒரு குணம், கோபம். இந்த உலகில் கோபப்படாத மனிதரே இருக்கமுடியாது. அப்படி கோபம் இல்லாவிட்டால் அவர் மனிதராகவே இருக்கமுடியாது. எல்லோருக்குமே கோபம் வரும். ஆனால் அது வெளிப்படும் முறையில்தான் வித்தியாசம்.சிலபேர் அழுவார்கள், சிலபேர் கையை பிசைவார்கள், பல்லைகடிப்பார்கள், கையை ஓங்கி குத்துவார்கள் (சுவற்றிலோ அல்லது அடுத்தவர் மூக்கிலோ), காச் மூச்சென கத்துவார்கள், கையில் கிடைத்ததை போட்டு உடைப்பார்கள். சரியோ தவறோ, கோபப்படுவது அவ்வளவு நல்ல குணம் அல்ல. ஆனால் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது?

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. அந்த இடத்தை விட்டு நல்ல காற்றோட்டமான இடத்துக்கு சென்று விடுங்கள். அந்த நிகழ்வை பற்றி நினைக்காமல் நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். இது உங்களை சாந்தப்படுத்தும்.

7. எனக்குத்தெரிந்து ஒரு மனிதனின் முகம் மிக அசிங்கமாக இருப்பது அவன் கோபப்படும்போதுதான். ஆகவே கோபம் வந்தால் உடனே கண்ணாடியில் முகத்தை பாருங்கள் (கண்ணாடி கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் இருப்பது நலம்). அசிங்கமான நம் முகத்தை பார்க்கும்போது நமக்கு சிரிப்பு வரும். அதன்பின் எப்போது கோபம் வந்தாலும் நம் முகம்தான் ஞாபகத்துக்கு வரும்.

8. கோபத்தில் தொலைவில் இருக்கும் யாரையாவது தாக்கவேண்டும், அல்லது திட்ட வேண்டும் என்றால், அதை கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். சாயங்காலம் திட்டலாம், நாளைக்கு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்ட எந்த காரியமும் உருப்பட்டதில்லை.

9. உங்கள் மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். வலுக்கட்டாயமாக இல்லாமல், இயல்பாக கேட்க ஆரம்பியுங்கள். இசை கேட்க விருப்பம் இல்லை என்றால் கார்டூன் சேனல் பாருங்கள்.

10. குழந்தைகளோடு உரையாடுங்கள். கோபம் பறந்துவிடும். இல்லை இரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பிறகு உங்களுக்கு அதே போலத்தானே நாமும் செய்கிறோம் என்று வெட்கபடுவீர்கள்.

11. ஜப்பானியர்கள் பொதுவாக கோபத்தை குறைக்க தலையணையை அடித்து துவைப்பார்களாம். ஆகவே தனக்கு காயம் ஏற்படுத்தாத இந்த முறையை பின்பற்றலாம்.

கோபம் உன்னையே அழித்து விடும்:உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்” என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்…
கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

· நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது…

· நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது…

· நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது…

· எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது …இப்படியே பல காரணங்கள் உள்ளன.

ஒருவன் நம்மைப் பார்த்து “கழுதை” என்று திட்டும்போது நாம் “குரங்கு” என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்…

· வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

· திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

· தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

· மன இருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

· முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது….கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

· இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

· மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன அதனால் கோபத்தை அளவோடு வைத்து கொள்ளுங்கள்

மனிதனின் மனதை ஈர்க்கும் பட்டாம்பூச்சிகள்!

 

மனிதனின் மனதை ஈர்க்கும் அதிசயங்கள் பல அவற்றில் வணணத்துப்பூச்சிக்கு சிறப்பிடம் உண்டு. பல வண்ணங்களில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் பார்பவர்களை பரவசப்படுத்திவிடும்.

பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன.

ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன.

சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) பறந்து செல்கின்றன.

அந்த அழகு பட்டாம்பூசியைப் பற்றிய ஒரு கூடுதல் தகவல் இது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு காதுகள் கிடையாது என்றோ, அதன் உறிஞ்சுகுழல் மூலம் உணர்ந்து கொள்ளும் என்றோ நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு.

இங்லாந்தில் உள்ள பிரிஸ்டோல் பல்கலைக்கழக குழு ஒன்று இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. அவர்கள் புளுமார்போ இன வண்ணத்துப்பூச்சிகளில் காதுகள் இருக்கும் ரகசியத்தை கண்டுபிடித்தனர். அதன் வண்ணமயமான இறகுகள் உடலோடு இணையும் பகுதியில் இந்தகாதுகள் அமைந்துள்ளன. இது சிறிய புள்ளி போன்ற சற்று மேலேழும்பிய குமிழ் போல காணப்படும். சாயம்போன மஞ்சள் நிறத்தில் இது அமைந்திருக்கும்.

இந்தபகுதியே வண்ணத்துப்பூச்சிகள் ஒலியை கேட்கத் துணைபுரிகிறது. 1000 முதல் 5 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரையிலான ஒலியை கேட்கும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. (மனிதனின் ஒலி உணரும் திறன் 20 மிதல் 20 ஆயிரம் ஹெர்ட்ஸ் அளவாகும். நமது பேட்டின் அதிர்வு 100 முதல் 4 ஆயிரம் ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.)

அதிர்வுகளை காதுகளின் மேற்புற செல்களே அறிந்து கொள்கின்றன. மற்ற ஒலி அலைகளை உட்புற செல்கள் நரம்புகள் கடத்தும் அதிர்வுகளாக மாற்ரி நரம்பு செல்கல் மூலம் அறிந்து கொள்கின்றன.

பறவைகளின் பாட்டுக்களை கேட்கவும், தன்னை நெருங்கிவரும் ஆபத்துக்களை அறியவும், திசைமாற்றி பறக்கவேண்டிய நேரத்திலும் இந்த உறுப்பை அதிகமாக பயன்படுத்துகின்றன.

1912 வரை வண்ணத்துப்பூச்சிகளுக்கு காது கேக்காது என்றே நம்பப்பட்டது. அதன் பிறகு சிலவகை பட்டாம்பூச்சிகள் ஒலி அதிர்வை அறிந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

வண்ணத்துப்பூச்சிகளை கண்டு ரசியுங்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top