.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 16 November 2013

நெரிசலில் சிக்காது ஆம்புலன்ஸ் - மாணவர் கண்டுபிடிப்பு!

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் எளிதாகச் செல்ல தொழில்நுட்பம் ஒன்று பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது


கண்டுபிடிப்பின் பெயர் : Emergency Traffic Clearing Remote Control kit

கண்டுபிடிப்பாளர்களின் பெயர் : லோகேஸ்வரன், விஷ்ணுதாஸ், விகாஷ், ஜவகர்

பள்ளியின் பெயர் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காரமடை

கண்டுபிடிப்பின் பயன் : ஆம்புலன்ஸ் டிரைவர் தன் கையில் உள்ள ரிமோட்டை பயன்படுத்தி போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிக்னலை மாற்றமுடியும்



உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை ஏற்றிச்  செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையை விரைவாகச் சென்று அடைந்திட, எமர்ஜென்ஸி டிராஃபிக் கிளியரிங் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் (Emergency Traffic clearing Remote control Kit) என்கிற கருவியை உருவாக்கியுள்ளனர் காரமடை, ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.  இந்தக் கருவி  RF waves என்னும் பண்பலை கொண்டு இயங்குகிறது.

சாலையில் உள்ள ஆட்டோமெட்டிக் சிக்னல்களில் ஒரு RF Trasnmitter பொருத்தி விடவேண்டும். அந்த RF Transmitter  ரிசீவரிடமிருந்து வரும் கட்டளைகளை ஏற்று செயல்படும் வகையில் கம்ப்யூட்டர் உதவியுடன் சிக்னல் கருவியின் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.


ஆம்புலன்ஸில் உள்ள ரிமோட் கருவியில் ஸ்விட்சுகளும் இருக்கும். ஆம்புலன்ஸை ஓட்டி வரும் டிரைவர், 500 மீட்டர் தொலைவில் வரும்போதே ரிமோட்டை அழுத்தினால் போதும். அதிலுள்ள RF Transmitter  மூலமாக கட்டளைகள் அனுப்பப்படும். அப்போது  சிக்னலில் பொருத்தியுள்ள RF waves  பெறப்பட்டு, ஆம்புலன்ஸ் வரும் பாதையில் கீரின் சிக்னலாகவும் மற்ற பாதையில் உள்ள  சிக்னல்கள் ரெட் சிக்னலாகவும் ஒளிர ஆரம்பித்து விடும்" என்கிறார், மாணவர் லோகேஸ்வரன்.


சிக்னல் விளக்கிற்கு 500 மீட்டர் தொலைவிற்கு முன்பே டிரைவர் இதை இயக்க முடியும். சிக்னலின் முன் நின்றிருக்கும் மற்ற வாகனங்கள் சிக்னலை உணர்ந்துகொண்டு இயங்கிட போதிய அவகாசம் கிடைக்கும்" என்கிறார்கள் இந்த மாணவர்கள்.


மத்திய அரசின் தொழில்நுட்ப விருதான,  ‘INSPIRE’  விருது இக்கண்டுபிடிப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரஜினி, விஜய், அஜீத் படங்களுடன் போட்டி: 'விஸ்வரூபம் 2' படமும் ஜனவரியில் வருகிறது!


ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு போட்டியாக 'விஸ்வரூபம் 2' படமும் ஜனவரியில் வருகிறது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீசாவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாடல்கள் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியாகிறது. விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் பொங்கலையொட்டி ஜனவரி 14–ந்தேதி வருகிறது. தொடர்ந்து கமலின் 'விஸ்வரூபம் 2' படத்தை ஜனவரி 26–ல் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

 'கோச்சடையான்' படம் 700 தியேட்டர்களில் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் விஜய், அஜீத் படங்களுக்கு தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் ஒரு படத்தை சில தினங்கள் தள்ளி ரிலீஸ் செய்யலாமா என்று யோசிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கமல் படமும் போட்டிக்கு வருவது வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். பெரிய படங்கள் 20 நாட்கள் வரை தியேட்டர்களில் ஓடுகின்றன. படம் ஹிட்டானால் 50 நாட்கள் வரை ஓட்டுகிறார்கள். எனவே ரஜினி, விஜய், அஜீத் படங்கள் ரிலீஸ் ஆனால் பிப்ரவரி மாதம் வரை அந்த படங்களையே திரையிட தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்வார்கள்.

 'விஸ்வரூபம் 2' படம் இடையில் ரிலீசாகும் போது 3 படங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தியேட்டர்களையே 'விஸ்வரூபம் 2' படத்துக்கும் பிரித்து கொடுக்க நேரும். இதனால் வசூல் பாதிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். நான்கு படங்களுக்கும் பாதிப்பு வராத வகையில் எவ்வாறு திரையிடுவது என்று ஆலோசனை நடக்கிறது.

சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்!

செய்தியாளர் : உங்களது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?
நடிகை : இப்போது இருப்பவரை விட சிறந்தவராக இருக்க வேண்டும்.

***

கோபு : நேத்து ஹோட்டல் வைத்திருப்பவர் வீட்டில் பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பாபு : அத ஏன் கேக்குறீங்க.. பொண்ண பாத்துட்டு புடிக்கலன்னு சொன்னதும், குடிச்ச டீக்குக் கூட பில் போட்டு கொடுத்துட்டாங்கண்ணா பாத்துக்கோங்களேன்.

***

ஒரு பொண்ணு போன எடுத்து எடுத்துப் பார்த்தா என்ன அர்த்தம்?
புதுசா காதலிக்கிறான்னு அர்த்தம்
 போன் வரும்போதெல்லாம் கட் பண்ணினா என்ன அர்த்தம்?
காதலன புடிக்கலன்னு அர்த்தம்
 பொண்ணு தலை குனிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்?
போன்ல மெசேஜ் ப்ரீன்னு அர்த்தம்.

***

பொண்ணுங்க போன பத்தி என்னடா நினைக்கிற…
ரூ.20 ஆயிரத்துக்கே போன வாங்கினாலும், அதுல மிஸ்டுகால் மட்டும்தான் கொடுப்பாங்கடா..

***

கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு…
ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.

***

என் பொண்டாட்டின்னா எனக்கு ரொம்ப பயம்.. நீங்க எப்படி?

அட போங்க நான் அவ்ளோ மட்டமில்லை. உங்க பொண்டாட்டிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.

***

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மருத்துவமனையில் அனுமதி!

 

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், காய்ச்சல் காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி ராஜாஜி மார்க்கில் இருக்கிறது அப்துல் கலாம் வீடு. வீட்டில் இருந்த அப்துல் கலாம், உடல்நலம் சரியில்லை எனக் கூறியதை அடுத்து அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் : அவருக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

ரத்த அழுத்தம், இதய செயல்பாடுகள் சீராகவே இருப்பதால் வேறு பிரச்சினை ஏதும் இல்லை. அவரை ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என தெரிவித்தனர்.

அண்மை காலமாக அதிக அளவில் பிரயாணங்களை அப்துல் கலாம் மேற்கொண்டிருந்ததாகவும், அதனால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிறப்பிலும் அவசரம் ஆண்களுக்கு!

 article-baby

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே உரிய காலத்துக்கு முன் பிறந்து விடுவதாக சமீபத்திய ஆய்வறிக்கை கூறுகிறது. பிரிட்டனில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 5,700 குழந்தைகள் இதுபோல் உரிய காலத்துக்கு முன் பிறப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய ஆய்வறிக்கையின் படி உரிய காலத்துக்கு முன் பிறக்கும் குறை பிரசவ குழந்தைகள் நோய்வாய்படுவத்ற்கும் சீக்கிரம் மரணம் அடையவும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் பள்ளியில் பேராசிரியர் ஜாய் நடத்திய ஆய்வில் இதுபோன்ற குறை பிரசவக் குழந்தைகள் மஞ்சல் காமாலை உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கு எளிதில் ஆட்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பெண் குழந்தைகளுக்கு  கருப்பையில் இருக்கும்போதே நுரையீரல் மற்ற உறுப்புகள் எல்லாம் வேகமாக வளர்ச்சி அடைந்து விடுவதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் படி பிரிட்டனில் கடந்த 2012ம் ஆண்டு 37 வாரங்களுக்கு முன்னதாக பிறந்த 34 400 ஆண்குழந்தைகளை மற்றும் 28,700 ஆண்குழந்தைகளிடம்  ஒப்பிடுகையில் 6000 ஆண் குழந்தைகளுக்கு பெருமூளை வாதம், பார்வை கோளாறு சுகாதார பிரச்சனை உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என பேராசிரிய லாவன் கூறினார். மேலும் குறைபிரசவம் என்பது  உலகம் முழுவது இருக்கும் பிரச்சனை எனவும் பிரிட்டனில் 7.8 சதவீதமும், அமெரிக்காவில் 5 சதவீதமும் குறைபிரசவ குழந்தைகள் பிறக்கிறது என்றும் தெரிவித்தார்.

பிரிட்டனில் ஆண்டுக்கு 28 வாரங்களுக்கு முன்னதாக பிறந்த குழந்தைகளில் 1,300 குழந்தைகள் இறந்துவிடுகிறது. உலக அளவில் 15.1 மில்லியன் குழந்தைகளுக்கு ஒரு மில்லியன் குழந்தை குறைபிரசவத்தில் பிறக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு குறை பிரசவ குழந்தைகள்  குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ரெட்டினோபதி தாக்கத்தால் குறைபிரசவ குழந்தைகளுக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. இந்த பார்வை இழப்பை தடுப்பதற்கு புற்றுநோய் மருந்து அவஸ்தின் உதவுகிறது. குறை பிரசவ குழந்தைகளின் கண்கள் முழுவளர்ச்சி அடைவதற்கு முன்னர் இம் மருந்து தரப்படும் பட்சத்தில் பார்வை இழப்பை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வு அறிக்கை நியூஇங்கிலாந்து ஜர்ன்ல் ஆப் மெடிசன் என்ற இதழில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top