தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்த்தால்...இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மைஅடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்சிலருக்கு இரும்பினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வுஅடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்சிறுநீரை அடக்க முடியாத நிலை.தன்னை அறியாமல் சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலைமலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி...
Sunday, 10 November 2013
தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டுமா?
தாய்ப்பால் அதிகம் சுரக்க எந்த வகையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று குழம்புவது இயல்பு. குழந்தை பிறந்த பின்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவு மற்றும் முக்கிய உணவாக இருப்பது தாய்ப்பால். குறைந்தது 6 மாதக் காலமாவது கண்டிப்பாக தாய்பாலை கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி. இதை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை எனலாம்.சிலருக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும். மனஅழுத்தம், தூக்கமின்மை, சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளாதது, உடல் வறட்சி என்று பல காரணங்கள் இருக்கும். தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால் தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது சத்துள்ள உணவு...
கர்பிணிகளுக்கு அவசியமாகும் பல் ஆரோக்கியம்!
கர்ப்ப கால ஆரோக்கியம் என்பது ஒரு தாயின் ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல், அவள் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தையும் சார்ந்த விஷயமாக இருப்பதால் அதற்கு அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.முதலில், கர்ப்பமுற்றிருப்பதாக ஒரு பெண்ணுக்குத் தெரிய வந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனைகளை செய்து கொள்வதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதும் அவசியம்.இது இல்லாமல், ஒரு சில விஷயங்களை கர்பிணிகள் கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும்.அதாவது, சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு முதலில் பல் சோதனை செய்து, ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாக சிகிச்சை...
முகம் கழுவுதலில் செய்யும் தவறுகள்!
பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம். தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்..பொதுவாக பெண்கள் அவர்களது சருமத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என தெரிந்து அதற்கேற்ற சோப்பு அல்லது முகம் கழுவும் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், வறண்ட சருமம் கொண்டவர்கள், எண்ணெய் பசை சருமத்துக்கு ஏற்ற சோப்புகளைப் பயன்படுத்தினால், சருமம் மேலும் வறண்டு போய்விடும். அதிலும், அதிக ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.அடிக்கடி முகம் கழுவக் கூடாதுபொதுவாகவே ஒரு நாளைக்கு ஒன்று அல்லது...
எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை!
இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன.
உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம். ஆக இந்த மாற்றங்களின் வீச்சு அதிகரிக்கும் போது பல்வேறு வேலை இழப்பு இருந்தாலும், புதிய புதிய துறைகளின் தோற்றமும், ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட தொழில்களில் அசுர வளர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் பணி புரியும் காலம் சராசரியாக 5 ஆண்டுகளாக உள்ளது.
இது இனியும் குறைவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. தொழிலின் தன்மையே மாறும் நிலையில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்ற போதும் ஒரே துறையில் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.மாற்றங்கள்...