நலவாழ்வில் ஒரு தலையாய பிரச்னை, எதிர்ப்பு மருந்துகளுக்கு (ஆண்டிபயாட்டிக்) கட்டுப்படாத தொற்றுநோய்ப் பெருக்கத்தால் ஏற்படும் உயிர் பலிகள் உலகத்தில் ஆண்டுதோறும் உயர்ந்து செல்வது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 30,000 மனிதர்கள் இறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம், எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் புதிய ஆய்வுகளோ, புதிய கண்டுபிடிப்புகளோ, புதிய முதலீடுகளோ அவ்வளவாக இல்லை.
ஐ.நா. உலக நலவாழ்வு அமைப்பு ஏற்கெனவே இதுகுறித்த எச்சரிக்கையில், “கூட்டு நோய் எதிர்ப்பு மருந்துகளால்கூட வெல்ல முடியாத சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால்,...
Tuesday, 5 November 2013
பெற்றோரே முதல் தெய்வம்..(நீதிக்கதை)

சரவணன்...எப்போதும் காலை எழுந்ததும் தன் பெற்றோர்களுக்குத் தேவையான
பணிவிடைகளை செய்த பின்னரே மற்ற வேலைகளைக் கவனிப்பான்.அதே நேரத்தில்
அவனுக்கு கடவுள் பக்தியும் அதிகமாக இருந்தது.
ஒரு நாள் இறைவன் அவனுக்குக் காட்சியளித்தார்......
அப்போது அவன் தன் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தான்.அப்பணியை பாதியில் நிறுத்திவிட்டு இறைவனைக் காண விரும்பவில்லை..
' இறைவா....எனக்காக சற்றுநேரம் பொறுங்கள்..பெற்றோர்களுக்கான என் தினசரி கடமையை முடித்துவிட்டு வருகிறேன் என்றார்.
இறைவனும் வீட்டுத் திண்ணையில் அவனுக்காக அமர்ந்திருந்தார்.
பின்னர் அவன் இறைவனிடம் வந்து ' தங்களை தாமதப்படுத்தியதற்கு மன்னியுங்கள் ; என்றான்....
ஆனால் இறைவன் மன மகிழ்ச்சியோடு...'சரவணா...இறைவனே...
நில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடிக்கை!
நில நடுக்கம் தற்பொழுது தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகி விட்டது. ரிக்கடர் அளவில் 6 மேல் ஏற்படும் போது அதிக இழப்பு ஏற்படுகிறது.நில நடுக்கம் பூகம்பம் வரும் முன் ஏற்படும் ஒரு முதல் அறிகுறியாக இருப்பதால் நில நடுக்கம் குறைந்த அளவாக உணரப்பட்டாலும் அதற்கு முக்கியதுத்துவம் கொடுத்து பாதுகாப்பு இடத்திற்கு செல்வது அவசியம் ஆகிறது.சில சமயங்களில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. பூமிக்கடியில் உள்ள 7 முக்கிய அடுக்குகளில் சில அடுக்குகள் லூசாக நகர்வதுண்டு அதுவே நில நடுக்கமாக உணரப்படுகிறது.சொல்லாமல் வரும் திடீர் விருந்தினராக வரும் நில நடுக்கம்:
இது எந்த உயிரையையும் கொல்வதில்லை எனபதுதான் உண்மை. பூகம்பத்தை தாக்கு பிடிக்கும் வகையில் கட்டபடாத கட்டிடங்களின் இடிபாடுகள் தான் பல உயிர்களின் இழப்புக்கு காரணமாக இருக்கிறது.எனவே நில நடுக்கம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில்...
வீட்டு உபயோகப் பொருட்களைப் பார்த்து வாங்க... பக்குவமாகப் பராமரிக்க...
வரவேற்பறையில் ஒரு மூங்கில் சோஃபா செட், பெட்ரூமில் நேர்த்தியான படுக்கை விரிப்புடன் இருக்கும் கட்டில், சமையலறையில் வரிசையில் அமர்ந்திருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், பாத்ரூமில் பேஸ்ட், பிரஷ்களை சுமக்கும் 'மிக்கி' வடிவ குட்டி பிளாஸ்டிக் கூடை..!ஆம்... இப்படி நம் வீட்டுப் பொருட்கள்தான் நம் பொருளாதார நிலைமை, ஒழுங்கு, ரசனை, விருப்பங்களை நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு தெரிவிக்கிற கண்ணாடி! அத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை தேர்ந்தெடுக்க... பராமரிக்க... டிப்ஸ்களை அடுக்கியுள்ளோம் இங்கே! உங்கள் வீட்டுப் பொருட்களின் அழகும் ஆயுளும் அதிகரிக்கட்டும்!'ஹவுஸ் கீப்பிங்'-ல் குட் வாங்க..! வீட்டில் உள்ள பொருட்களின் இடைவிடாத பரமாரிப்புதான் நம் சுத்தத்தையும், அழகியலையும் சொல்லாமல் சொல்லும். அதற்கு...1. வீட்டை அலங்கரிக்கும் 'ஷோ கேஸ்' பொம்மைகள் அல்லது பொருட்களை அடிக்கடி துடைத்துச் சுத்தப்படுத்தினால், அவை எப்போதும்...
குழந்தைச்செல்வம் என்பது வரம் தான்... என்பதற்கான காரணங்கள்!!!
தற்போது குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு குழந்தை செல்வத்தின் மகிமையைப் பற்றி பல பெற்றோர்கள் உணராமல் இருப்பதே காரணம்.வேலைக்காகவும், பிஸியான சமுதாயத்திற்காகவும், இப்படி பலவித காரணங்களுக்காகவும் குழந்தைகள் வேண்டாம் என்ற முடிவை பெற்றோர்கள் எடுத்து வருகின்றனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கை தரத்தை குறைக்கின்றது என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் வாழ்க்கை நிலையை உயர்த்தக் கூடியவர்கள். அதற்கான பல காரணங்களை நம்மால் கொடுக்க முடியும். அப்படிபட்ட முக்கியமானதாகவும், கவனிக்கக்கூடிய சில காரணங்களையும் பார்போமா!!!பொறுப்புணர்ச்சி
குழந்தைக்கு தாயாகும் முன் நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை. ஆனால் தாயான பின் பொறுப்புகள் மிக அதிகம். பொறுப்பான அம்மாவாக இருக்கும் பட்சத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வதை விட,...