பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்சை
தொடங்கியுள்ளார் நயன்தாரா. ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ என வரிசையாக படங்களில்
நடித்து முடித்துவிட்டார். தற்போது உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதல்’
என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தாலும் தனக்கேற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, சமீபகாலமாக நயன்தரா தோல் சம்பந்தமான பிரச்சினையால் பெரும் அவதிப்பட்டு வருகிறாராம். இதற்கு அதிகமாக மேக்கப் போடுவதுதான் காரணம் என்கிறார்கள். அசைவ உணவு சாப்பிட்டாலே இவரது தோல் அலர்ஜி பிரச்சினை அதிகமாகிவிடுகிறதாம். இதற்காக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறாராம். ஆயுர்வேத மருத்துவர்கள் நயன் தாரா கண்டிப்பாக ஆறு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், அவருடைய தோலில் சில மாதங்கள் சூரிய ஒளிபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். எனவே தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு நயன் தாரா ஆறுமாத காலம் கேரளாவில் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.
இதேபோல்தான் நடிகை சமந்தாவும் தோல் அலர்ஜி பிரச்சினையால் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை எல்லாம் இழந்து 3 மாதங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.