.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 4 November 2013

‘மனித-கணினி’ - சகுந்தலா தேவி!

Shakuntala Devi 

சகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: நவம்பர் 04, 1939

இடம்: பெங்களூர், கர்நாடகா

இறப்பு: ஏப்ரல் 21, 2013

பணி: கணிதமேதை, ஜோதிடர் 

நாட்டுரிமை: இந்தியா

பாலினம்: பெண்

பிறப்பு: 

இந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04  ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

சகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.

சகுந்தலா தேவியின் கணிதத் திறமை:

சகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779  = 18.947.668.177.995.426.462.773.730)  எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.

சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:

தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.

‘புக் நம்பர்ஸ்’,

‘பெர்ஃபெக்ட் மர்டர்’,


‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,


‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,


‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’


போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.

இறப்பு

சகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.

‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்.

Sunday, 3 November 2013

உங்கள் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழைய!













கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள் நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.



கணினி உலகில் அதிகபட்ச செக்யூரிட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது face recognition என்று சொல்லக்கூடிய முகத்தை வைத்து பயனாளரை கண்டுபிடிப்பது ஹாலிவுட் படங்களில் மட்டுமல்ல இனி நாமும் நம் முகத்தை காட்டி கணினிக்குள் நுழையலாம்.

இதற்காக பல மென்பொருட்கள் இருந்தாலும் சில நேரங்களில் நாம் உள் நுழைய முடிவதில்லை. ஆனால் அதிகமான மக்களின் பேராதரவோடு இந்த முயற்சியில் வெற்றி பெற்ற ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பெயர் பிலிங்.இலவசமாக கிடைக்கும் இந்த மென்பொருளை நம் கணினியில் இண்ஸ்டால் செய்துகொள்ள வேண்டியது தான். வெப்கேம் அல்லது மடிக்கணினியுடன் வரும் கேமிரா முன் நம் முகத்தை காட்ட வேண்டும் அவ்வளவுதான் இனி உள்ளே செல்லலாம்.

விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இதன் 32 பிட் மற்றும் 64 பிட் வெர்சனும் கிடைக்கிறது.மென்பொருளின் அளவு 8.3 MB தான். மென்பொருள் இயக்க 25 முதல் 30 MB வரை இடம் தேவைப்படுகிறது. கணினிக்கு முன் இருந்து கொண்டு நம் முகத்தை காட்டினால் போதும் உள்ளே செல்லலாம். புதுமை விரும்பிகளுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

மென் பொருளை தரவிறக்கம செய்ய download

“தமிழ் சினிமாவும் டபுள் ஆக்ஷன் படங்களும்”

தனக்கு பிடித்த நடிகர் இரட்டை வேடம் ஏற்று நடிக்கும் பொழுது ரசிகர்களுக்கு எப்போதும் டபுள் குஷி தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, சிவகுமார், ரஜினி , கமல், சரத்குமார்,விஜயகாந்த், அஜித், விஜய், சூர்யா இப்படி பல நடிகர்களும் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளனர் . இந்த படங்களும் தாறுமாறாக வெற்றிப் பெற்ற வராலாறு உண்டு. சரி தமிழ் சினிமாவின் டபுள் ஆக்ஷன் படங்கள் என்றால் பல படங்களை கூறலாம். ஆனால் , இப்படங்களின் துவக்கும் எது?? வாங்க ரீவைண்ட் செய்து பார்ப்போம் !!



nov 3 - cine


தமிழ் சினிமாவில் முதல் டபுள் ஆக்ஷன் படம் 1940ல் வெளிவந்தது. கிராபிக்ஸ், தொழில்நுட்பம் எதுவுமே பெரிதாக தலை நீட்டப்படாத அக்காலத்திலே இது சாத்தியமாக்கப்பட்டது. அக்காலத்திலே ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பிரேஷன் என்ற பெயரில் கதை ஊடுறவப்பட்டது தெரியுமா!!
சிவாஜி கணேசன் நடித்த முதல் இரட்டை வேடப்படத்திற்கும், தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடப் படத்திற்கும் தொடர்புள்ளதும், இரண்டு படத்திற்கும் ஒரு டைட்டில், ஒரே கதையும் கூட!! இது எல்லாம் ஆச்சரியம் என்று கூறுவதா இல்லை கோ-இன்ஸிடன்ஸ் என்று அழைப்பதா ??


டி.ஆர். சுந்தரம் பிரகாஷ் ராவ் வாக வடிவம் கண்ட கதையும் பிரகாஷ் ராவ் – முத்துராமன் – முத்துராமன் – சுபாஷ்ஷாக – சுபாஷ் – சிம்புதேவனாக வடிவம் கண்ட வரலாற்றுக் கதையும் உள்ளது தெரியுமா??


இதோ ஒரு சின்ன ப்ளாஷ் பேக் ‘யாரடி நீ மோகினி’ இந்த பாடலை கேட்டவுடன் சிங்கத்தின் கர்ஜனையுடன் செவாலிய சிவாஜி நம் கண்முன் தோன்றுவார். த்ரீ மஸ்கடீயர்ஸ் எழுதிய புகழ்பெற்ற ப்ரென்சு எழுத்தாளர் அலெக்ஸாண்டர் ட்யூகஸின் கை வண்ணத்தில் அமைந்த மற்றொரு புகழ் பெற்ற நாவலின் பகுதி தான் ‘தி மேன் இந்த அயர்ன் மாஸ்க்’.


இந்த நாவலின் கதைப்படி ராஜகுலத்தில் பிறந்த இரட்டையர்கள் தாய் மாமாவின் சதியால் பிரிக்கப்பட்டு ஒருவர் நல்லவராகவும் மற்றொருவர் கெட்டவராக வாழ, இறுதியில் கெட்டவன் திருந்தி அண்ணன் தம்பி இணைந்து மகுடம் சூடுவர். அக்காலத்திலே இக்கதைக்கு மவுசு அதிகம். 1940ஆம் ஆண்டு டி.ஆர். சுந்தரம் இயக்கி பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்த ‘உத்தம புத்திரன்’ படம் இக்கதையின் அடிப்படையில் அமைந்துள்ளது.


இதே கதை, இயக்குனர் ஸ்ரீதரின் திரைக்கதையில் 1958ஆம ஆண்டு உத்தம புத்திரன் என்ற அதே தலைப்புடன் வெளியானது. எப்படி தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன், சங்கமமாக உருவகம் கண்டதோ அதே போல் இவ் உத்தமபுத்திரனும் பல வடிவில் உருமாற்றம் கண்டது.


எஸ்.பி.முத்துராமன் இயக்கிய தூங்காதே தம்பி தூங்காதே கூட கிட்டத்தட்ட இதே கதை தான், என்ன இங்கே தாய்மாமன் கதாபாத்திரம் மேனேஜராக மாற்றம் கண்டது. பாலைய்யாவில் தொடங்கி நம்பியார், நெப்போலியன், நாசர் இப்படி பலர் இந்த தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


தமிழ் சினிமாவின் பல இரட்டை வேடப் படங்களை உத்தமபுத்திரனுடன் ஒப்பிடலாம். இக்கதையில் முக்கியமான அம்சமே கதாநாயகன் கதாபாத்திரத்தை விட வலுவாக அமைந்த தாய்மாமன் கதாபாத்திரம். இந்த சகுனி போன்ற சாதுர்யம் மிக்க மாமன் கதாபாத்திரம் வில்லனாக அமையப்பட்ட படங்களின் எண்ணிக்கை பெரிதல்ல.


இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் கதைக்களத்தை உத்தமபுத்திரனின் ஜெராக்ஸ் என்று கூறலாம். இதில் கூட ‘ஆடவா பாடவா’ என்று வடிவேல் பாடும் பாடல் ‘யாரடி நீ மோகினி’ சாயலிலேயே அமைந்திருக்கும். ‘உத்தம புத்திரன்’ அடிப்படையாக கொண்டு அமையப்பட்ட சத்யராஜ் நடித்த ‘பங்காளி’ திடமான கதை கூட அபத்த இயக்கத்தால் தோல்வியை தழுவும் என்பதை நிருபித்தது.


மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருப்பதை வரலாறு என்று அழைப்போம் நாற்பதுகளிலிருந்து – ஐம்பது – எண்பது- தொண்ணூறு ஏன் இரண்டாயிரமாம் ஆண்டிலும் கூறப்படுகின்ற இக்கதைக்களம் வரலாறு தானே!! வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே.

ஆன்லைனில் கன்னிதன்மையை விற்ற இளம்பெண் – ரஷ்யா அதிர்ச்சி!

ரஷ்யாவை சேர்ந்த சாதுனிகா என்ற பெண், பொருட்களை ஏலம் விடும் வலை தளம் ஒன்றில் ‘புதியது, முதல் முறையாக விற்பனைக்கானது’ என்ற பிரிவின் கீழ் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எனவே நான் எனது கன்னித்தன்மையை விற்பனை செய்ய தயாராக உள்ளேன்.



nov 3 - lady Russian-girl-


அதிக ஏலத்தில் எடுப்பவர்களுக்கு கன்னித் தன்மையை தர தயாராக இருக்கிறேன். இதற்கான மருத்துவ ஆவணங்களையும் பணத்தை நேரில் கொடுக்கும் போது காட்டுவேன்.ஏலத்தில் எடுப்பவர் என்னை பிரத்மோஸ்னியா சதுக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நாளை என்னை சந்திக்கலாம். அப்போது எனது கன்னித்தன்மையை பரிசோதித்த மருத்துவ சான்றிதழ்களையும் கொண்டு வருகிறேன்.


ஏலத்தில் வெற்றி பெற்றவர் யாராயினும் ரொக்க பணமாகவே கொண்டு வந்து தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதை பார்த்த பலர் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்றனர். பின்னர் எவ்கெனி வோல்னோவ் என்பவர் ரூ.18 லட்சத்துக்கு, இளம்பெண்ணின் கன்னித் தன்மையை ஏலம் எடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கன்னித்தன்மை ஏலம் விடுவதை சட்டரீதியாக தடுத்து நிறுத்த வழியில்லை. இது ஒரு நிர்வாக ரீதியான பிரச்னை. இதை குற்றமாக கருத முடியாது. மேலும் அவர்களை கண்டுபிடிக்கவும் இயலாது” என்றனர்.

Russian girl sells her virginity online for Rs. 18 lakhs


************************************


A Russian girl sold herself for Rs. 18.4 lakhs on the internet. However, the 18-year old did not reveal her identity. The ad displays her name as Shatuniya and tries to lure prospective buyers with telling them that she is `New and Not Used’.

சான்றோர் சிந்தனைகள்!

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

விளைவுகளை வைத்துதான் செய்லகளின் சிறப்பை மதிப்பிட முடியும்.




நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.

உனது அறிவு ஆற்றல் உனக்கு மட்டும் சொந்தம் அல்ல .பகிர்ந்து கொள்ளக்கூடியது.சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் அதனைப் பொதுவுடமையாக்கிவிட்டால்,தனிமனித தேவைகளும்,ஆடம்பர வாழ்க்கையும் குறைந்து போகும்.

---சாக்ரட்டீஸ்.


நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை.

---கிளார்க்

ஆர்வமில்லாத இடத்தில் புதுமைக்ள பிறப்பதில்லை

---டுஸ்டாவ் க்ராங்ஸ்மேன்.

எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;எவரையும் நம்பாமல் இருப்பதும் ஆபத்து.

---ஆபிரகாம் லிங்கன்.

மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை;
சென்றதை மறப்பது
நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
வருங்காலத்தைப் பற்றி சிந்துப்பது.
 
---இங்கர்சால்.


இருபது ஆண்டு வளர்ச்சி
இருபது ஆண்டு மலர்ச்சி
இருபதாண்டு மகிழ்ச்சி.
 
---கம்பர்

முதுமை வயதைப் பொறுத்தல்ல; உணர்ச்சியைப் பொறுத்தது

---நபிகள் நாயகம்

நல்ல உடைகளுக்கு எல்லைக் கத்வுகளும் திறக்கும்.

---தாமஸ் புல்லர்

எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பதைப் பற்றி உலகத்துக்குக் கவலையில்லை.கப்பலைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தாயா என்பது பற்றியே அதற்குக் கவலை.

------வில்லியம் மீக்லி.

அறிவுள்ள மனிதர்களோடு உரையாடு.அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.அனால் பண்பில்லாதவரைக் கண்டால் ஒதுங்கிவிடு.

----------லயட்கரின்

விழிப்புடன் செயலபட்டு வாழ்ந்து வருகிற எந்த ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கிவிடமுடியாது.

-----------லாலா லசபதிராய்

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top