.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 3 November 2013

சான்றோர் சிந்தனைகள்!

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

விளைவுகளை வைத்துதான் செய்லகளின் சிறப்பை மதிப்பிட முடியும்.




நல்ல நட்பு உன் உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும்.நட்பைத் தேடுவதில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.கிடைத்த நட்பை பொக்கிஷம் போல் பாதுகாத்துக்கொள்.

உனது அறிவு ஆற்றல் உனக்கு மட்டும் சொந்தம் அல்ல .பகிர்ந்து கொள்ளக்கூடியது.சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் அதனைப் பொதுவுடமையாக்கிவிட்டால்,தனிமனித தேவைகளும்,ஆடம்பர வாழ்க்கையும் குறைந்து போகும்.

---சாக்ரட்டீஸ்.


நடந்தால் நாடெல்லாம் உறவு படுத்தால் பாயும் பகை.

---கிளார்க்

ஆர்வமில்லாத இடத்தில் புதுமைக்ள பிறப்பதில்லை

---டுஸ்டாவ் க்ராங்ஸ்மேன்.

எல்லா மனிதர்களையும் நம்பி விடுவது ஆபத்து;எவரையும் நம்பாமல் இருப்பதும் ஆபத்து.

---ஆபிரகாம் லிங்கன்.

மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை;
சென்றதை மறப்பது
நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.
வருங்காலத்தைப் பற்றி சிந்துப்பது.
 
---இங்கர்சால்.


இருபது ஆண்டு வளர்ச்சி
இருபது ஆண்டு மலர்ச்சி
இருபதாண்டு மகிழ்ச்சி.
 
---கம்பர்

முதுமை வயதைப் பொறுத்தல்ல; உணர்ச்சியைப் பொறுத்தது

---நபிகள் நாயகம்

நல்ல உடைகளுக்கு எல்லைக் கத்வுகளும் திறக்கும்.

---தாமஸ் புல்லர்

எத்தனை புயல்களை நீ சமாளித்துக் கடந்தாய் என்பதைப் பற்றி உலகத்துக்குக் கவலையில்லை.கப்பலைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தாயா என்பது பற்றியே அதற்குக் கவலை.

------வில்லியம் மீக்லி.

அறிவுள்ள மனிதர்களோடு உரையாடு.அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.அனால் பண்பில்லாதவரைக் கண்டால் ஒதுங்கிவிடு.

----------லயட்கரின்

விழிப்புடன் செயலபட்டு வாழ்ந்து வருகிற எந்த ஒரு சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கிவிடமுடியாது.

-----------லாலா லசபதிராய்

இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது யார்?

200px-Algoretestifying 

இண்டெர்நெட் ஒரு தாயில்லா குழந்தை. அதாவது இண்டெர்நெட் எந்த ஒரு தனிநபராலோ , அல்லது எந்த ஒரு குழுவாலோ கண்டுபடிக்கப்படவில்லை. இண்டெர்நெட் கூட்டு முயற்சியின் பலன். ஆனால் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தது நான் தான் என்று அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் மார் தட்டி கொண்டது பற்றி உங்களுக்கு தெரியுமா? இதற்காக அவர் இணையத்தில் அவப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவது உங்களுக்கு தெரியுமா? இந்த இரண்டுமே தவறானது என்பது தெரியுமா?


இவற்றின் பின்னே உள்ள உண்மையை தெரிந்து கொள்வதன் மூலம் கொஞ்சம் இணைய வரலாற்றை தெரிந்து கொள்வோம்.


இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடியதாக சொல்லப்படும் அந்த அமெரிக்க தலைவர் முன்னாள் துணை அதிபர் அல்கோர். யாருமே கண்டுபிடித்திராத இண்டெர்நெட்டை நான் தான் கண்டுபிடித்தேன் என்று சொன்னால் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா? அதனால் தான் அல்கோர் இப்படி கூறியது  தொடர்பாக இணையத்தில் நிறைய நகைச்சுவை துணுக்குகள் உண்டு.


ஆனால் அல்கோர் அப்படி ஒருபோதும் கூறியது இல்லை . இண்டெர்நெட் உருவாக்கத்தில் தனது பங்களிப்பு பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களே இப்படி தவறுதலாக மேற்கோள் காட்டப்பட்டு மீண்டும் மீண்டும் தவறாக சுட்டிக்காட்டப்படுகிறது.


இந்த தகவலை ஆண்ட்ரூ பிலம் தான் எழுதியுள்ள , புதிய புத்தகமான Tubes: A Journey to the Center of the Internet -ல் தெளிவு படுத்தியுள்ளார்.


அல்கோரை இண்டெர்நெட்டை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், தற்போது நான் பயன்படுத்தும் வகையில் இண்டெர்நெட் உருவானதில் அவருக்கு முக்கிய பங்குண்டு. 1991ல், அதாவது வைய விரிவு வலை உருவாக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , இண்டெர்நெட்டை அதன் கல்வி நிறுவன வேர்களில் இருந்து விடுவித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தேவையான முக்கிய சட்ட மசோதாவை செனட் உறுப்பினராக இருந்த அல்கோர் கொண்டு வந்தார். இந்த மசோதா கோர் பில் என்றே குறிப்பிடப்பட்டது. இந்த மசோதா பற்றி அல்கோர் கூறிய கருத்துக்கள் தான் தவறான மேற்கோளின் விளைவாக , இண்டெர்நெட்டை கண்டுபிடித்ததாக கூறப்பட்டு விட்டது.


இதை தான் ஆண்ட்ரு பிலம் தனது புத்தகத்தில் தெளிவாக்கியுள்ளார்.



51KAE1XsOwL._SY344_PJlook-inside-v2,TopRight,1,0_SH20_BO1,204,203,200_


ஆனால் உண்மையிலேயே அல்கோருக்கு இணையம் உருவாகிய விதத்தில் முக்கிய பங்குண்டு என்பதை வின்செண்ட் பெர்பே அங்கீகரித்துள்ளார். செர்ப் வேறு யாருமல்ல இண்டெர்நெட்டின் தந்தை என்று போற்றப்படுபவர். இண்டெர்நெட்டின் அடைப்படை கட்டுமானத்தை உருவாக்கியதற்காக இப்படி பாராட்டப்படுபவர் செர்ப்.” இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு அதன் வளர்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உதவிய முதல் அரசியல் தலைவர்” என்று அல்கோரை செர்ப பாராட்டியுள்ளார். எங்களுக்கு தெரிந்த வரை வேறு எந்த அரசியல் தலைவரும் இணைய்த்தின் வளர்ச்சிக்கு இந்த அளவு பங்காற்றியதில்லை என்றும் அல்கோர் பற்றி அவர் கூறியுள்ளார்.


இண்டெர்நெட் வளர்ச்சிக்கும் ஆதரவு தெரிவித்ததோடு அது அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட வழி வகுத்ததாகவும் அல்கோர் பர்றி அவர் கூறியுள்ளார். செர்ப் பாராட்டுரையை இங்கே விரிவாக படிக்கலாம்.;
நிற்க ஸ்னோப்ஸ்.காம் என்று ஒரு இணையதளம் இருக்கிறது. இணையத்தில் உலாவுhttp://web.eecs.umich.edu/~fessler/misc/funny/gore,net.txtம் கட்டுகதைகளுக்கு பின்னே உள்ள உண்மைய விளக்கும் தளம் இது. பரவலாக உண்மை என்று கருதப்படும் இணைய பொய்கள் எப்படி உருவானது என தெளிவுபடுத்தி அதன் பின்னே உள்ள உண்மையையும் விளக்கும் தளம் இது. அல்கோர் இண்டெர்நெட்டை கண்டுபிடித்தாக சொல்லப்படும் தகவல் குறித்தும் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. அது இங்கே:http://www.snopes.com/quotes/internet.asp


ஆக, அல்கோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்ற தலைவராக மறக்கப்பட்டாலும், இணைய வரலாற்றில் அவருக்கு  முக்கிய இடம் உண்டு. பார்க்க அல்கோரும் இண்ட்நெர்நெட்டும்:  (http://en.wikipedia.org/wiki/Al_Gore_and_information_technology) . அல்கோர் பற்றி மற்றொரு தகவல், இணையத்தின் ஆற்றலை குறிக்கும் தகவல் நெடுஞ்சாலை பதத்தை உருவாக்கியவர் அவர் தான்.

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்யப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள Investigator மற்றும் Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

nov 3 - vazhikatti
 
மொத்த காலியிடங்கள்: 505

பணி மற்றும் மாநிலம் வாரியான காலியிடங்கள் விவரம்:

பணி: Investigator

மொத்த காலியிடங்கள்: 385

01. Punjab – 17

02. Chandigarh – 02

03. Haryana – 15

04. Delhi – 12

05. Rajasthan – 32

06. Gujarat: – 31

07. Daman & Diu – 01

08. Dadra & Nagar Havel – 01

09. Maharashtra – 54

10. Arunachal Pradesh – 06

11. West Bengal – 42

12. Orissa – 22

13. Uttar Pradesh – 90

14. Jharkhand -15

15. Bihar – 45

பணி
: Supervisors

மொத்த காலியிடங்கள்: 120

16. Chandigarh – 65

17. Kanpur -15

18. Kolkatta -15

19. Ahmedabad -15

20. Mumbai – 05

21. Guwahati – 05

வயதுவரம்பு
: 01.07.2013 தேதிப்படி 21 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
Investigator பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
Supervisors பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை
: தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை
: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.labourbureau.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:
Office of Director General, Labour Bureau, Ministry of Labour & Employment, Government of India, SCO:28-31, Sector – 17 A, Chandigarh

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
: விளம்பரம் கண்ட பத்து நாட்களுக்குள் விண்ணப்www.labourbureau.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய 
http://www.labourbureau.nic.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பாண்டிய நாடு – திரை விமர்சனம்..!

மருதை எப்பவோ தூங்கா நகரம்ங்கிறது போய குருதி நகரமாய் சினிமாவில் சித்தரிப்பது இது ஒன்றும் புதிதில்லை. அதனால் இந்த படத்த்துகு அது விதிவிலக்கல்ல. டை ரக்டர்கள்ள்ள் ஏற்கனவே சுட்ட தோசையின் மேல் காய்கறி வைத்து ஃபிரஷா செய்த பீஸா என்று கூறி தம்பட்டம் அடித்து கொல்லுவது ஒன்றும் புதிதல்ல. வழக்கம் போல மதுரையின் கட்ட பஞ்சாயத்து செய்து சமீபத்தில் மாய்ந்த பொட்டு சுரேஷின் கதை தான் இந்த படம். ஆனாலும் இந்த படம் இதே இயக்குனர் கைவண்ணத்தில் வந்த ” நான் மகான் அல்ல” (2010)ன் படத்தை அப்படியே தூசி தட்டி 2013ல் பாண்டிய நாடு என்று ரீமேக் ஸ்டோரிக்கே ரீமிக்ஸ் செய்திருக்கிறார்.



nov 3 - ravi pandiya nadu


இந்த படமும் அந்த படமும் ஒரே கதை ஒரே மேனரிஸம் கொண்ட சராசரி ஹீரோக்கள். அதில் அப்பா பனால் இதில் அண்ணன் பனால். அங்கே ஆரம்பிக்கும் பழி வாங்கும் படலம் இங்கும் அதே மாதிரி – அட ஹீரோ கையில் எடுத்து புள புளன்னு புளக்கும் ஆயுதம் கூட அதே ஆயுதம்னா பார்த்துக்கோங்க.
படத்தில் முக்கியமாய் மூன்று விஷயம்……….


வழக்கம் போல் விஷால் சலம்ப விடாமால் அவரை கட்டுக்குள் வைத்து அவருக்கு ஏற்ற மாதிரி நடிக்க வைத்தது.


பாரதிராஜாவை பொறுப்பள்ள அப்பாவாய் நடிக்க இல்லை வாழ வைத்தது.
17 சீன்களில் வரும் சும்மாங்காச்சி சேர நாட்டின் ஹீரோயின். ஃபைவ் ஃபைவ் ஃபைவ் பாட்டுக்கு போடும் ஆட்டம் உண்மையில ஒரு நல்ல டான்சர் என நிருபித்த கோரியகிராஃபர்.


18 வயசு கூட ஆகாத ஹீரோயினை டீச்சராய் நடிக்க வைக்கிறேன்னு காட்டன் புடவை கொடையை கொடுத்து கொஞ்சமும் பொருத்தமில்லாத ஹீரோயின். படம் முழுக்க வில்லன்கள் ஒரு மாறுதலாய் சுமோ / டவேரா போய் ஹைடெக் டொயோட்டா பார்ட்ச்சுனா வச்சுகிட்டி சர்ரு புர்ருனு போயிட்டு வர்ர சீன் தான் அதிகம். எல்லோரும் சாமியை காட்டி ஒப்பனிங் சீன் வைக்கிறாங்க நான் புதுமையா சாவு வீட்ல ரேப் பாடி ஆரம்பிச்சி வச்சு / இன்டர்வல்ல ஒரு சாவு அப்புறம் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு டசன் சாவுன்னு சும்ம்மா சாவடி, படத்தில் சுமார் ஒரு சென்ச்சூரி கொலைகள் நடக்கிறது.


 சந்தானம் இல்லாமல் புரோட்டா சூரியை வைத்து பர்கர் காமெடியாய் ரென்டு ரொட்டி துன்டுக்கு நடுவே கொஞ்சமும் வேகாத இறைச்சி போல. விக்ராந்த எதுக்கு வர்ரார்ர்னு தெரியவே இல்லை. அழகர் சாமி குதிரை ஹீரோயினும் எதுக்கு இந்த படத்தில் வர்ரார்னு தெரியலை ஆனா இயக்குனர்கள் சிலர் எல்லா படத்திலும் தன் ஃபேவரட் ஆர்ட்டிஸ்ட்டை வைத்து தான் எடுப்பது தமிழ் படத்தின் விதி.


விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தக்காளி சாஸ் படம் எடுப்பதை நிறுத்தினால் தான் கொஞ்சம் நாளைக்கு இன்டஸ்ட்ரியில் இருக்கலாம். பாண்டிய நாடு – பன்டல் நாடு – போகும் போது ஒரு அரைக்கிலோ பஞ்சை எடுத்து போனால் கால் கிலோ ரென்டு காதுக்கும் கால் கிலோ ரெண்டு கண்ண்ணூக்கு வைத்து நல்லா ஏசில குற்ட்டை விட வசதி இல்லைனா ரெண்டு துண்டு பஞ்சி மூக்கில வச்சி நம்ம கண்ணீர் அஞ்சலிக்கு கியாரன்டி.

க்ரிஷ்-3 – திரை விமர்சனம்!

மும்பையில் வாழும் ஹிருத்திக் ரோஷன் மனநலம் குன்றியவராக இருக்கிறார். பெரியவனாக வளர்ந்தபின்னும் மனதளவில் அவர் குழந்தையாகவே இருக்கிறார். இந்நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்கு வரும் வேற்றுக்கிரக வாசிகள் இவருக்கு ஒரு அதீத சக்தியை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதனால், இவருடைய மூளை அதிக சக்தி பெற்று அறிவார்ந்தவராக மாறுகிறார்.

இதையடுத்து, அவருக்கு திருமணமாகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. இந்நிலையில் ஆராய்ச்சிக்காக ஹிருத்திக் ரோஷனை அவருடைய தந்தை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். மும்பையில் அவரது குழந்தை ஹிருத்திக் ரோஷனாகவே வளர்கிறது.

அதிக சக்தி கொண்ட இக்குழந்தை க்ரிஷ் ஆக உருவெடுக்கிறான். இந்நிலையில், சிங்கப்பூர் சென்ற அப்பா ஹிருத்திக் ரோஷன் டி.என்.ஏ.விலிருந்து ஒரு குழந்தையை ஆராய்ச்சிக்காக அவருடைய அப்பா உருவாக்குகிறார். இது முழுமையாக வெற்றியடையாமல் கை, கால் செயலிழந்து, மூளை மட்டும் அதீத வளர்ச்சியுடன் வளர்கிறது. இவர்தான் விவேக் ஓபராய்.

இந்நிலையில், தனது அதிக சக்தி படைத்த மூளையினால் விவேக் ஓபராய், செயலிழந்த தன்னுடைய கை, கால்களை செம்மைப்படுத்த பல ஆராய்ச்சிகளை செய்கிறார். இதனால், மிருகமும், மனிதனும் கலந்த மனிதர்கள் நான்கு பேரை உருவாக்குகிறார். அதில் ஒருவர்தான் கங்கனா ரனாவத்.

தன்னுடைய ஆராய்ச்சியில் உருவாக்கிய மனிதர்கள் மூலம் விஷக்கிருமிகளை நாடு முழுவதும் பரப்பி, அதற்கு மாற்று மருந்து தயாரித்து அதன்மூலம் பணத்தை சம்பாதிக்க முடிவு பண்ணுகிறார் விவேக் ஓபராய். இதனால் மக்கள் பல பேர் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு காரணம் விவேக் ஓபராய்தான் என்பதை கண்டறியும் கிரிஷ், விவேக் ஓபராயை அழித்து மக்களைக் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

ஹிருத்திக் ரோஷன் முந்தைய படங்களில் நடித்ததைவிட இந்த படத்தில் ரொம்பவும் ஆக்ரோஷமாக நடித்துள்ளார். இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். மனைவியிடம் அன்பு காட்டும் சிறந்த கணவனாகவும், மகன்மீது பாசம் காட்டும் பண்புள்ள தந்தையாகவும், மக்கள் மீது பரிவு காட்டும் க்ரிஷாகவும் ஜொலித்திருக்கிறார். இவருடைய உடலமைப்பு ஹாலிவுட்டுக்கு இணையான நாயகன் என்பதை வெளிக்காட்டுகிறது.

கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா, விவேக் ஓபராய் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கின்றனர். குறிப்பாக விவேக் ஓபராய், கங்கனா ரனாவத் ஆகியோரின் திறமையான நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

இயக்குனர் ராகேஷ் ரோஷன் திறமையான கதையமைப்பில் உருவான இப்படம் ஆங்கிலப் படத்துக்கு விட்டிருக்கும் சவால். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைந்த விதம் அருமை. ஹாலிவுட் தரத்துக்கு இணையாக படத்தை எடுத்திருக்கிறார். திரைக்கதையிலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘க்ரிஷ்-3’ தீபாவளி டிரீட்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top